Latest Updates
-
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
வயது அதிகரிக்கும் போது உண்டாகும் கண் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கணுமா? இத படிங்க...
பொதுவாக வயது அதிகரிக்கும் போது கண்களில் உண்டாகக்கூடிய மாற்றங்கள் அடிப்படையில் எந்த தீவிர விளைவுகளும் இல்லாமல் இயற்கையாகவே உண்டாகிறது. ஆனால் அரிய கட்டங்களில் பார்வைத்திறனை பெரிய அளவில் பாதிக்கின்றன.
வயது முதிர்விற்கான செயல்முறையில் மனித உடல் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்ள நேருகிறது. இந்த மாற்றங்களுக்கு கண்கள் மட்டும் விதிவிலக்கல்ல. கண் என்பது ஒரு கேமரா போன்றது, இது கார்னியா என்னும் கருவிழிப்படலம் மற்றும் இயற்கை லென்ஸ் கொண்ட இரு லென்ஸ் வடிவமாகும். இதில் ரெட்டினா என்பது திரையைக் குறிக்கும், ஆப்டிக் நரம்பு என்பது கேபிளைக் குறிக்கும். இது கண்களை மூளையுடன் இணைக்கிறது.

பொதுவாக வயது அதிகரிக்கும் போது கண்களில் உண்டாகக் கூடிய மாற்றங்கள் அடிப்படையில் எந்த ஒரு தீவிர விளைவுகளும் இல்லாமல் இயற்கையாகவே உண்டாகிறது. ஆனால் அரிய கட்டங்களில் இவை பார்வைத்திறனை பெரிய அளவில் பாதிக்கின்றன. வயது அதிகரிப்பின் போது மனிதர்கள் அனுபவிக்கும் சில கண் சார்ந்த பிரச்சனைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

வெள்ளெழுத்து (Presbyopia)
40 வயதை நெருங்கும் போது இந்த வெள்ளெழுத்து பாதிப்பு உண்டாகிறது. இந்த வகை பாதிப்பில் அருகில் இருக்கும் பொருட்களை தெளிவாக காண முடியாத நிலை ஏற்படுகிறது. பெரும்பாலும் உலகில் உள்ள மனிதர்களில் பலரும் இந்த பாதிப்பை அனுபவிக்கின்றனர். கண்களில் உள்ள இயற்கை லென்சுக்கு ஆதரவாக இருக்கும் நுண்ணிய கட்டமைப்புகள் மற்றும் தசைகள் ஆகியவை இறுக்கமாக மாறுவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக அருகில் உள்ள பொருட்களைக் காணும் போது இயற்கை லென்ஸ் தன்னுடைய வடிவத்தை மாற்றிக் கொள்ள இயலாத நிலை உண்டாகிறது. 40 வயதைக் கடந்தவர்கள் நுண்ணிய எழுத்துகளைக் காண்பதில் கடினமான நிலை இருப்பதாக கூறுவார்கள் அல்லது அருகில் வைத்து படிக்காமல் தூரமாக வைத்து படிப்பார்கள். இதன் மூலம் இந்த பாதிப்பைக் கண்டறிய முடியும்.
தீர்வு:
ஒற்றைக் குவிய லென்ஸ் அல்லது இரட்டைக் குவிய லென்ஸ் அல்லது வளர்ச்சிவீரிய லென்ஸ் ஆகியவை பொருத்தப்பட்ட படிக்கும் கண்ணாடிகள் இந்த வகை பாதிப்பிற்கு பரிந்துரைக்கப்படுகிறது. 40-55 வயதில் வெள்ளெழுத்து பாதிப்பு அதிகரிக்கும் போது படிக்கும் கண்ணாடியின் பவர் எண்ணிக்கையில் உயர்வு ஏற்படலாம்.

கண்புரை
வயது அதிகரிக்கும் போது உண்டாகக்கூடிய மற்றொரு பொதுவான கண் தொடர்பான பாதிப்பு என்பது கண்புரை ஆகும். இந்த பாதிப்பில் கண்களில் உள்ள இயற்கை லென்ஸ் அதன் ஒளிப்புகும் தன்மையை இழந்து , ஒளி ஊடுருவாத மங்கலான நிலைக்கு மாறுகிறது. கண்புரை நிலையின் அடிப்படையில் பார்வை குறைபாட்டின் அளவு வேறுபடுகிறது.
தீர்வு:
இந்த பாதிப்பின் ஆரம்ப நிலையினை தவிர மற்ற நிலைகளில் அறுவை சிகிச்சை மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. ஆரம்ப கட்டத்தில் அறுவை சிகிச்சைக்கு மாற்றாக கண்ணாடி மாற்றம் செய்வது போதுமானது.

வறண்ட கண்கள்
வயது அதிகரிப்பின் போது கண்ணீர் உற்பத்தி அளவு குறைவதால் கண்களில் வறட்சி ஏற்படும் நிலை அதிகரிக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு மெனோபாஸ் காலத்திற்கு பிறகு இந்த நிலை உண்டாகிறது. இதனால் கண்களில் வறட்சி, சிவந்து போவது, கண்கள் சோர்ந்து போவது போன்ற பாதிப்புகள் உண்டாகிறது.
தீர்வு:
பொதுவாக கண்ணீர் துளி மருந்து/ கண் மசகு எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு இந்த பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வயது தொடர்பான மாகுலர் சிதைவு
பொதுவாக 65 வயதிற்கு மேல் அதிகம் பாதிக்கப்படும் கண் பகுதி என்பது விழித்திரை என்னும் ரெட்டினா. விழித்திரையின் மத்திய பகுதி மெலிந்து பலவீனமடையும் நிலையை வயது தொடர்புடைய மாகுலர் சிதைவு என்று கூறுவர். இதனால் பார்த்து படிக்கும் திறனில் ஓரளவு பாதிப்பு உண்டாகிறது. சில அரிய வழக்குகளில் விழித்திரையில் மத்திய பகுதியில் திரவம் அல்லது இரத்த சேர்க்கை ஏற்படலாம். இதனால் பார்வை திறனில் பெருத்த பாதிப்பு உண்டாகலாம். முற்றிலுமாக பார்வை இழப்பைத் தடுக்க, வயது தொடர்பான மாகுலர் சிதைவை எவ்வாறு நிர்வகிப்பது என்ற புரிதல் அவசியம் வேண்டும்.
தீர்வு:
தற்போதைய காலகட்டத்தில் ஊசி சிகிச்சைகள் நோயாளிகளுக்கு நல்ல தீர்வைத் தருவதாக நம்பப்படுகிறது.

கண் அழுத்த நோய்/க்ளுக்கோமா
வயது அதிகரிப்பின் காரணமாக மனிதர்களை பாதிக்கும் மற்றொரு பொதுவான கண் தொடர்பான பாதிப்பு, கண் அழுத்த நோய். இதனை க்ளுக்கோமா என்றும் கூறுவர். கண்களுக்குள் நிரப்பப்பட்டிருக்கும் திரவம் பொதுவாக தொடர்ந்து ஓடிக்கொன்டே இருக்கும். வயது அதிகரிப்பின் காரணமாக நீர் வெளியேறும் பகுதி கடினமாகிறது. இதன் விளைவாக நீர் வடிகால் மோசமடைகிறது. மேலும் கண்களில் உயர் அழுத்தம் ஏற்பட்டு கண் அழுத்த நோய் உண்டாகிறது. இதனை சிகிச்சை அளிக்காமல் அப்படியே விட்டுவிட்டால், கண் பார்வை சேதமடையலாம்.
தீர்வு:
பெரும்பாலான நோயாளிகளுக்கு கண் மருந்து கொடுப்பதால் நல்ல திருப்திகரமான விளைவுகள் உண்டாகிறது. சிலருக்கு அறுவை சிகிச்சை செய்வதால் கண் அழுத்தம் கட்டுப்பாட்டிற்கு வருகிறது.

முடிவு
பொதுவாக வயது அதிகரிக்கும் போது சில கண் தொடர்பான உபாதைகள் உண்டாவது வழக்கமாக இருக்கும் போது சூரிய ஒளி இந்த பாதிப்பை மேலும் விரைந்து உண்டாக்கும் ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுகளான பெர்ரி, பீன்ஸ் , பீட்ரூட், குடை மிளகாய் போன்றவை விழித்திரையின் வயது அதிகரிப்பதற்கான செயல்முறையை தாமதப்படுத்த உதவுகின்றன மற்றும் வயது தொடர்பான சேதங்களில் இருந்து கண்களை பாதுகாக்கின்றன.
ஒருவர் வாழ்நாள் முழுவதும் புறஊதா கதிர்களை வடிகட்டும் சன்க்ளாஸ் அணிவதை பழக்கமாக்கிக் கொள்வதால் ஒளி ஊடுருவுவதால் விழித்திரை சேதமடையும் வாய்ப்பு குறிப்பிட்ட அளவு குறைகிறது. 40 வயதிற்கு மேல் அடிக்கடி கண் பரிசோதனை செய்து கொள்வது, நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது போன்றவற்றின் மூலம் நீண்ட நாட்கள் உங்கள் கண் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications