உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்க இந்த விஷயங்களைப் பின்பற்றினாலே போதும்!

உடலில் இரத்தத்தின் அழுத்தம் அதிகரிக்கும் போது, தமனிகளின் உட்புறத்தில் இருக்கும் மென்மையான திசுக்களில் கூடுதல் அழுத்தம் ஏற்படுத்துவதோடு, இரத்த நாளங்களைச் சேதப்படுத்தவும் செய்திடும்.

உடலில் இரத்த ஓட்டத்தின் அழுத்தம் அதிகரிக்கும் போது ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை உண்டாகிறது. இரத்த அழுத்தம் என்பது, இதயத்திலிருந்து தமனிகளுக்கு இரத்தத்தை தள்ளும் சக்தியாகும். சரியான மற்றும் சிறந்த இரத்த அழுத்த அளவு என்பது 120/80 மில்லிமீட்டர் குறைவாக இருக்க வேண்டும். இந்த அளவு அதிகரிக்கும் போது, இரத்த அழுத்தத்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர உடனடி கவனிப்பு தேவை என்பது புரிந்து கொள்ள வேண்டும்.

Home Remedies To Keep Hypertension At Bay In Tamil

இரத்த அழுத்தம் அதிகரித்தால் என்ன நடக்கும்? உடலில் இரத்தத்தின் அழுத்தம் அதிகரிக்கும் போது, அது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. இந்நிலையில் தமனிகளின் உட்புறத்தில் இருக்கும் மென்மையான திசுக்களில் கூடுதல் அழுத்தம் ஏற்படுத்துவதோடு, இரத்த நாளங்களைச் சேதப்படுத்தவும் செய்திடும். இதனால், இதயத்தில் கடுமையான சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, எப்போதும் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த அழுத்தம் அதிகரிப்பதன் அறிகுறிகள்

இரத்த அழுத்தம் அதிகரிப்பதன் அறிகுறிகள்

உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் எப்போதும் இரத்த அழுத்தத்தை கண்காணிக்க வேண்டியது அவசியம். உயர் இரத்த அழுத்த பிரச்சனை இதய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். ஒருவருக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது என்பதை குறிக்கும் சில அறிகுறிகள் உள்ளன.

* மங்கலான பார்வை

* தலைச்சுற்றல், மயக்கம்

* தலைவலி

* இதயத் துடிப்பு அதிகரிப்பு

* திடீர் மூக்கடைப்பு

* சுவாசிப்பதில் சிரமம்

* குமட்டல் அல்லது வாந்தி

இவை அனைத்தும் உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகளாகும். இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கவும், உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்கவும் உதவக்கூடிய சில எளிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பின்பற்றுவது நிச்சயமாக சிறந்த பலனை அளித்திடும். தவறாமல் முயற்சித்து பாருங்கள்...

தினசரி உடற்பயிற்சி

தினசரி உடற்பயிற்சி

தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது என்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுவது மட்டுமல்லாமல், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட முக்கிய உடல்நல சிக்கல்களை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. உடற்பயிற்சி செய்வதை தினசரி வழக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு, நீரிழிவு உட்பட இதயம் தொடர்பான பிற நோய்களின் அபாயங்கள் குறைகிறது.

டாஷ் (DASH) டயட்

டாஷ் (DASH) டயட்

டாஷ் டயட் முறையில், முக்கியமாக பருவகால பழங்கள், முழு தானியங்கள், கொட்டைகள் மற்றும் மீன், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் போன்றவை அடங்கும். இரத்த அழுத்தத்தின் முக்கிய அறிகுறிகளை நிர்வகிப்பதில் உணவு முறையும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான உணவு முறைகளில் (DASH) டாஷ் டயட், உடலில் சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

உப்பைக் குறைக்கவும்

உப்பைக் குறைக்கவும்

உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை உள்ளவர்கள் அனைவரும் மனதில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உணவில் அதிக உப்பு சேர்க்கக்கூடாது. ஏனெனில், உப்பில் அதிக அளவு சோடியம் உள்ளது. சோடியம் உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்க வழிவகுப்பதோடு, உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். உப்பு சேர்க்காமல் எப்படி சாப்பிடுவது என்று பலரும் கேட்பதுண்டு. உப்பிற்கு பதிலாக, உங்கள் உணவுகளில் சுவைக்காக மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துங்கள்.

உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும்

உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும்

உயர் இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய பிற ஆபத்து காரணிகளில் ஒன்று தான் உடல் பருமன். உயர் இரத்த அழுத்தத்திற்கும் உடல் பருமனுக்கும் என்ன தொடர்பு? நிபுணர்களின் கூற்றுப்படி, உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு, உள்ளுறுப்பு கொழுப்பு என்றும் அழைக்கப்படுகிறது. முக்கியமாக இது இதய ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கக்கூடும். உடல் எடை அதிகரிக்குத போது, அது நீண்ட காலத்திற்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

புகைப்பழக்கத்தை கைவிடவும்

புகைப்பழக்கத்தை கைவிடவும்

நீங்கள் உங்களது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த விரும்புகிறீர்கள் என்றால், முதலில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். ஆய்வுகளின் முடிவு படி, உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் புகைப்பழக்கத்தை கைவிடாமல் இருந்தால், அவர்களுக்கு ஆபத்தான உயர் இரத்த அழுத்த பிரச்சனை, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயமும் அதிகம் என்று கூறப்படுகிறது.

ஆல்கஹால் அருந்துவதைக் கட்டுப்படுத்தவும்

ஆல்கஹால் அருந்துவதைக் கட்டுப்படுத்தவும்

அளவிற்கு அதிகமாக மது அருந்துவது உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, மது பிரியர்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். மதுவை முழுவதுமாக கைவிடுவது கடினம் என்பவர்கள், அதை படிப்படியாக குறைத்து கொள்ள வேண்டும்.

மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்

மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்

அதிக மன அழுத்தம் இருப்பவர்களுக்கு சாதாரணமாகவே இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே, மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திக்க வேண்டியது அவசியம். மனஅழுத்தத்தை எவ்வாறு கட்டுக்குள் வைத்திருப்பது என்பதை ஒருவர் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்த தியானம் செய்ய முயற்சிக்கலாம், உங்கள் நண்பர்களுடன் அல்லது நெருங்கிய நபர்களுடன் மனம் விட்டு பேசலாம், பிடித்த இடத்திற்கு செல்லவும், வீட்டை விட்டு வெளியே சிறிது நேரம் நடைபயிற்சி செல்லலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, February 26, 2023, 12:05 [IST]
Desktop Bottom Promotion