Latest Updates
-
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க..
அடிக்கடி தலைசுத்துதா? இதோ அதைத் தடுக்கும் சில வீட்டு வைத்தியங்கள்!
வெர்டிகோ என்னும் தலைச்சுற்றல் ஒரு நோய் அல்ல. ஆனால் அது ஒரு அறிகுறி. வழக்கமாக தலைச்சுற்றலானது குமட்டல், வாந்தி, சமநிலை இழப்பு காதுகளில் ஒருவித சப்தம், காது அடைப்பு போன்ற பிற அறிகுறிகளுடன் சேர்ந்திருக்க
வெர்டிகோ என்னும் தலைச்சுற்றல் ஒரு நோய் அல்ல. ஆனால் அது ஒரு அறிகுறி. வழக்கமாக தலைச்சுற்றலானது குமட்டல், வாந்தி, சமநிலை இழப்பு காதுகளில் ஒருவித சப்தம், காது அடைப்பு போன்ற பிற அறிகுறிகளுடன் சேர்ந்திருக்கும். காதுகளின் உட்புறத் தளத்தில் அரைக்கோள கால்வாய்களில் ஓட்டோலித்ஸ் எனப்படும் கால்சியம் துகள்களில் ஏற்படும் இடையூறு காரணமாக ஒருவருக்கு தலைச்சுற்றல் அல்லது வெர்டிகோ ஏற்படலாம். பெரும்பாலும் இம்மாதிரியான பிரச்சனை தீங்கற்ற பராக்ஸிஸ்மல் பொசிஷனல் வெர்டிகோ (பிபிபிவி) என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது வயதானவர்களிடையே மிகவும் பொதுவானது.

வெர்டிகோவுக்கு வழிவகுக்கும் பிற பிரச்சனைகளாவன மெனியர் நோய், வெஸ்டிபுலர் நியூரோனிடிஸ், தலையில் காயம் மற்றும் ஒற்றைத் தலைவலி போன்றவை. சில சமயங்களில் மூளை அல்லது நரம்புகளில் உள்ள பிரச்சனைகள் அல்லது சில மருந்துகளின் பக்க விளைவுகளாலும் ஏற்படக்கூடும். சில நேரங்களில் வெர்டிகோ ஒரு குறிப்பிட்ட காலத்தில் சரியாகிவிடும். ஆனால் சில நேரங்களில் நிபுணரால் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை கூட தேவைப்படலாம். வெர்டிகோ பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற சில வீட்டு வைத்தியங்களும் உள்ளன. இருப்பினும், அவற்றை மேற்கொள்ளும் முன், உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

லெமன் பாம் இலைகள்
லெமன் பாம் இலைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் உள்ளன. இது கவலை, மனச்சோர்வு, உயர் இரத்த அழுத்தம், ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை, பதற்றம் மற்றும் வெர்டிகோ போன்ற பல பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் மூலிகை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் உலர்ந்த லெமன் பாம் இலைகளை சேர்த்து 10-15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு சில முறை என சில வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இஞ்சி
இஞ்சி மூளையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவி புரிந்து, குமட்டல் மற்றும் வெர்டிகோ சம்பந்தமான பிரச்சனைகளான மலச்சிக்கல் பிரச்சனை மற்றும் ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்லலாம் அல்லது இஞ்சி டீ தயாரித்தும் குடிக்கலாம்.

மல்லி விதைகள்
வெட்டிகோ பிரச்சனைக்கான மிகவும் பிரபலமான ஒரு ஆயுர்வேத நிவாரணப் பொருள் தான் மல்லி விதைகள். ஒரு டீஸ்பூன் மல்லி விதை மற்றும் ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியை ஒரு டம்ளர் நீரில், இரவு தூங்கும் முன் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வடிகட்டி அந்நீரைக் குடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

ஏலக்காய்
ஏலக்காயில் இஞ்சியைப் போன்றே ஏராளமான ஆரோக்கிய பண்புகள் நிறைந்துள்ளன மற்றும் இது வெர்டிகோவிற்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது. 2 டீஸ்பூன் நல்லெண்ணெயில், 1 1/2 டீஸ்பூன் பட்டை பொடி மற்றும் 1 1/2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து வெதுவெதுப்பாக சூடேற்றி, அந்த எண்ணெயை தலையில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, சில மணிநேரம் ஊற வைக்கவும். இப்படி ஒரு வாரத்திற்கு பல முறை என சில வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால், வெர்டிகோவில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

துளசி
காரத்தன்மை கொண்ட துளசி இலை நல்ல மணத்தையும் கொண்டதால், இது தலைச்சுற்றல் மற்றும் வெர்டிகோவில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு 3-4 துளசி இலைகளை ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த பாலை இரவு தூங்கும் முன் குடிக்க வேண்டும். இப்படி சில வாரங்கள் குடித்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.



Click it and Unblock the Notifications
