For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு 'இந்த' அறிகுறிகள் இருந்தா... உயர் அழுத்தத்தோட ஆபத்தான நிலையில இருக்கீங்களாம்...ஜாக்கிரதை!

உயர் இரத்த அழுத்தம் உங்கள் இரத்த நாளங்களில் இயல்பை விட அதிக அளவு அழுத்தம் இருப்பதால் வகைப்படுத்தப்படுகிறது. இரத்த அழுத்த கண்காணிப்பு இயந்திரத்தில் தோன்றும் சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் எண் மூலம் இது மதிப்பிடப்படுகிறது.

|

உயர் இரத்த அழுத்தம் என்பது நாள்பட்ட சுகாதார நிலை பிரச்சனையாக உள்ளது. இது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இன்றைய நாளில் பெரும்பாலான மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர் இரத்த அழுத்தம் ஒரு பரவலான சுகாதார சிக்கலாக இருந்தாலும், இந்தியாவில் 70 சதவீத வழக்குகள் கண்டறியப்படாமல் உள்ளன. இந்நோய் பற்றிய காரணங்கள் மற்றும் ஆபத்து காரணிகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது ஒரு காரணம். குறிப்பாக கிராமப்புற மக்களிடையே குறைந்த சிகிச்சை விகிதங்களுக்கு மேலும் தந்திரமாகி, மக்களை உயிருக்கு ஆபத்தான நிலைமைகளுக்கு ஆளாக்குகிறது. முதன்மை மற்றும் இரண்டாம் நிலை - உயர் இரத்த அழுத்தத்தில் இரண்டு வகைகள் உள்ளன என்பது பலருக்குத் தெரியாது.

Secondary hypertension: Know what it is and who are at risk in tamil

முதன்மை உயர் இரத்த அழுத்தம் என்பது மோசமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் அல்லது குடும்ப வரலாற்றின் காரணமாக ஏற்படும் பொதுவான ஒன்றாகும். அதே நேரத்தில் இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் பொதுவாக மற்ற மருத்துவ நிலைமைகளின் விளைவாகும். உயர் இரத்த அழுத்தத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் சுமார் 10 சதவிகிதம், இது பெரும்பாலும் கண்டறியப்படாமல் போகும். இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்படி மதிப்பிடப்படுகிறது?

எப்படி மதிப்பிடப்படுகிறது?

உயர் இரத்த அழுத்தம் உங்கள் இரத்த நாளங்களில் இயல்பை விட அதிக அளவு அழுத்தம் இருப்பதால் வகைப்படுத்தப்படுகிறது. இரத்த அழுத்த கண்காணிப்பு இயந்திரத்தில் தோன்றும் சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் எண் மூலம் இது மதிப்பிடப்படுகிறது.

இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம்

இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம்

இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் என்பது அறியப்பட்ட நோய் அல்லது நோயாளி நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையின் விளைவாக ஏற்படுகிறது. இந்த வகை உயர் இரத்த அழுத்தம் முதன்மை உயர் இரத்த அழுத்தத்திலிருந்து பல வழிகளில் வேறுபடுகிறது. இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தத்திற்கான சரியான சிகிச்சையானது அடிப்படை சுகாதார நிலையைக் கட்டுப்படுத்தவும், உடல்நலம் தொடர்பான சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

முதன்மை உயர் இரத்த அழுத்தத்தைப் போலவே, இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தமும் நுட்பமான அறிகுறிகளைக் கொண்டுள்ளது. ஆபத்தான நிலையை எட்டினாலும், அதில் கவனமாக இல்லையென்றால் கண்டறிவது கடினம். உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டால், இந்த பொதுவான அறிகுறிகள் உங்களுக்கு இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் இருப்பதைக் குறிக்கிறது:

  • இரத்த அழுத்த மருந்துகளால் சமாளிக்க முடியாத நிலை
  • மிக உயர் இரத்த அழுத்தம்
  • இளம் வயதிலேயே திடீரென ஏற்படும் உயர் ரத்த அழுத்தம்
  • உயர் இரத்த அழுத்தத்தின் குடும்ப வரலாறு
  • உடல் பருமன்
  • இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தத்திற்கான காரணங்கள்

    இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தத்திற்கான காரணங்கள்

    பல நாள்பட்ட நிலைமைகள் உங்கள் இரத்த அழுத்த அளவை அதிகரிக்கச் செய்யலாம். உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பது மற்ற அடிப்படை சுகாதார நிலைகளின் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவும். ஒருவருக்கு இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான சில காரணங்களை விரிவாக கீழே காணலாம்.

    நீரிழிவு நோய்

    நீரிழிவு நோய்

    நிர்வகிக்கப்படாத நீரிழிவு இரத்தத்தில் இருந்து சர்க்கரையை வெளியேற்ற சிறுநீரகத்தின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த நிலை காலப்போக்கில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம்.

    பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய்

    பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய்

    உங்கள் சிறுநீரகங்களில் உள்ள நீர்க்கட்டிகள் சிறுநீரகத்தின் இயல்பான செயல்பாட்டைத் தடுக்கலாம். இது இரத்த அழுத்த அளவை அதிகரிக்க வழிவகுக்கும்.

    ரெனோவாஸ்குலர் உயர் இரத்த அழுத்தம்: உங்கள் சிறுநீரகங்களுக்கு செல்லும் தமனிகள் சுருங்கும்போது இந்த வகை உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

    குஷிங் சிண்ட்ரோம்

    குஷிங் சிண்ட்ரோம்

    குஷிங் சிண்ட்ரோம் என்பது ஒரு ஹார்மோன் கோளாறு ஆகும். இது உடலில் உள்ள ஹார்மோன் கார்ட்டிசோல் சமநிலையின்மையின் காரணமாகவே ஏற்படுகறது. நீண்ட காலமாக அதிக கார்டிசோல் அளவு குஷிங் நோய்க்குறிக்கு வழிவகுக்கும் மற்றும் அதன் மருந்துகள் இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

    ஹார்மோன் கோளாறு

    ஹார்மோன் கோளாறு

    தைராய்டு கோளாறு அல்லது ஆல்டோஸ்டெரோனிசம் உங்கள் சிறுநீரகத்தையும் பாதிக்கலாம். இதனால் உங்கள் இரத்த அழுத்த அளவு அதிகரிக்கலாம்.

    ஸ்லீப் மூச்சுத்திணறல்

    ஸ்லீப் மூச்சுத்திணறல்

    தூக்கத்தின் போது கடுமையான குறட்டை, போதுமான அளவு ஆக்ஸிஜனைப் பெறுவதில் தடையை ஏற்படுத்துகிறது, இது இரத்தக் குழாயின் உட்புறத்தை சேதப்படுத்தும், இது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இவை தவிர உடல் பருமன், கர்ப்பம் மற்றும் சில ஓவர்-தி-கவுன்டர் மருந்துகளை அதிகமாக உட்கொள்வது போன்ற பிற நிலைமைகளும் இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

    சிகிச்சை

    சிகிச்சை

    உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிப்பதற்கு, இரத்த அழுத்த அளவை அதிகரிக்கும் அடிப்படை நிலைக்கு முதலில் சிகிச்சையளிக்கப்பட வேண்டும். அடிப்படை நிலைக்கு சிகிச்சையளிக்கப்பட்டவுடன், இரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்பும். உங்கள் நிலையைப் பொறுத்து, உங்கள் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த மருந்து, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் பிற சிகிச்சை விருப்பங்களை மருத்துவர் பரிந்துரைப்பார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secondary hypertension: Know what it is and who are at risk in tamil

Here we are talking about the Secondary hypertension: Know what it is and who are at risk in tamil.
Story first published: Thursday, March 10, 2022, 16:56 [IST]
Desktop Bottom Promotion