Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
தற்கொலை உணர்வு எழுகிறதா? அதை விரட்ட இதையெல்லாம் செய்தாலே போதும்…
பிரிட்டிஷ் எழுத்தாளர்களின் கூற்றுப்படி, தனிமை என்பது தனியாக இருப்பது மட்டுமல்ல, நீங்கள் விரும்புவதை விட குறைந்த அளவிவான நபர்களுடன் மட்டுமே தொடர்பில் இருப்பதும் ஒரு தனிமை தான்.
தனிமையாக இருப்பதை போல் உணர்கிறீர்களா? உங்களை நினைத்து நீங்களே வெறுப்படைகிறீர்களா? குற்ற உணர்ச்சி அதிகமாக உள்ளதா? அப்படியெனில் நீங்கள் மிகவும் ஆபத்தான மனநிலை பாதிப்பில் உள்ளீர்கள் என்று அர்த்தம். மனநிலை பாதிப்பு என்றவுடன் பைத்தியம் என்று கூறுகிறீர்களா என்று கோபப்பட வேண்டாம். சாதாரண ஒருவரின் மனநிலைக்கும், தங்களது மனநிலைக்கும் சற்று வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்பது தான் பொருள். ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின்படி, தனிமையாகவும் அல்லது தனிமைப்படுத்தப்பட்டது போல் உணருபவர்கள், மிகவும் ஆபத்தான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அர்த்தம்.

பிரிட்டிஷ் எழுத்தாளர்களின் கூற்றுப்படி, தனிமை என்பது தனியாக இருப்பது மட்டுமல்ல, நீங்கள் விரும்புவதை விட குறைந்த அளவிவான நபர்களுடன் மட்டுமே தொடர்பில் இருப்பதும் ஒரு தனிமை தான். அதுமட்டுமின்றி இந்த தனிமை உணர்வானது, சுய குற்ற உணர்ச்சி, குறைந்த அளவிலான சுய மதிப்பு, டிஸ்ஃபோரியா மற்றும் குறைந்த சுயமரியாதை ஆகியவற்றின் மூலமாக மனஅழுத்தம் போன்றவற்றை தோற்றுவிக்கும். இது மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

மனச்சோர்வு
உலக சுகாதார அமைப்பு (WHO) மனச்சோர்வை ஒரு பொதுவான மனநல கோளாறு மற்றும் ஒட்டுமொத்த உலகில், பல்வேறு வகையான நோய்களுக்கு ஒட்டுமொத்த முக்கிய காரணியாகவும், பங்களிப்பாளராகவும் அடையாளம் காட்டுகிறது.
இந்த மனநலப் பிரச்சினையால் 264 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. முறையாக சிகிச்சையளிக்கப்படாத நிலையில், மனச்சோர்வு ஒரு தீவிரமான பிரச்சனையாக மாறும் மற்றும் உங்கள் அன்றாட நடவடிக்கைகளை பெரிதும் பாதிக்கும். மேலும், இத்தகைய மிக மோசமான மனச்சோர்வு தான் தற்கொலைக்கு வழிவகுக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. 15 முதல் 29 வயதுடையவர்களின் மரணத்திற்கு இரண்டாவது முக்கிய காரணமாக இது விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை காரணமாக கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் இறக்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தனிமை மற்றும் தற்கொலை
"தனிமைக்கும் தற்கொலைக்கும் இடையிலான தொடர்பை அங்கீகரிக்க நீங்கள் ஒரு மருத்துவராக இருக்க வேண்டியதில்லை" என்று டாக்டர் ஜெர்மி நோபல் தற்கொலை தடுப்புக்கான அமெரிக்க அறக்கட்டளைக்காக எழுதிய கட்டுரையில் எழுதியுள்ளார். தனிமையின் உணர்வுகள் தீவிரமடைவதால் தற்கொலை பற்றிய எண்ணங்களும், தற்கொலை முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக நிபுணர்கள் கூறுகிறன்றனர். எனவே, தற்கொலை எண்ணங்களைத் தடுக்க தனிமையைக் கட்டுக்குள் வைத்திருங்கள். நீங்கள் அடிக்கடி தற்கொலை எண்ணங்களை கொள்கிறீர்கள் என்றால், அந்த எதிர்மறை எண்ணங்களை விலக்கி வைக்க இவற்றை முயற்சிக்கவும்.

நிபுணர்களின் உதவியை நாடுவது
உங்களது குடும்ப மருத்துவரையோ அல்லது ஒரு மனநல மருத்துவரையோ சந்தியுங்கள். ஒரு வேளை மனஅழுத்தம் தான் தற்கொலை உணர்வுகளை தூண்டுகிறது என்றால் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். உளவியல் சிகிச்சை, மருத்துவ மாத்திரை அல்லது இரண்டுமே கூட எடுத்துக் கொள்ளலாம். இது மேற்கொண்டு தற்கொலை உணர்வு ஏற்படாமல் தடுத்திட உதவிடும்.

தற்கொலை தடுப்பு மையத்தை தொடர்பு கொள்வது
மனஅழுத்தத்தில் இருந்து மீள முடியாதவர்களுக்காகவும், துன்பத்தில் மற்றவர்களுக்கு உதவுவதற்காகவும் பல அமைப்புகள் இந்தியாவில் உள்ளன. இந்த அமைப்புகளில் 24 மணி நேரத்திற்கும் பிரத்யேக இலவச ஹெல்ப்லைன் எண்கள் உள்ளன, அங்கு தொழில்ரீதியாக பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் தங்கள் அழைப்பிற்கு பதிலளிக்க நியமிக்கப்படுகிறார்கள். ஒரு பாதுகாப்பான சூழலில் உங்கள் உணர்வுகளைப் பற்றி பேச உதவும் ஒரு மனநல நிபுணருடன் அவர்கள் உங்களை இணைக்க வழிவகுப்பர்.

பிரச்சனைக்கான தீர்வை காண்பது
சமாளிக்க முடியாத பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டு, அதிலிருந்து வெளிவர முடியாமல் மிகுந்த மனஉளைச்சலில் தவிப்பவரா நீங்கள்? அப்படிப்பட்ட சூழலில் எதையும் கண்டு அஞ்சி ஓடுவதன் மூலம் தீர்வு கிடைத்து விடாது. எத்தகைய சூழலாக இருந்தாலும் அதை எதிர்க்கொள்வதே சிறந்தது. மிக மிக பெரிய பிரச்சனை என்றால், சிறு சிறு அடிகளாக வைத்து நேர்மையான முறையில் பிரச்சனையில் இருந்து வெளிவர முயற்சித்தாலே தீர்வு கிடைத்துவிடும். அனைத்து வகையான பிரச்சனைக்கும் தீர்வு ஒன்று நிச்சயம் இருக்கும். ஆனால், அதற்கு தற்கொலை தீர்வாகிவிடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆபத்தான இடத்தை தவிர்க்கவும்
உங்கள் வீட்டில், தற்கொலையை தூண்டும் வகையில் இருக்கும் ஆபத்தான பொருட்களை (அதாவது, தூக்க மாத்திரை, துப்பாக்கி, கயிறு போன்றவை) கண்ணில் படாதவாறு அப்புறப்படுத்திடவும் அல்லது அந்த இடத்தை விட்டு நீங்கள் விலகி விடவும். மேலும். ஆபத்தான பகுதிகளான, மொட்டை மாடி, பால்கனி போன்ற பகுதிகளில் நிற்பதையும், ஆபத்தான சூழ்நிலைகளான ரயில் நிலையத்தில் காத்திருப்பது, வாகனம் ஓட்டுவது போன்றவற்றையும் தவிர்த்திட வேண்டியது மிகவும் அவசியம்.

மனித உதவியை நாடுவது
மனஅழுத்தத்தில் தவிர்ப்பவர்கள் பெரும்பாலும், யாருடனும் பேசாமல், தனிமையில் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவர். ஆனால், அது நிச்சயம் அவர்களுக்கு உதவாது. மனதிற்கு பிடித்தவர்களுடன் இருப்பது, நம் மீது அக்கறை கொண்டவர்களுடன் நேரம் செலவிடுவது போன்றவை தான் அனைத்து வகையான எதிர்மறை எண்ணங்களை விரட்டிவிடும். எப்போதெல்லாம் தற்கொலை உணர்வு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம், சிறிது நடை பயிற்சி, ஷாப்பிங் அல்லது நண்பர்களுடன் இருப்பது என மனதை மாற்ற முயற்சிக்க வேண்டும். அதுபோன்ற தருணங்களில், நீங்கள் நினைத்ததை செய்ய உடனே முடியாத இடத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் மனநிலை சீராகும்.



Click it and Unblock the Notifications











