Latest Updates
-
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
வெளியிடங்களுக்குச் சென்றால் ஏற்படும் பதட்டத்தைத் தடுப்பது எப்படி?
சில மனிதர்கள் கூட்டமான இடங்களில் அல்லது சத்தம் அதிகம் உள்ள இடங்களில் பய தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
மன ரீதியாக பாதிப்பிற்குள்ளான மனநலக் கோளாறு உள்ளவர்கள் பொது இடங்களில் பழகுவதில் சில சிக்கல்கள் உள்ளன. மேலும் அத்தகையவர்கள் சில நேரங்களில் பதட்டத் தாக்குதலை அனுபவிக்கும் போது பிரச்சனை இன்னும் சிக்கலாக மாறுகிறது. இந்த வகை மனிதர்களை நீங்கள் எங்கேனும் சந்தித்ததுண்டா?

சில மனிதர்கள் கூட்டமான இடங்களில் அல்லது சத்தம் அதிகம் உள்ள இடங்களில் பய தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இந்த நேரத்தில் அவர்கள் மூச்சு விடுவதில் பாதிப்பு உண்டாகிறது, குமட்டல் உணர்வு ஏற்படுகிறது, தொடை கரகரப்பு ஏற்படுகிறது, அதிக வியர்வை வழியும் நிலை உண்டாகிறது. அப்போது அந்த நபருடன் இருக்கும் மற்றவர்களுக்கு அவரை பாதுகாக்கும் பொறுப்பு அதிகமாகிறது. அதனால் இந்த வகை பதட்ட தாக்குதலுக்கு ஆளாகும் நபரை சிறந்த வகையில் இந்த சூழ்நிலையை அணுக வைக்கக் கூடிய சில குறிப்புகளை இப்போது காணலாம்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் உதவியை நாடலாம்
நீங்கள் பொது இடத்தில் அல்லது நெரிசல் அதிகமான இடத்தில் இருக்கும் போது உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினரை நம்புவதில் எந்த தவறும் இல்லை. நீங்கள் பதட்டமாக இருக்கும் போது அவர்களிடம் வெளிப்படையாக பேசுங்கள், உங்கள் உணர்வைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள். பதட்டத் தாக்குதலுக்கான சில அறிகுறிகள் தென்பட்டால் அவரிடம் அதைப் பற்றி கூறுங்கள். இந்த நிலை பற்றிய எந்த ஒரு பயம் மற்றும் பதட்டம் கொள்ளாமல் உங்கள் நண்பர் அல்லது உறவினருடன் அந்த சூழ்நிலையை பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்களுடன் பேசும் போதும் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் போதும் ஒரு ஆசுவாச உணர்வு உங்களுக்கு கிடைக்கும்.

தாக்குதலுக்கான காரணத்தை தவிர்த்திடுங்கள் மற்றும் அமைதியாக இருங்கள்
உங்கள் பதட்டத்தை அதிகரிக்கும் சூழ்நிலையை தவிர்த்திடுங்கள். அதிகரித்த மனஅழுத்தத்தில் இருந்து உங்களை பாதுகாத்துத் கொள்ளுங்கள். உங்களுக்கு கூட்ட நெரிசல் பற்றிய பதட்டம் இருந்தால் அதில் இருந்து சற்று ஒதுங்கி இருங்கள். மற்றவர்கள் சண்டையை பார்க்கும் போது ஒரு வித பய தாக்குதல் உங்களுக்கு ஏற்படும் என்றால் அத்தகைய சூழ்நிலையில் இருந்து தள்ளி இருங்கள். ஒட்டுமொத்தமாக முடிந்த அளவு உங்களுக்கு டென்சன் கொடுக்கும் சூழலை புறக்கணியுங்கள்.

நிறைய மக்களோடு இருங்கள்
எல்லாவற்றிக்கும் வெளிப்படையாக இருப்பதால் எல்லாவற்றையும் எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும். எப்போதும் ஒரு குழுவாக இருக்க முயற்சியுங்கள். கூட்டத்தில் இருந்து உங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டாம். இதனால் பதட்டத் தாக்குதலை எதிர்த்து போராடும் திறன் உங்களுக்குள் அதிகரிக்கும். இப்படி செய்வதால் அத்தகைய சூழலை சமாளிக்கும் தன்மை மெதுவாக உங்கள் மனதிற்கு உண்டாகும். இதனை தொடர்ந்து செய்து வருவதால் பொது இடங்களில் உண்டாகும் பய தாக்குதலை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.

நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள்
உங்கள் பதட்டத் தாக்குதலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் முதல் வேலையாக ஒரு நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். இந்த உணர்வு குறித்து கவலை கொண்டு நேரத்தை வீணாக்காமல் மருத்துவர் கூறும் அறிவுரையை கேளுங்கள். உளவியல் மருத்துவரிடம் பொது இடங்களில் உண்டாகும் பதட்டத் தாக்குதல் குறித்து வெளிப்படையாக பேசி அதனை கையாள்வதற்கான உபாயத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை அல்லது கஷ்டம் இருந்தால் அதனை உங்கள் வீட்டில் இருப்பவர்கள் அல்லது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். எப்போதும் தனியாக இருக்காமல் முடிந்த அளவு குடும்பத்தினர் அல்லது நண்பர்களோடு இருங்கள்.

எப்படி இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள தயாராக இருப்பது?
இந்த வகையான சூழ்நிலை உங்களுக்கு அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டிருந்தால் இனி எப்போதும் இத்தகைய சூழ்நிலைக்கு தயாராக இருங்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அல்லது குழுவில் பேசும் போது அல்லது விளக்கவுரை ஆற்றும் போது பதட்டத் தாக்குதல் குறித்து கவலை கொள்ள வேண்டாம். அதே சமயம், சிறிது நேரம் உங்கள் பய உணர்வைக் கட்டுப்படுத்த நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும். இந்த சூழ்நிலையில் உங்களுடன் நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை வைத்துக் கொள்வது நல்லது. இவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை உங்களுக்கு நிவாரணத்தை வழங்க உதவும். இதனை தொடர்ந்து செய்து வருவதால், எந்த சூழ்நிலையிலும் உங்கள் உணர்வைக் கட்டுப்படுத்தும் நிலை உங்கள் மனதிற்கு உண்டாகலாம்.



Click it and Unblock the Notifications