Latest Updates
-
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
சூரியன் ரிஷப ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும்
பெண்களே! 30 வயசு ஆயிடுச்சா.. அப்ப இந்த பரிசோதனைகளை கட்டாயம் எடுத்து பாருங்க..
இந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, 30 வயதை எட்டிய ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் எடுக்க வேண்டிய சில முக்கியமான பரிசோதனைகளைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
International Women's Day 2023: வயது அதிகரிக்கும் போது மனித உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. சொல்லப்போனால், வயது அதிகரிக்கும் போது நமது உடலின் மெட்டபாலிசம் மற்றும் உறுப்புக்களின் செயல்பாடுகள் மெதுவாகின்றன. இதன் விளைவாக சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே வயது அதிகரிக்க தொடங்கும் போது ஒவ்வொருவரும் தங்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். குறிப்பாக பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு அந்தந்த வயதில் எடுத்து பார்க்க வேண்டிய பரிசோதனைகளை தவறாமல் எடுக்க வேண்டும். இதனால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டு எளிதில் குணப்படுத்த முடியும்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, 30 வயதை எட்டிய ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் எடுக்க வேண்டிய சில முக்கியமான பரிசோதனைகளைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பரிசோதனைகளை செய்வதன் மூலம், பெண்களுக்கு ஏற்படும் பல நோய்களின் அபாயத்தைத் தடுக்க முடியும்.

தைராய்டு தூண்டும் ஹார்மோன் சோதனை (TSH Test)
இந்திய பெண்களில் சுமார் 60% பெண்கள் தைராய்டு பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். ஒருவரது தைராய்டு சுரப்பி சரியாக செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த எடுக்கும் சோதனை தான் TSH சோதனை. இந்த சோதனையில் தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோன்கள் போதுமான அளவில் இல்லாவிட்டால், அதற்கேற்ப சிகிச்சைகளை உடனே எடுக்கலாம். ஒருவரது தைராய்டு சுரப்பியில் பிரச்சனைகள் இருந்தால் தலைமுடி உதிர்வது, மன அழுத்தம் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி போன்ற அறிகுறிகள் தென்படும்.

பிஏபி ஸ்மியர் சோதனை (PAP Smear Test)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 74,000 பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறப்பதாக கூறப்படுகிறது. இதை தடுக்க வேண்டுமானால், கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுக்க வேண்டும். ஆனால் கர்ப்பப்பை வாய் புற்றநோயானது ஆரம்ப கட்டத்தில் எவ்வித அறிகுறிகளையும் காட்டாது, முற்றிய நிலையிலேயே அறிகுறிகளை வெளிக்காட்டும். எனவே 30 வயதை ஒரு பெண் அடைந்துவிட்டால், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தவறாமல் பிஏபி ஸ்மியர் சோதனை எடுக்க வேண்டும். குறிப்பாக இந்த சோதனையை அடிக்கடி உடலுறவில் ஈடுபடும் பெண்கள் அவசியம் எடுக்க வேண்டும்.

முழு இரத்த எண்ணிக்கை (CBC)
அறிக்கை ஒன்றின் படி, இந்தியாவில் 15-49 வயதிற்குட்பட்ட சுமார் 51% பெண்கள் இரத்த சோகை என்னும் இரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்த சோகையை தடுக்க வேண்டுமானால், பெண்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் அளவை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அதற்கு சிபிசி என்னும் சோதனையை எடுத்து பார்க்க வேண்டும்.

வைட்டமின் டி மற்றும் கால்சியம் சோதனை
ஆண்களை விட பெண்களுக்கு தான் எலும்பு தொடர்பான பிரச்சனைகள் அதிகம் வருகின்றன. குறிப்பாக ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு நோயைத் தடுக்க எலும்புகள் நன்கு அடர்த்தியாக இருக்க வேண்டும். உலகளவில் இந்த ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் சுமார் 200 மில்லியன் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே எலும்புகளின் ஆரோக்கியத்தை கண்காணிக்க வைட்டமின் டி மற்றும் கால்சியம் அளவு சோதிக்கும் பரிசோதனையை எடுக்க வேண்டும். இப்படி சீரான இடைவெளியில் இந்த சோதனையை செய்தால், எலும்பு நோயின் அபாயத்தைத் தடுக்கலாம்.

வைட்டமின் பி12 மற்றும் ஃபோலேட் சோதனை
வைட்டமின் பி12 மற்றும் ஃபோலேட் ஆகியவை பி வைட்டமின் குழுவைச் சேர்ந்தது. இந்த வைட்டமின்கள் உடலில் போதுமான அளவில் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இவை இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்ச்சி, திசுக்கள் மற்றும் செல்களை சரிசெய்வது மற்றும் டிஎன்ஏ-வின் தொகுப்பு ஆகியவற்றை எளிதாக்குகின்றன. இந்த வைட்டமின்கள் குறைவாக இருந்தால், அது இரத்த சோகைக்கு வழிவகுக்கும். சைவ உணவாளர்களுக்கு தான் பெரும்பாலும் இந்த வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும். ஏனெனில் இந்த வைட்டமின்கள் முட்டை, இறைச்சி, சிக்கன் ஆகியவற்றில் அதிகம் காணப்படுகிறது. எனவே இந்த வைட்டமின்கள் சரியான அளவில் உள்ளதா என்பதை அறிய இரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.

லிப்பிட் ப்ரொஃபைல் (Lipid Profile)
தற்போதைய உணவுப் பழக்கத்தால், உடலில் கொழுப்புக்களின் அளவு அதிகரிக்கிறது. ஆனால் நிறைய பேர் கொழுப்புக்கள் முற்றிய நிலையில் மருத்துவரை அணுகுகிறார்கள். கொழுப்புக்கள் அதிகரித்தால், அது இதய நோயின் அபாயத்தை அதிகரித்துவிடும். எனவே ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் 20 வயது முதல் ஒவ்வொருவரும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை லிப்பிட் ப்ரொஃபைல் சோதனையை செய்து கொள்ள அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் பரிந்துரைக்கிறது. இந்த லிப்பிட் ப்ரொஃபைல் என்பது கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவை கண்டறியப் பயன்படுத்தப்படும் ஒரு இரத்த பரிசோதனையாகும். இந்த சோதனையை பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் எடுத்து பார்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications











