Latest Updates
-
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...!
கொரோனா தடுப்பூசி போட்டவர்களிடம் வெளிப்படும் கொரோனாவின் புதிய அறிகுறிகள்!
கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் கொரோனா தடுப்பூசி போட்ட பின் ஏற்படும் தொற்றினால் சந்திக்கும் கொரோனா அறிகுறிகள் மாறுபடலாம்.
தற்போது இந்தியா கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பலர் காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத் திணறல், உடல் வலி போன்ற கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் மற்றும் பல நோயாளிகளுக்கு சிக்கல்கள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் தெரபி அவசியமாக உள்ளது. அதிர்ஷ்டவசமாக, ஒரு வருடத்திற்கு பின் கோவிட்-19-க்கு எதிராக பாதுகாப்பளிக்கும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.

கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த அதிகபட்ச மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடும் நோக்கத்துடன், இந்திய அரசு மக்களுக்கு தடுப்பூசிகள் கிடைக்க முயற்சித்து வருகிறது. கொரோனாவுடன் போரிடுவதற்கான ஒரே வழி, தடுப்பூசி போட்டுக் கொண்டு தொற்றுநோயில் இருந்து பாதுகாப்புடன் இருப்பது தான். இருப்பினும், கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் கொரோனா தடுப்பூசி போட்ட பின் ஏற்படும் கோவிட் தொற்றினால் சந்திக்கும் கொரோனா அறிகுறிகள் மாறுபடலாம்.

கோவிட் தொற்றில் இருந்து தடுப்பூசி எவ்வாறு பாதுகாக்கும்?
கோவிட் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கோவிட் தடுப்பூசி ஒரு முக்கிய கருவியாகும். இந்த தடுப்பூசியுடன் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மற்றும் தொடர்ச்சியாக கையை சுத்தப்படுத்துதல் ஆகியவையும் மிகவும் அவசியமாகும். மாஸ்க் அணிந்து கொண்டு 6 அடி சமூக இடைவெளியைப் பராமரிப்பது கோவிட் பரவலைக் குறைக்கும்.

தடுப்பூசி குறித்து மருத்துவர் கூற்று...
கோவிட் தடுப்பூசி குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், "தடுப்பூசி கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பையும், ஒருவேளை நோய்த்தொற்று ஏற்பட்டால் ஏற்படும் சிக்கல்களையும் குறைக்கிறது என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. கோவிட்-19 தடுப்பூசி இயற்கையான பாதுகாப்பை வழங்குகிறது. அதாவது இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. ஆகவே இது முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் இது டி.என்.ஏ-வை மாற்றாது. கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்வது ஒருவரது உடலில் வைரஸ்களை எதிர்க்கும் ஆன்டிபாடிகளை உருவாக்க அனுமதித்து, வைரஸிலிருந்து பாதுகாப்புடன் இருக்க வைக்கும். கோவிட் தடுப்பூசி கொரோனாவால் தீவிரமாக நோய்வாய்ப்படுவதையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் தடுக்கும். மொத்தத்தில் கோவிட் தடுப்பூசி உங்கள் குடும்பத்திற்கும், உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நன்மை பயக்கும்." என்றார்.

தடுப்பூசி போட்ட பிறகு கொரோனாவால் பாதிக்க முடியுமா?
லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், தடுப்பூசி பெற்ற பின் மக்கள் அடிக்கடி சந்திக்கும் அறிகுறிகள் வெளிக்காட்டப்பட்டது. இந்த அறிகுறிகள் குறித்து விரிவாக தெரிந்து கொள்வதற்கு, ZOE கோவிட் அறிகுறி ஆய்வு ஆப்பைப் பயன்படுத்தி இந்த நோய்த்தொற்றுகள் ஏற்படும் அறிகுறிகளை ஆராய்ச்சியாளர்கள் விரிவாகப் பார்த்தனர். அதில் முதல் டோஸ் பெற்ற சுமார் 1.1 மில்லியன் மக்களுள், 0.2 சதவீதம் பேர் கோவிட் -19 பாசிட்டிவ் பெற்றதை பதிவு செய்துள்ளனர். மேலும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்களுள் 0.03 சதவீதம் பேர் கோவிட்-19 பாசிட்டிவ் பெற்றிருந்தனர் என்பதும் ஆய்வாளர்களுக்கு தெரிய வந்தது.

கோவிட்-19 தடுப்பூசிக்கு பிந்தைய அறிகுறிகள் என்ன?
லண்டனின் கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், கோவிட் தடுப்பூசி பெற்ற பின் மக்கள் கவனிக்க வேண்டிய நான்கு முக்கிய அறிகுறிகளை வெளியிட்டனர். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:

தும்மல்
தடுப்பூசி போடாதவர்களைக் காட்டிலும், தடுப்பூசி போட்டு கொடிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவித்த அறிகுறிகளுள் ஒன்று தும்மல் என்று ஆராய்ச்சி கூறுகிறது. மேலும் 60 வயதிற்கு உட்பட்டவர்களில், தடுப்பூசி பெற்ற பின் 24 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு கோவிட் -19 இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

மூச்சுத் திணறல்
கொரோனா வைரஸின் மிக முக்கியமான அறிகுறிகளில் ஒன்று மூச்சுத் திணறல். தடுப்பூசி போட்டவர்கள் மூச்சுத் திணறலை அனுபவித்ததாக ஆராய்ச்சி கூறுகிறது. எனவே கொரோனா தடுப்பூசி பெற்ற பின் உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால், உங்கள் உடலில் கொரோனா வைரஸ் உள்ளது என்று அர்த்தம்.

காது வலி/காதுகளில் சப்தம்
உங்களுக்கு காதுகளில் ஒலிக்கும் சப்தம் கேட்கிறதா? அப்படியானால் இது கோவிட்-19 இன் அறிகுறியாக இருக்கலாம். ஆய்வின் படி, கொரோனா தடுப்பூசி பெற்ற பல நோயாளிகள் காதுகளில் ரீங்கார சப்தத்தை அனுபவித்ததாக புகாரளித்துள்ளனர்.

வீங்கிய சுரப்பிகள்
தடுப்பூசிகளின் பக்க விளைவுகளில் ஒன்று அக்குள் அல்லது கழுத்தில் வீக்கம் ஏற்படுவது. இம்மாதிரியான வீக்கம் வழக்கமாக ஒன்று அல்லது இரண்டு நாட்களில் சரியாகிவிடும். ஆனால் அது தொடர்ந்து நீடித்திருநதால், அது கோவிட்-19 இன் அடையாளமாக இருக்கலாம்.



Click it and Unblock the Notifications











