Latest Updates
-
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா?
ஆண்களுக்கு சிறுநீர் மிகவும் சூடாக வெளியேறுவதற்கு காரணம் என்ன தெரியுமா?
சூடாக சிறுநீர் வெளியேறும் நிலையை "டைசூரியா" என்று குறிப்பிடுவர். ஆண்- பெண் இருவரும் இந்த நிலையால் பாதிக்கப்படலாம்.
உடலில் இருந்து உப்பு, நீர் மற்றும் கழிவுகள் சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. சிறுநீர், சிறுநீர்ப்பையில் சேமிக்கப்படுகிறது. பொதுவாக இதன் வெப்பநிலை உடலின் சராசரி வெப்பநிலையான 98.6 °C மட்டுமே இருக்கும். எனவே உடலிலிருந்து சிறுநீர் வெளிப்படும் போது சற்று வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும்.

மேலும் குளிர்ச்சியான வெப்பநிலையில், சிறுநீர் வெளியேற்றப்படும் போது ஆவி வெளிவருவது இயல்பான அறிகுறியாகும். ஆனால் இயல்பான வெப்பநிலையை விட சற்று அதிக சூடாக சிறுநீர் வெளியேறுவதை ஒரு நபர் உணர்ந்தால், அதனை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இப்படி சூடாக சிறுநீர் வெளியேறும் நிலையை "டைசூரியா" என்று குறிப்பிடுவர். ஆண்- பெண் இருவரும் இந்த நிலையால் பாதிக்கப்படலாம்.
ஆண்களுக்கு சூடான சிறுநீர் வெளியேற்றம் ஏற்படுவதற்கான காரணம் , அடையாளம் மற்றும் அதற்கான சிகிச்சைப் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.

ஆண்களுக்கு சிறுநீர் மிகவும் சூடாக வெளியேறுவதற்கான காரணங்கள்
சுக்கிலவழற்சி (Prostatitis)
இது ஆண்களில் சிறுநீர்ப்பைக்கு கீழே நேரடியாக அமைந்துள்ள புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கம் மற்றும் அழற்சி ஆகும். பாக்டீரியா தொற்று காரணமாக இந்த நிலை அடிக்கடி உண்டாகிறது. புரோஸ்டேடிடிஸ் உள்ள ஆண்கள் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அல்லது வலி உணர்வை உணர்வார்கள். மேலும் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் மாற்றங்களை உணர்வார்கள்.

விரைமேல் நாள அழற்சி (Epididymitis)
விந்தணுக்களை சேமித்து வைக்கவும், அவற்றை சுமந்து செல்லவும் விந்தகத்தின் பின்புறம் அமைந்திருக்கும் ஒரு குழாய் எபிடிடிமிஸ். இந்த குழாயில் உண்டாகும் அழற்சி எபிடிடிமிடிஸ். இந்த குழாயில் ஏற்படும் தொற்று சிறுநீர் கழிக்கும் போது வலி மிகுந்த எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். இந்த நிலை பொதுவாக ஒரு பாக்டீரியா தொற்று அல்லது அறுவை சிகிச்சையால் ஏற்படுகிறது.

அறிகுறிகள்
1. காய்ச்சல்
2. பிறப்புறுப்பில் வீக்கம்
3. ஆண்குறியிலிருந்து வெளியேற்றம்
4. அடர்நிறத்தில் சிறுநீர் வெளியேற்றம்
5. துர்நாற்றத்துடன் கூடிய சிறுநீர் வெளியேற்றம்
6. குமட்டல் மற்றும் வாந்தி
7. சிறுநீர் கழிப்பதில் சிரமம்
8. முதுகு மற்றும் அடிவயிற்றில் வலி

மருத்துவரை எப்போது பார்க்கலாம்?
வலியுடன் கூடிய எரிச்சல் மிகுந்த சிறுநீர் வெளியேற்றத்தை நீங்கள் அனுபவித்தால் மருத்துவரை அணுகலாம். இயல்பை விட அதிக சூடாக சிறுநீர் வெளியேறினால் மருத்துவரை உடனடியாக சந்திக்கலாம்.

சிகிச்சை
சூடான சிறுநீரின் காரணத்தைப் பொறுத்து அதன் சிகிச்சை அமையும். ஆண்களுக்கு சூடான சிறுநீர் வெளியேறுவதற்கு சிகிச்சையளிப்பதில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயனுள்ளதாக இருக்கும். மேலும், அதிகமான அளவு தண்ணீரைக் குடிப்பதால் சிறுநீரில் இருந்து பாக்டீரியாக்களை வெளியேற்ற முடியும். இதனால் சூடான சிறுநீருக்கு சிகிச்சையளிக்க முடியும்.



Click it and Unblock the Notifications
