Latest Updates
-
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க..
ஆண்களே! உடலுறவில் ஆர்வம் குறைந்துவருகிறதா? உங்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுவதற்கு இவைதான் காரணமாம்!
மோசமான உணவு, உடற்பயிற்சியின்மை, புகைபிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு ஆகியவை குறைந்த பாலியல் செயல்பாடுகளுக்கு பங்களிக்கும்
இன்றைய நாளில் தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தி இல்லமால் இருப்பது தம்பதிகளிடையே இருக்கும் மிக முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு தம்பதிகளில் ஒருவருக்கு உடலுறவில் ஈடுபடுவதற்கு ஆர்வம் இல்லாமல் இருக்கலாம் அல்லது ஆர்வம் குறைந்திருக்கலாம். இதனால், மகிழ்ச்சியான பாலியல் வாழ்க்கை அமையாமல் கவலையடையலாம். ஒவ்வொரு ஐந்து ஆண்களில் ஒரு நபர் மன அழுத்தம் அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்ற பல்வேறு காரணங்களால் குறைந்த லிபிடோ பிரச்சனையை எதிர்கொள்கிறார். இதனால் அவர்களால் எந்தவிதமான பாலியல் செயல்பாடுகளிலும் ஈடுபட முடியாமல் தவிர்க்கிறார்கள். இருப்பினும், சில நேரங்களில் பாலியல் ஆர்வத்தில் இழப்பு ஏற்படுவது சாதாரணமாக இருந்தாலும், முக்கியமான பிரச்சினையின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

ஆண்களின் பாலியல் ஆசை குறைவதற்கு அடிக்கடி மன அழுத்தம், குடிப்பழக்கம், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சோர்வு ஆகியவை காரணமாக இருக்கலாம். ஆண்கள் குறைந்த செக்ஸ் டிரைவ் பிரச்சனையை சந்திப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

மனஅழுத்தம்
அதிகளவு மன அழுத்தம் டெஸ்டோஸ்டிரோன் அளவை பாதிக்கும் மற்றும் செக்ஸ் டிரைவை குறைக்கும். ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையால் அதிக கவலைடையந்தாலோ அல்லது கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானாலோ, அவரது பாலியல் ஆசை மற்றும் செயல்பாடுகள் குறைகிறது. மேலும், மன அழுத்தம் உங்கள் மொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

ஹார்மோன் சமநிலையின்மை
டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவது போன்ற பிரச்சனைகள், ஆண்களின் செக்ஸ் டிரைவ் குறைவதற்கு வழிவகுக்கும். ஹைபோகோனாடிசம் உள்ள ஆண்கள் 300 ng/dl க்கும் குறைவாக மதிப்பிடப்பட்ட குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவுகளின் பிரச்சனையுடன் போராடுவதில் உறுதியாக உள்ளனர். அத்தகைய ஆண்கள் எந்தவொரு பாலியல் செயல்பாடுகளிலும் ஆர்வமில்லாமல் இருப்பார்கள். இது அவர்களின் பாலியல் வாழ்க்கையை முற்றிலும் பாதிக்கும்.

மருந்துகள்
சில மருந்துகள் ஆண்டிடிரஸண்ட்ஸ் மற்றும் இரத்த அழுத்த மருந்துகள் போன்றவை பாலியல் ஆசையை குறைக்கும் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சைகள் அல்லது கீமோதெரபி எடுத்துக் கொள்ளும் ஆண்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற அனபோலிக் ஸ்டெராய்டுகளை உட்கொள்பவர்களுக்கு பாலியல் ஆசை மற்றும் ஆர்வம் குறைவதாக கூறப்படுகிறது.

மோசமான வாழ்க்கை முறை பழக்கம்
மோசமான உணவு, உடற்பயிற்சியின்மை, புகைபிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு ஆகியவை குறைந்த பாலியல் செயல்பாடுகளுக்கு பங்களிக்கும். மேலும், சரியான தூக்கம் மற்றும் ஓய்வு எடுக்கவில்லை என்றால், அது உடலில் பிரச்சனைகளை உருவாக்குகிறது மற்றும் குறைந்த செக்ஸ் டிரைவை ஏற்படுத்துகிறது.

உறவுச் சிக்கல்கள்
உறவுகளில் சிக்கல் ஏற்படுவது சாதாரணம். ஆனால், அது தம்பதிகளை எந்தளவிற்கு பாதிக்கிறது என்பது முக்கியம். தொடர்பு கொள்வதில் சிக்கல்கள் அல்லது தீர்க்கப்படாத மோதல்கள் போன்ற துணையுடனான சிக்கல்கள் பாலியல் ஆசையைக் குறைக்கலாம். உறவில் எப்போதும் சிக்கல் மற்றும் பிரச்சனை இருந்தால், பாலியல் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படும். பிரச்சனைகளுக்காக தீர்வுகளை உடனே நாட வேண்டும், தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

ஆண்களில் குறைந்த செக்ஸ் டிரைவிற்கான தீர்வு
உடற்பயிற்சி, தியானம் மற்றும் யோகா போன்றவற்றின் மூலம் மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான வழிகளைக் கண்டறிவது, செக்ஸ் டிரைவை மேம்படுத்த உதவும். புகைபிடிப்பதை நிறுத்துதல், சீரான உணவு உண்ணுதல், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டைக் குறைத்தல் போன்ற ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் உங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்த உதவும்.

இறுதி குறிப்பு
டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருந்தால், ஹார்மோன் மாற்று சிகிச்சை தேவைப்படலாம். தொடர்புச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் மோதல்களைத் தீர்ப்பதற்கும் உங்கள் துணையுடன் பேசுவது பாலியல் ஆசையை மேம்படுத்த உதவும். மருந்தின் பக்க விளைவுகள் காரணமாக உங்களுக்கு பாலியல் ஆசை குறைந்தால், மருத்துவரின் பரிந்துரைப்படி வேறு மருந்துக்கு மாறுங்கள்.



Click it and Unblock the Notifications