Latest Updates
-
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்!
அடிக்கடி சந்திக்கும் மலச்சிக்கல், செரிமான பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்லணுமா? அப்ப இந்த ஜூஸை குடிங்க...
பப்பாளி இலையில் பாப்பைன் மற்றும் சைமோபாப்பைன் போன்ற நொதிகள் நிறைந்துள்ளன. இந்த நொதிகள் செரிமானத்திற்கு உதவி, வயிற்று உப்புசம் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளைத் தடுக்கிறது.
பொதுவாக வெப்பமண்டல பகுதிகளில் வளர்க்கப்படும் பப்பாளி, அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் பழங்களில் ஒன்றாகும். மஞ்சள்-ஆரஞ்சு நிறங்கள் கொண்ட பப்பாளி பழம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவையான ஊட்டச்சத்துக்களைத் தன்னுள் கொண்டது. மேலும் இதில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் உள்ளன. இத்தகைய பப்பாளி செடியின் ஒவ்வொரு பகுதியும் பயன்படுத்த ஏற்றது.

பப்பாளி பழத்தைத் தவிர, பப்பாளி செடியில் அதிகம் பயன்படுத்தப்படும் ஓர் பகுதி என்றால் அது அவற்றின் இலை தான். நாட்டு மருத்துவத்தில் பப்பாளி இலை இரத்த ப்ளேட்லேட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. பப்பாளி இலையில் பாப்பைன் மற்றும் சைமோபாப்பைன் போன்ற நொதிகள் நிறைந்துள்ளன. இந்த நொதிகள் செரிமானத்திற்கு உதவி, வயிற்று உப்புசம் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளைத் தடுக்கிறது. இதில் உள்ள அல்கலாய்டு கலவை பொடுகு மற்றும் வழுக்கைக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது.
முக்கியமாக இந்த இலைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் பி போன்றவை அதிகம் உள்ளன. இத்தகைய பப்பாளி இலையை தேநீர், சாறுகள், பழச்சாறுகள் மற்றும் மாத்திரைகள் என எந்த வடிவிலும் எடுக்கலாம். இப்போது பப்பாளி இலை சாற்றினை குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதை தயாரிக்கும் முறையைக் காண்போம்.

டெங்கு அறிகுறிகளைப் போக்கும்
பப்பாளி இலைச் சாறு டெங்கு காய்ச்சலுடன் தொடர்புடைய அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. காய்ச்சல், சோர்வு, தலைவலி, குமட்டல், சரும அரிப்பு மற்றும் வாந்தி போன்றவை டெங்குவின் பொதுவான அறிகுறிகளாகும். ஆரம்பத்திலேயே டெங்கு அறிகுறிகளை அனுபவிக்கும் போதே சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், அது ப்ளேட்லெட்டுகளின் அளவைக் குறைத்து, இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிவிடும். தற்போது டெங்குவிற்கு சிகிச்சை ஏதும் இல்லை. பப்பாள் இலைச் சாறு தான் இதற்காக பயன்படுத்தப்படும் பொதுவான சிகிச்சை முறையாகும். டெங்குவால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களை உள்ளடக்கிய மூன்று ஆய்வுகளில், பப்பாளி இலைச் சாறு இரத்த பிளேட்லெட் அளவை வெகுவாக அதிகரிக்க உதவுவது என்று கண்டறியப்பட்டது.

இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்தும்
இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துவதற்கும், சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்கவும் பப்பாளி இலைச்சாறு ஒரு இயற்கை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளில், பப்பாளி இலைச் சாற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் விளைவுகள் நிறைந்துள்ளது கண்டறியப்பட்டது. இச்சாறு கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள் சேதம் மற்றும் அகால மரணம் அடைவதில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. ஆனால் இதுக்குறித்து எந்த ஆராய்ச்சியும் மனிதர்கள் மீது நடத்தப்படவில்லை.

செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கும்
பப்பாளி இலையாலான டீ மற்றும் அதன் சாறு, செரிமான பிரச்சனைகளான வாய்வு, வயிற்று உப்புசம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவற்றில் இருந்து விடுபட பயன்படுத்தப்படுகிறது. பப்பாளி இலையில் உள்ள நார்ச்சத்து, செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கும்.

அழற்சி எதிர்ப்பு பண்புகள்
பப்பாளி இலைச் சாறு தசை வலி மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட உள் மற்றும் வெளிப்புற அழற்சி நிலைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. ஆய்வு ஒன்றில், பப்பாளி இலைச்சாறு கீல்வாதம் கொண்ட எலிகளின் பாதங்களில் அழற்சி மற்றும் வீக்கத்தை கணிசமாகக் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

தலைமுடி வளர்ச்சியை ஆதரிக்கும்
பப்பாளி இலைச் சாற்றினை தலைச்சருமத்தில் தடவுவதன் மூலம், தலைமுடியின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுவதோடு, முடியும் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக பப்பாளி இலைச்சாற்றில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், பொடுகை உண்டாக்கும் பூஞ்சையைக் கட்டுப்படுத்தும்.

சரும ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்
பப்பாளி இலைச்சாற்றினை குடிப்பதுடன், அதை சருமத்தில் தடவினால், சருமம் மென்மையாகவும், சுத்தமாகவும் இருக்கும். இதில் உள்ள புரோட்டீனை கரையச்செய்யும் பாப்பைன் என்னும் நொதி, சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த சரும செல்களை அகற்ற உதவி, சரும ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்.

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்
பாரம்பரிய மருத்துவ முறைகளில் பப்பாளி இலை சில வகையான புற்றுநோய்களைத் தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதை உறுதி செய்ய அதிக ஆராய்ச்சி தேவைப்படுகிறது. சோதனை குழாய் ஆய்வுகளில் பப்பாளி இலைச்சாறு புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் சக்திவாய்ந்த திறனைக் கொண்டிருப்பது தெரிய வந்தது. ஆனால் மனித அல்லது விலங்கு ஆய்வுகளில் இது மாதிரியான எந்த கண்டுபிடிப்புகளும் பிரதிபலிக்கவில்லை.

பப்பாளி இலைச்சாறு தயாரிப்பது எப்படி?
நற்பதமான பப்பாளி இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் உள்ள தண்டுப்பகுதியை நீக்கிவிட்டு, இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை ஒரு பிளெண்டரில் போட்டு, அதில் சிறிது நீரை ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.
டெங்கு அறிகுறிகள் இருந்தால், அதற்கு சிகிச்சை அளிக்க ஒருவர் பகலில் மூன்று பகுதிகளாக 100 மில்லி பப்பாளி இலை சாற்றைக் குடிக்கலாம். சாற்றின் சுவையை அதிகரிக்க விரும்பினால், அதில் சிறிது உப்பு அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications