For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் இந்த நேரத்தில் தலைவலிச்சா அது மூளை புற்றுநோயோட முக்கிய அறிகுறியாம்... உஷாரா இருங்க...

தொடர்ச்சியான தலைவலியானது ஒற்றைத் தலைவலி, சைனஸ் மற்றும் சில சமயங்களில் மூளைக் கட்டியின் அறிகுறியாக இருக்கலாம் என்பது தெரியுமா?

|

தலைவலி அன்றாடம் பலர் சந்திக்கும் ஓர் பொதுவாக பிரச்சனையாக கருதப்படுகிறது. ஆனால் அந்த தலைவலி பல பெரிய பிரச்சனைகளின் முக்கிய அறிகுறியாகவும் உள்ளது என்பதை ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். பொதுவாக அளவுக்கு அதிகமாக ஒருவர் டென்சனாவதால் தலைவலி வரும். தலைவலி இருந்தால் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்தை செலுத்துவது என்பது சிரமமாக இருக்கும்.

Is Headache a Symptom of Brain Tumour In Tamil

நீங்கள் அடிக்கடி தொடர்ந்து தலைவலியை அனுபவிக்கிறீர்களா? அதுவும் ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் தவைலியால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் சற்று தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். தொடர்ச்சியான தலைவலியானது ஒற்றைத் தலைவலி, சைனஸ் மற்றும் சில சமயங்களில் மூளைக் கட்டியின் அறிகுறியாக இருக்கலாம் என்பது தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தலைவலி மூளைக் கட்டியின் அறிகுறியா?

தலைவலி மூளைக் கட்டியின் அறிகுறியா?

மூளைக் கட்டி என்பது மூளை அல்லது அதைச் சுற்றிய பகுதியில் அசாதாரணமாக வளர்ந்த செல்களின் அசாதாரண வளர்ச்சியாகும். மூளை கட்டியை மூளை புற்றுநோய் என்றும் அழைப்பார்கள். மூளை கட்டிகள் பெரிதாக இருந்தால் அது மூளையில் உள்ள நரம்புகள், இரத்த நாளங்கள் அல்லது திசுக்களை அழுத்தி, அதனால் தலைவலி ஏற்படுவதோடு மூளையின் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம்.

மூளை கட்டியின் அறிகுறிகள்

மூளை கட்டியின் அறிகுறிகள்

மூளையில் கட்டி இருந்தால், அது பல்வேறு அறிகுறிகளை வெளிக்காட்டும். அவையாவன:

* கடுமையான மற்றும் தொடர்ச்சியான தலைவலி

* வாந்தி/குமட்டல்

* மங்கலான பார்வை

* சமநிலை இழப்பு

* சோர்வு

* பகுப்பாய்வு முடக்கம்

* அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப கீழ்படிய முடியாமை

* நடத்தையில் மாற்றங்கள்

* வலிப்பு

* கேட்பதில் பிரச்சனை

தலைவலி மற்றும் மூளை கட்டி

தலைவலி மற்றும் மூளை கட்டி

மூளையில் கட்டி இருந்தால் சந்திக்கும் தலைவலியானது தொடர்ந்து இருக்கும் மற்றும் இம்மாதிரியான தலைவலி இரவு மற்றும் அதிகாலையில் மோசமாக இருக்கும். சிலருக்கு தலைவலி மந்தமானது முதல் கூர்மையான வலி வரை இருக்கும். அதோடு கட்டி உள்ள பகுதியைப் பொறுத்து இருமல், தும்மலின் போது வலி கடுமையாக இருக்கும். மூளை கட்டியால் ஏற்படும் தலைவலியை ஆரம்பத்திலேயே கண்டறிந்து மருந்துகளை எடுத்து வந்தால் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் முற்றிய நிலையில் கட்டிகளானது மருந்துகளை எதிர்க்கும்.

மூளை கட்டிக்கான காரணங்கள்

மூளை கட்டிக்கான காரணங்கள்

மூளை புற்றுநோய்க்கான சரியான காரணங்கள் தெரியவில்ல. அதிகப்படியான ரேடியேஷன் வெளிப்பாடு அல்லது குடும்ப வரலாறு மூளை புற்றுநோயின் ஆபத்தை அதிகரிக்கலாம். மூளை புற்றுநோயின் வளர்ச்சியில் பங்கு வகிக்கும் பிற காரணிகள் பின்வருமாறு:

* வயது அதிகரிப்பது

* நீண்ட காலமாக புகைப்பிடிப்பது

* பூச்சிக் கொல்லி, களைக்கொல்லி மற்றும் உரங்களின் வெளிப்பாடு

* ஈயம், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் பெட்ரோலியம் போன்ற தனிமங்களுடன் பணிபுரிவது

* எப்ஸ்டீன்-பார் வைரஸ் தொற்று அல்லது மோனோநியூக்ளியோசிஸ் இருப்பது

சிகிச்சைகள்

சிகிச்சைகள்

உடலில் வரும் கட்டிகள் உயிரைப் பறிக்கும் அல்லது கோமா நிலைக்கு தள்ளிவிடும் என்ற பொதுவான தவறான கருத்து மக்களிடையே உள்ளது. இருப்பினும், பெரும்பாலான சமயங்களில் மூளை கட்டிக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு, நோயாளிகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம். மூளையில் உள்ள கட்டிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் கட்டி உள்ள இடம், அளவு மற்றும் வகை ஆகியவற்றின் அடிப்படையில் சிகிச்சையை மேற்கொள்வார்கள்.

சில சிகிச்சை முறைகள்

சில சிகிச்சை முறைகள்

* மூளை கட்டியை அறுவை சிகிச்சை மூலம் நீக்க முடிந்தால் செய்யப்படும்.

* கதிர்வீச்சு சிகிச்சையில் அதிகளவு எக்ஸ்-கதிர்களைப் பயன்படுத்தி கட்டிகளை அழிப்பது அல்லது சுருங்கச் செய்வது.

* கீமோதெரபியின் போது உடலில் உள்ள புற்றுநோய் செல்கள் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளால் அழிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையின் போது மருந்துகள் நரம்புகள் வழியாக ஏற்றப்படலாம் அல்லது மாத்திரையாக கொடுக்கப்படலாம். சில சமயங்களில், புற்றுநோய் கட்டியை சுருக்குவதற்கு அறுவை சிகிச்சைக்கு முன் மருத்துவர்கள் இதைப் பயன்படுத்துகின்றனர். மாற்றாக, எஞ்சியிருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்க அல்லது மீதமுள்ள கட்டி செல்கள் வளராமல் தடுக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு பரிந்துரைக்கலாம்.

* உயிரியல் சிகிச்சை என்று அறியப்படும் இம்யூனோதெரபி, புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், திறம்பட செயல்படுவதற்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பயன்படுத்துகிறது.

* டார்கெட் தெரபி அல்லது இலக்கு சிகிச்சையானது புற்றுநோய் செல்களை மட்டும் குறிவைத்து அழிக்கிறது. கீமோதெரபியின் பக்க விளைவுகளை பொறுத்துக்கொள்வதில் சிக்கல் இருந்தால் இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Headache a Symptom of Brain Tumour In Tamil

Did you know constant headache can be a sign of underlying problems like migraine, sinus and also a tumour in some cases? Read on to know more...
Desktop Bottom Promotion