Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
முதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா? அப்படின்னா இத செய்யுங்க...
கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்து வேலை செய்யும் போது, நம்மில் பலரும் கடுமையான முதுகு வலியால் அவஸ்தைப்படுவார்கள். ஆனால் முதுகு வலியை ஒருசில இயற்கை வைத்தியங்களின் மூலம் விரைவில் சரிசெய்யலாம்.
கொரோனா ஊரடங்கால் தற்போது பலரும் தங்கள் வீடுகளில் இருந்தே அலுவலக வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். அலுவலகத்தில் வேலை செய்யும் போது, நமக்கு சௌகரியமாக நாற்காலி, மேசை என அனைத்தும் இருக்கும். இதனால் எவ்வித இடையூறு மற்றும் அசௌகரியமின்றி அலுவலக வேலையை செய்வோம். ஆனால் வீட்டில் இருந்து வேலை செய்யும் போது, நம்மில் பலரும் படுத்துக் கொண்டு, வளைந்து உட்கார்ந்து கொண்டு என மோசமான நிலையில் அலுவலக வேலையை செய்வோம். இதன் விளைவாக பலரும் கடுமையான முதுகு வலியால் அவஸ்தைப்படுவார்கள்.

அதோடு ஏற்கனவே முதுகு வலி உள்ளவர்களாக இருந்தால், முதுகு வலி இன்னும் மோசமாக இருக்கும். முதுகு வலியானது நம்மை மிகுந்த அசௌகரியத்தை உணர வைத்து, அன்றாட வேலையைக் கூட செய்ய முடியாமல் திண்டாட வைக்கும். ஆனால் முதுகு வலியை ஒருசில இயற்கை வைத்தியங்களின் மூலம் விரைவில் சரிசெய்யலாம். இங்கு முதுகு வலியில் இருந்து விரைவில் விடுவிக்கும் சில கை வைத்தியங்கள் கொடுக்கப்படுள்ளன.

வழி #1
தேங்காய் எண்ணெயில், கற்பூரத்தைப் போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் சூடேற்றி இறக்கி குளிர வைத்து, அதை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை இரவில் தூங்க செல்வதற்கு முன் வலியுள்ள முதுகுப் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், முதுகு வலி காணாமல் போகும்.

வழி #2
ஒரு வாளியில் வெதுவெதுப்பான அல்லது ஓரளவு சூடான நீரில் யூகலிப்டஸ் ஆயிலை சில துளிகள் விட்டு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த நீரால் தினமும் குளித்து வந்தால், முதுகு வலி மட்டுமின்றி, உடல் வலியும் மாயமாய் மறையும். அதோடு, மன அழுத்தம் நீங்கி, மனம் புத்துணர்ச்சியுடனும், ரிலாக்ஸாகவும் இருக்கும்.

வழி #3
முதுகு வலி கடுமையாக இருக்கும் சமயத்தில், ஹாட் வாட்டர் பேக்கில் நல்ல சூடான நீரை ஊற்றி, முதுகுப்புறத்தில் வலியுள்ள இடத்தில் வைத்து உட்காருங்கள். இந்த சிகிச்சையால் முதுகு வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வழி #4
முதுகு வலி இருப்பவர்கள், தினமும் குளிப்பதற்கு முன் கடுகு எண்ணெயை முதுகுப் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 1 மணிநேரம் கழித்து குளிக்க வேண்டும். அதுவும் சுடுநீரில் தான் குளிக்க வேண்டும். இதனால் முதுகு வலி சற்று குறைந்திருப்பதை உணரலாம்.

வழி #5
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சில துளிகள் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், முதுகு வலி, உடல் வலி காணாமல் போவதோடு, சளி மற்றும் இருமல் பிரச்சனையும் அண்டாமல் இருக்கும்.

வழி #6
உங்களுக்கு டீ ரொம்ப பிடிக்குமானால், குடிக்கும் டீயில் இஞ்சியைத் தட்டிப் போட்டு கொதிக்க வைத்துக் குடியுங்கள். இது முதுகு வலியின் வாய்ப்பைக் குறைக்க உதவும்.

வழி #7
மூலிகை எண்ணெய்களைக் கொண்டு முதுகுப் பகுதியை தினமும் மசாஜ் செய்து வருவதன் மூலம், முதுகு வலியில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

வழி #8
ஒரு துணியை எடுத்துக் கொள்ளுங்கள். பின் உளுத்தம் பருப்பின் தோலை ஒரு வாணலியில் போட்டு நன்கு சூடாகும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். பின் அதை துணியில் போட்டு கட்டி, வலியுள்ள முதுகுப் பகுதியில் ஒத்தடம் கொடுங்கள். இது நிச்சயம் முதுகு வலியில் மாயத்தை உண்டாக்கும்.



Click it and Unblock the Notifications