Latest Updates
-
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். .. -
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்.. -
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது! -
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்!
இந்தியாவில் நுழைந்துள்ள கொடிய ஓமிக்ரான் ஏன் டெல்டாவை விட ஆபத்தானது தெரியுமா?
உலகம் மெதுவாக பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கம் நிலையில், தென்னாப்பிரிக்காவில் ஒரு புதிய மர்மமான கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டதுடன், அது கவலைக்குரியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் மெதுவாக பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கம் நிலையில், தென்னாப்பிரிக்காவில் ஒரு புதிய மர்மமான கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டதுடன், அது கவலைக்குரியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய கொரோனா மாறுபாடு இதுவரை உருமாற்றமடைந்த கொரோனா மாறுபாட்டை விட மோசமானது என்றும் குறிப்பிடப்படுகிறது. இதுவரை இந்த கொடிய கொரோனா மாறுபாடு தென்னாப்பிரிக்காவின் ஒரு மாகாணத்தில் மட்டுமே காணப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த புதிய கொடிய மாறுபாடு இந்தியாவிலும் நுழைந்துவிட்டது.

உலக சுகாதார அமைப்பு இந்த புதிய கொரோனா மாறுபாட்டிற்கு ஓமிக்ரான் என்று பெயரிட்டு, கவலைக்குரிய மாறுபாடாகவும் அறிவித்துள்ளது. உண்மையிலேயே இந்த ஓமிக்ரான் கொரோனா மாறுபாடு இந்தியாவில் இரண்டாம் அலையை ஏற்படுத்திய டெல்டாவை விட ஆபத்தானதா என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஓமிக்ரான் மாறுபாட்டை ஆபத்தானதாக்குவது எது?
போட்ஸ்வானாவின் மேம்பட்ட மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு தான் முலில் இந்த மாறுபாட்டை கண்டறிந்தது. இது உலகின் முக்கிய மாறுபாடான டெல்டா மாறுபாட்டை விட வேகமாக பரவக்கூடியதாக நம்பப்படுகிறது. இதற்கு காரணம் அதன் பிறழ்வுகள் தான்.
நிபுணர்களின் கூற்றுப்படி, ஓமிக்ரானில் 30-க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் உள்ளன. இந்த பிறழ்வுகள் இதுவரையிலான மாறுபாடுகளை விட அதிகமாகவும், டெல்டாவை விட இரண்டு மடங்கு அதிகமாகவும் ஆகும். இங்கிலாந்தில் உள்ள சுகாதார நிபுணர்கள் R203K மற்றும் G204R ஆகிய இரண்டு பிறழ்வுகள் வைரஸை விரைவாகப் பிரதிபலிக்க உதவுவதாக கூறுகின்றனர். H655Y, N679K மற்றும் P681H ஆகிய 3 பிறழ்வுகள் உடலின் செல்களுக்குள் எளிதில் நுழையும் வைரஸின் திறனுக்கு பங்களிக்கின்றன. இந்த கடைசி இரண்டு பிறழ்வுகள் ஒன்றாக இருப்பது ஒரு அரிய நிகழ்வு. இவை இரண்டும் ஒமிக்ரான் தடுப்பூசிகளுக்கு மிகவும் எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

பரவும் தன்மை
கொரோனாவின் டெல்டா உட்பட மற்ற மாறுபாடுகளை விட ஓமிக்ரான் அதிகமாக பரவக்கூடியதா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் தென்னாப்பிரிக்காவில் இந்த மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த கொரோனா வழக்கு அதிகரிப்பு ஓமிக்ரான் அல்லது பிற காரணிகளுடன் தொடர்புடையதா என்பதைப் புரிந்து கொள்ள தொற்றுநோயியல் ஆய்வுகள் நடந்து வருகின்றன.

ஓமிக்ரான் அறிகுறிகள் மற்றும் தொற்றின் தீவிரத்தன்மை
ஓமிக்ரானுடன் தொடர்புடைய அறிகுறிகள் மற்ற வகைகளில் இருந்து வேறுபட்டவை என்று தற்போது எந்த தகவலும் இல்லை. அதேப்போல் ஓமிக்ரான் தொற்று மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்துமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆரம்ப தரவுகளின் படி, தென்னாப்பிரிக்காவில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருப்பதாக தெரிகிறது. ஆனால் இது ஓமிக்ரான் தொற்றின் விளைவாக மட்டுமின்றி, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக இருக்க வாய்ப்புள்ளது.

தடுப்பூசியின் செயல்திறன்
கொரோனா நோய்த்தொற்றிற்கு பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உலகளவில் மக்களிடையே போடப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய ஓமிக்ரானுக்கு எதிராக இந்த தடுப்பூசிகள் செயல்படுமா என்பதை தெரிந்து கொள்ள நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் கடுமையான நோய் மற்றும் மரணத்தை எதிர்த்துப் போராடுவதில் தடுப்பூசிகள் ஒரு முக்கிய கருவியாக இருக்கின்றன. ஆகவே தற்போதைய தடுப்பூசிகள் கடுமையான நோய் மற்றும் இறப்புக்கு எதிராக திறம்பட செயல்படும்.

சோதனைகளின் செயல்திறன்
தற்போது கொரோனாவைக் கண்டறிய பரவலாக பயன்படுத்தப்படுவது RT-PCR சோதனைகள் தான். ஓமிக்ரான் தொடர்பான தொற்றுக்களை கண்டறியவும் இச்சோதனை தான் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.

சிகிச்சையின் செயல்திறன்
கடுமையான கொரோனா நோயாளிகளை நிர்வகிப்பதற்கு கார்டிகோஸ்டீராய்டுகள் மற்றும் IL6 ரிசெப்டர் பிளாக்கர்ஸ் ஆகியவை இன்னும் பயனுள்ளதாக உள்ளன. இருப்பினும், ஓமிக்ரான் மாறுபாட்டில் வைரஸில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் மாற்று சிகிச்சையின் செயல்திறன் மதிப்பீடு செய்யப்படும்.

ஓமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
அனைத்து வகையான கொரோனா மாறுபாடுகள் பரவுவதையும் தடுக்க சிறந்த வழி குறைந்தது ஒரு மீட்டர் சமூக இடைவெளியைப் பராமரிப்பதாகும். மேலும் எங்கு வெளியே சென்றால் மறக்காமல் மாஸ்க்குகளை அணிய வேண்டும் மற்றும் வீட்டில் ஜன்னல்களை திறந்து நல்ல காற்றோட்டத்துடன் இருக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் கூட்டமான இடத்திற்கு செல்வதையோ, கூட்டம் கூடுவதையோ, மோசமான காற்றோட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதையோ தவிர்க்க வேண்டும் மற்றம் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். இருமல் அல்லது தும்மலின் போது முழங்கை அல்லது டிஸ்யூ பேப்பரைப் பயன்படுத்தவும் மற்றும் முக்கியமாக தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications











