Just In
- 3 hrs ago
நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்!
- 3 hrs ago
போராடிக்கிற உங்கள் பாலியல் வாழக்கையை சுவாரஸ்யமாக மாற்ற இத சரியா பண்ணுனா போதும்...!
- 4 hrs ago
இந்த டீ நீங்க தூங்கும்போதுகூட உங்க கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுமாம்...!
- 5 hrs ago
சிம்பிளான... சிக்கன் கிரேவி
Don't Miss
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- News
டிரம்ப் விமானம் ஒதுக்காததன் எதிரொலி... பதவியேற்க வாடகை விமானத்தில் வந்த ஜோ பிடன்..!
- Movies
கொரோனாவில் இருந்து மீண்ட பம்மல் கே சம்பந்தம் தாத்தா நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Automobiles
அதிரடி காட்டும் கோமகி! ஒரே நேரத்தில் 3மின்சார டூ-வீலர்கள் இந்தியாவில் அறிமுகம்! இவற்றின் விலை எவ்ளோ தெரியுமா?
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெல்லத்தை இந்த பொருளோட சேர்த்து சாப்பிட்டா நோயெதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்குமாம்...
வெல்லம் ஒரு சுவையூட்டி மட்டுமின்றி, குளிர்காலத்தில் சாப்பிட ஏற்ற அற்புதமான உணவுப் பொருளும் கூட. அதோடு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு சிறந்த ஆரோக்கியமான மாற்று பொருளும் கூட. ஏனெனில் வெல்லம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இரும்புச்சத்து, வைட்டமின் சி, புரோட்டீன், மக்னீசியம், பொட்டாசியம் போன்றவற்றைக் கொண்டுள்ள வெல்லம் ஒருவரது அன்றாட உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய ஒன்று. குறிப்பாக குளிர்காலத்தில் இதை அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
குளிர்காலம் என்றாலே சளி, இருமல், காய்ச்சல், அலர்ஜி போன்ற பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்கும் காலம். ஆனால் வெல்லத்தை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், சுவாச பிரச்சனைகளின் அபாயம் குறையும், தொண்டை பிரச்சனைகள் மற்றும் செரிமான பிரச்சனைகள் போன்றவையும் தடுக்கப்படும்.
MOST READ: பூண்டின் முழு நன்மையும் கிடைக்க எப்படி சாப்பிடணும் தெரியுமா? இத படிங்க...
அதிலும் வெல்லத்தை வெறுமனே சாப்பிடுவதற்கு பதிலாக அவற்றை ஒருசில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால், அதனால் பெறும் நன்மை இரட்டிப்பாகும். இப்போது எந்த பொருளுடன் வெல்லத்தை சேர்த்து சாப்பிடலாம் மற்றும் அப்படி சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்று காண்போம்.

நெய்யுடன்...
வெல்லம் மற்றும் நெய்யை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். அதோடு, இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், மனநிலையை மேம்படுத்தவும், சருமம், தலைமுடி மற்றும் நகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அதிலும் அதிகபட்ச பலனைப் பெற வெல்லத்தை நெய்யுடன் சேர்த்து மதிய உணவிற்கு பின் சாப்பிட வேண்டுமாம்.

மல்லி விதையுடன்...
மல்லி விதைகளில் பொட்டாசியம், மாங்கனீசு, கோலைன் மற்றும் பீட்டா-கரோட்டீன் போன்றவை உள்ளது. 2-3 மல்லி விதைகளை சிறிது வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால், மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் வயிற்று வலி குறையும் மற்றும் இரத்தப்போக்கு பிரச்சனையும் நீங்கும்.

சோம்புடன்...
பொதுவாக சோம்பு வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். அதிலும் அந்த சோம்பை, வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால், வாய் துர்நாற்றம் நீங்கி, வாய் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, பற்களில் உருவாகும் மஞ்சள் கறைகளும் குறையும்.

பிசினுடன்...
பாதாம் பிசின் லட்டு குளிர்காலத்தில் சாப்பிட ஏற்ற அற்புதமான ஒரு ஸ்வீட். இது பாதாம், உலர் பழங்கள், கோதுமை, பிசின் மற்றும் வெல்லம் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பிரபலமான குளிர்கால ஸ்வீட். இதை சாப்பிடுவதால் எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கும் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பிட்டால் தாய்ப்பால் ஊறும்.

எள்ளு விதையுடன்...
எள்ளு விதைகளில் கால்சியம், மக்னீசிம், மாங்கனீசு, ஜிங்க் போன்றவை உள்ளது. மேலும் இந்த விதைகள் ஆற்றலின் சக்தியாகும் மற்றும் எள்ளு விதைகளை வெல்லத்துடன் சேர்த்து எடுக்கும் போது, அது குளிர்காலத்தில் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளான சளி, காய்ச்சல் மற்றும் இருமலின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

வேர்க்கடலையுடன்...
வேர்க்கடலையில் பயோடின், காப்பர், நியாசின், ஃபோலேட், மாங்கனீசு, வைட்டமின் ஈ, தியாமின், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளது. வேர்க்கடலையை வெல்லத்துடன் சேர்த்து குளிர்காலத்தில் சாப்பிடுவதால், உடல் வலிமையாக இருப்பதோடு, பசியின்மையும் சீராகும். மேலும் இது ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள ஆவலைக் குறைக்கும்.

வெந்தயத்துடன்....
குளிர்காலத்தில் தலைமுடி வறட்சியுடன் பொலிவிழந்து காணப்படும். அதோடு பலர் தலைமுடி உதிர்வாலும் அவஸ்தைப்படுவார்கள். உங்களுக்கு தலைமுடி நீளமாகவும், வலிமையுடனும், பொலிவோடும் இருக்க வேண்டுமானால், தினமும் வெந்தய விதையுடன் வெல்லத்தை சேர்த்து சாப்பிடுங்கள்.

மஞ்சளுடன்...
உணவுகளில் பொதுவாக சேர்க்கப்படும் ஒரு மசாலாப் பொருள் தான் மஞ்சள். ஆயுர்வேத மருத்துவத்தில் கூட மஞ்சள் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மஞ்சளில் உள்ள சக்தி வாய்ந்த குர்குமின் என்னும் பொருள் தான் காரணம். அதுவும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் வெல்லத்தை வெதுவெதுப்பான பாலில் சேர்த்து இரவு தூங்கும் முன் குடித்தால், நோயெதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்கும்.

சுக்கு பொடியுடன்...
வெல்லத்தை சுக்குடன் சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சலில் இருந்து விரைவில் குணமாவதோடு, அலர்ஜி பிரச்சனையும் குறையும். விருப்பமுள்ளவர்கள், வெல்லம் மற்றும் சுக்கு கொண்டு சட்னி தயாரித்து, உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.