For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இத நீங்க தொடர்ந்து சாப்பிட்டா... உங்க பல்லுக்கு நல்லது இல்லையாம்... இரத்த உறைவும் ஏற்படுமாம் தெரியுமா?

புளிப்பு புளியை சாப்பிடுவது உங்கள் பல் ஆரோக்கியத்தை கெடுக்கும் என்று நிபுணர்கள் கூறுவதை நம்புங்கள். புளி உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பல் ஆரோக்கியத்தையும் எவ்வாறு பாதிக்கிறது

|

குழந்தை பருவத்தில் நாம் அனைவரும் புளியை மரத்திலிருந்து பறித்து சாப்பிட்டிருப்போம். அதன் சுவை குழந்தை பருவம் முதல் இன்று வரை நமக்கு பிடிக்கும். அவை மட்டுமல்லாமல், பெரும்பாலும் இந்திய உணவுகளில் முக்கியமாக சேர்க்கப்படும் உணவு பொருளாகவும் புளி உள்ளது. துவர்ப்பு மற்றும் புளிப்பு போன்ற உடனடி ருசியைக் கொடுத்த சிறந்த மிட்டாயாகவும் இருக்கிறது. பெரும்பாலான குழந்தைகளுக்கு, புளியை ஒரு சிட்டிகை உப்பு மற்றும் மிளாகாய் பொடி சேர்த்து ருசிப்பது குழந்தை பருவத்தில் மிகவும் விரும்பப்படும் விருந்தாக இருந்தது. ஆனால் உங்கள் பல் ஆரோக்கியம் கெட்டுப்போவதற்கு இந்த சிறுவயது பழக்கங்கள் காரணமாக இருக்கலாம் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

how-tamarind-can-affect-your-dental-health-in-tamil

புளிப்பு புளியை சாப்பிடுவது உங்கள் பல் ஆரோக்கியத்தை கெடுக்கும் என்று நிபுணர்கள் கூறுவதை நம்புங்கள். புளி உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பல் ஆரோக்கியத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை பற்றி இங்கே காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புளி

புளி

காலங்காலமாக, புளி இந்திய சமையல் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. சட்னிகளுக்கு சுவையின் திருப்பத்தை சேர்ப்பதில் இருந்து காய்கறி, கறி மற்றும் இனிப்புகளுக்கு ஒரு நுட்பமான சுவையைக் கொடுப்பது வரை, உணவில் முக்கிய பங்கை வகிக்கிறது புளி. ஒவ்வொரு இந்திய உணவு வகைகளும் இந்த புளியை தங்கள் சுவையான உணவுகளில் சேர்க்கும் அற்புதமான வழியைக் கொண்டுள்ளனர். ஆனால் இந்தப் பழத்தின் சுவைக்குப் பிறகு துவர்ப்பும், கசப்பும், சற்றே இனிப்பும், அதிக அளவில் உட்கொண்டால் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும்.

புளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

புளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

புளியில் வைட்டமின் பி1 (தியாமின்), வைட்டமின் பி3 (நியாசின்), பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்துகள் உள்ளன. புளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூளையின் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தவும், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவும் உதவுகிறது.

இது நல்லதா கெட்டதா?

இது நல்லதா கெட்டதா?

ஆரோக்கிய நன்மைகள் பல நிறைந்திருப்பினும், இந்த பழத்தை அதிகமாக உட்கொள்வது அதன் அமில தன்மை காரணமாக செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் தூண்டலாம். அதுமட்டுமல்லாமல், புளியை அதிகமாக உட்கொள்வது ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கும் மற்றும் அரிதாக இரத்த ஓட்டத்தை குறைக்கலாம் அல்லது இரத்த நாளங்களை முற்றிலுமாகத் தடுக்கலாம்.

புளி எவ்வாறு பல் ஆரோக்கியத்தை பாதிக்கும்?

புளி எவ்வாறு பல் ஆரோக்கியத்தை பாதிக்கும்?

புளி அதிக புளிப்புச் சுவை கொண்டது, அதை அதிகமாக உட்கொண்டால், அதன் அமிலத்தன்மையின் காரணமாக பற்சிப்பி அரிக்கப்பட்டு உங்கள் பல் ஆரோக்கியத்தை கெடுக்கும். பற்சிப்பி என்பது அடிப்படையில் வெளிப்புற அடுக்கு மற்றும் பற்களைப் பாதுகாக்கும் கடினமான திசு ஆகும். பல் நிபுணர்களின் கூற்றுப்படி, பற்சிப்பி பற்களின் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. மேலும், புளி சாப்பிடுவது பற்களின் தோற்றத்தையும் பாதிக்கிறது.

புளியின் பக்க விளைவு என்ன?

புளியின் பக்க விளைவு என்ன?

இந்த பழத்தின் உட்பொருட்களுக்கு உணர்திறன் உள்ளவர்கள் நிறைய பேர் உள்ளனர். மேலும் இதை உட்கொள்வதன் மூலம் சொறி, அரிப்பு, வீக்கம், கூச்ச உணர்வு, தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி, மூச்சுத் திணறல் போன்ற பல அறிகுறிகளை நீங்கள் அனுபவிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Tamarind can affect your dental health in tamil

How Tamarind can affect your dental health in tamil
Story first published: Saturday, September 10, 2022, 17:14 [IST]
Desktop Bottom Promotion