Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நீங்கள் பண்ற இதெல்லாம் வேஸ்ட்... என்ன பண்ணனும் தெரியுமா?
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது குறித்து காலம் காலமாக சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலானவை உண்மைக்கு முரணானவை என்பதே உண்மை.
ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று நினைக்கும் அனைவரும் அவர்களின் நோயெதிர்ப்பு மணடலத்தை பலமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் நமக்கு ஏற்படும் ஒவ்வொரு நோயும் நமது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பதை உணர்த்துகிறது. குறிப்பாக நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பவர்கள் கோடை மற்றும் குளிர் காலங்களில் அதிக அவஸ்தைப்படுவார்கள்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது குறித்து காலம் காலமாக சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலானவை உண்மைக்கு முரணானவை என்பதே உண்மை. இந்த பதிவில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது குறித்து இருக்கும் மூடநம்பிக்கைகளை பார்க்கலாம்.

தினம் ஓரு ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்லவே தேவையில்லை ஏனெனில் இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து அனைத்து நோய்களிடம் இருந்து பாதுகாக்கும் என்று பல நூற்றாண்டுகளாக கூறப்படுகிறது. உண்மையில் சொல்லப்போனால் இது ஒரு மூடநம்பிக்கையாகும், ஆப்பிளில் சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது, இதன் தோல் செரிமானத்திற்கு உதவும் மேலும் இது பற்களை வலுப்படுத்தும். இது ஒரு ஆரோக்கியமான பழம் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் நோயெதிர்ப்பு சக்தியை பொறுத்த வரையில் ஆப்பிளும் மற்ற பழங்களைப் போன்றதுதான் . அதிக பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட ஆப்பிளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

வைட்டமின் டி
வைட்டமின் டி உணவுகள் நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் என்று கூறப்படுகிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், தசைவலிகளை குறைக்கவும் இந்த வைட்டமின் பயன்படுகிறது. ஆனால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் வைட்டமின் டி-யின் பங்கு எதுவுமில்லை. சொல்லப்போனால் அதிகளவு வைட்டமின் டி எடுத்துக்கொள்வது உங்கள் நச்சுத்தன்மையை அதிகரித்து இரத்தத்தில் கால்சியம் உருவாக வழிவகுக்கும். ஒருநாளைக்கு நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய அதிகபட்ச அளவு வைட்டமின் டி 1000 மிகி ஆகும்.

தேன்
தேன் இயற்கையின் மிகசிறந்த மருந்து பொருள் என்று கூறுவார்கள். இருமல், சளி, சரும பிரச்சினைகள் என பலவற்றிற்கு தேன் நிவாரணம் வழங்கினாலும் இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சொல்லப்போனால் தேன் இதற்கான எதிர்மறை பண்புகளைத்தான் கொண்டிருக்கிறது. தேனில் இருக்கும் இனிப்பு சுவை நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கும். ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

க்ரீன் டீ
இன்று பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் ஒரு பழக்கம் க்ரீன் டீ குடிப்பதாகும். ஆனால் இது உண்மையில் அந்தளவிற்கு சக்தி வாய்ந்தது இல்லை என்பதே மருத்துவர்களின் கருத்தாகும். இதுவும் மற்ற தேநீர்களைப் போலத்தான் சமஅளவிலான நன்மை, தீமைகளைக் கொண்டது. க்ரீன் டீ நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது வெறும் வியாபார தந்திரம்தான் என்று கூறப்படுகிறது.

ப்ரோபையோட்டிக்ஸ்
இந்த ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் மற்றும் தயிர் மற்றும் சார்க்ராட் போன்ற புளித்த உணவுகளில் காணப்படுகின்றன. அரிக்கும் தோலழற்சி போன்ற சரும பிரச்சினைகளை குணப்படுத்த உங்கள் செரிமான அமைப்பிற்கு உதவுவது போன்ற நன்மைகளை வழங்குகின்றன. சிலர் புரோபயாடிக்குகளை ஒரு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகக் கருதுகின்றனர், ஆனால் அதற்கான அறிவியல் சான்றுகள் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

சிக்கன் சூப்
உடல்நிலை மோசமாகும் போது அனைவரும் கூறும் ஒரு விஷயம் சிக்கன் சூப் குடிக்க வேண்டும் என்பதாகும். இது ஒரு உபயோகமான வழிமுறையாகும். ஆனால் தற்போது சிக்கனுக்கு பதிலாக பவுலியன் கட்டிகளைக் கொண்டு சூப் தயாரிக்கப்படுகிறது. இது எந்தவிதத்திலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவாது. நீங்கள் உண்மையாகவே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்பினால் உண்மையான கோழியில் சூப் செய்ய வேண்டும்.

எது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்?
ஜிங்க் மற்றும் வைட்டமின் சி கொண்ட பொருட்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடும். குறிப்பாக பூண்டில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல பண்புகள் உள்ளது. இது மட்டுமின்றி போதுமான அளவு தூங்குவது, சூரிய ஒளியில் இருப்பது, புகைபிடிக்காமல் இருப்பது, சீரான உணவுமுறை போன்றவை உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications
