Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
சிகரெட்டால் கருகிப் போன நுரையீரலை சுத்தம் செய்ய உதவும் அற்புத டானிக்!
உங்களுக்கு சிகரெட் பிடித்து கருகிப் போன நுரையீரலை எப்படி சுத்தம் செய்வதென்று தெரியவில்லையா? கீழே சிகரெட்டால் கருகிப் போன நுரையீரலை சுத்தம் செய்யும் அற்புத டானிக்கை எப்படி வீட்டிலேயே தயாரிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது.
நமது உடலில் நுரையீரல் பல முக்கியமான விஷயங்களை செய்கிறது. சொல்லப்போனால் நுரையீரல் உடலிலேயே மிகவும் முக்கியமான உறுப்பு என்று கூட சொல்லலாம். ஏனெனில் இது தான் நம்மை உயிருடன் வைத்திருக்கிறது. பொதுவாக நுரையீரல் தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்ளக்கூடியது. ஆனால் தொடர்ச்சியாக நாம் அசுத்தமான காற்றினை சுவாசிக்கும் போது, நுரையீரல் மோசமாக பாதிக்கப்படுகிறது. குறிப்பாக சிகரெட் பிடிப்பவர்களின் நுரையீரலைப் பார்த்தால், கருகிப் போன பஞ்சு போல இருக்கும். ஏனெனில் சிகரெட்டில் அந்த அளவில் தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்கள் உள்ளன. ஆகவே தொடர்ச்சியாக சிகரெட் பிடிக்கும் போது, அது நுரையீரலின் ஆரோக்கியத்தைப் பாதித்து, பல சுவாச பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதோடு, உயிரையே பறித்துவிடும்.

தற்போது சிகரெட் பிடிப்பது ஒரு ஃபேஷனாகி விட்டதால், ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் சிகரெட்டை பிடிக்கிறார்கள். சிகரெட் பிடிப்பதால் உலகில் சுமார் 66 மில்லியனுக்கும் அதிகமானோர் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். எனவே நீங்கள் உயிர் வாழ நினைத்தால், உடனே சிகரெட் பழக்கத்தைக் கைவிடுங்கள். அதோடு சிகரெட்டால் நுரையீரலில் படிந்துள்ள அழுக்குகளை வெளியேற்ற முயலுங்கள். உங்களுக்கு சிகரெட் பிடித்து கருகிப் போன நுரையீரலை எப்படி சுத்தம் செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் கீழே அசுத்தமான காற்றை சுவாசித்து மற்றும் சிகரெட்டால் கருகிப் போன நுரையீரலை சுத்தம் செய்யும் அற்புத டானிக்கை எப்படி வீட்டிலேயே தயாரிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

டானிக்கில் உள்ள மூன்று முக்கிய பொருட்கள்
நுரையீரலில் உள்ள அழுக்குகளை எளிதில் வெளியேற்ற மூன்று பொருட்கள் பெரிதும் உதவியாக இருக்கும். அவை மஞ்சள், இஞ்சி மற்றும் வெங்காயம் ஆகும். இந்த மூன்று பொருட்களிலும் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் வழங்குவதோடு, இந்த மூன்று பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படும் டானிக் அற்புதமான சுவையுடன் இருக்கும்.

மஞ்சள்
மருத்துவ குணம் அதிகம் கொண்ட பொருளாக கருதப்படும் மஞ்சள், அதன் நிறத்தால் பரவலாக அறியப்படுகிறது. மஞ்சளில் எண்ணிலடங்கா ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. இதில் கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு, பாக்டீரியல் எதிர்ப்பு மற்றும் ஆன்டி-வைரல் பண்புகளும் வளமான அளவில் உள்ளன. இந்த மஞ்சள் தூளை உங்களின் அன்றாட உணவில் சேர்க்காதவரானால், இன்று முதல் உங்கள் அன்றாட உணவில் தவறாமல் சேர்த்து வாருங்கள்.

இஞ்சி
வயிற்று உப்புசத்தை சரிசெய்ய பொதுவாக பயன்படுத்தப்படும் ஓர் பொருள் தான் இஞ்சி. இத்தகைய இஞ்சி நுரையீரலில் உள்ள அதிகப்படியான சளியைக் குறைக்கும் திறன் கொண்டது. குறிப்பாக இது புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரலைப் பாதுகாக்கும் மிகவும் பயனுள்ள பொருள்.

வெங்காயம்
வெங்காயம் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. மேலும் இது சில வகையான புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் வெங்காயம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டது.
மேலே கூறிய இந்த மூன்று பொருட்களுமே நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நுரையீரலில் உள்ள அழுக்கை வெளியேற்றும் திறனையும் கொண்டவை. இப்போது இந்த பொருட்களைக் கொண்டு டானிக் எப்படி தயாரிப்பது என்று காண்போம்.

பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்:
* மஞ்சள் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 400 கிராம்
* இஞ்சி - ஒரு துண்டு
* தேன் - 400 கிராம்
* ஆப்பிள் சீடர் வினிகர் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 லிட்டர்

செய்முறை:
* முதலில் நீரை அடுப்பில் வைத்து, அதில் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அந்த நீரில் இஞ்சி, வெங்காயத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் மஞ்சள் தூள் சேர்த்து, குறைவான தீயில் நீர் பாதியாகும் வரை கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதை வடிகட்டி, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, நன்கு குளிர்ந்த பின் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.
* இந்த டானிக்கை தினமும் 2 டேபிள் ஸ்பூன் குடிக்க வேண்டும். அதுவும் காலை மற்றும் மாலை வேளையில் உணவு உண்ட பின் குறைந்தது 2 மணிநேரம் கழித்து சாப்பிட வேண்டும்.

முடிவு
புகைப்பழக்கம் ஒரு கொடிய பழக்கம். இப்பழக்கத்தை பழகிக் கொண்டால், அதிலிருந்து வெளிவருவது மிகவும் கடினம். ஆனால் முயன்றால் நிச்சயம் முடியும். அப்படி முயற்சி செய்து புகைப்பழக்கத்தை கைவிட்டால், நிச்சயம் நுரையீரல் ஆரோக்கியத்தை மீண்டும் மேம்படுத்த முடியும். அதற்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள டானிக்கை அருந்த வேண்டும். இதனால் நற்பலன் கிடைக்கும். இந்த டானிக்கை புகைப்பிடிப்பவர்கள் மற்றும் புகைப்பழக்கத்தை கைவிட்டவர்கள் தினமும் உட்கொள்வது மிகவும் நல்லது.



Click it and Unblock the Notifications
