Latest Updates
-
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா?
நீங்க சரக்கு அடிப்பீங்களா? அப்ப கட்டாயம் இத படிங்க...
பலர் மது அருந்தும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக சிப்ஸ், முந்திரி, வேர்க்கடலை, சோடா போன்றவற்றை உட்கொள்வார்கள். இவை உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெரியுமா?
இன்றைய காலகட்டத்தில் மது அருந்துவது சாதாரணமான ஒன்றாகிவிட்டது. எந்த ஒரு கொண்டாட்டம் அல்லது பார்ட்டியானாலும், மது அருந்துவது ஒரு வழக்கமாகிவிட்டது. இது தவிர வார விடுமுறை நாட்களில் மது அருந்துவதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். கேட்டால், உடல் அலுப்பைப் போக்குவதற்கு குடிப்பதாக கூறுவார்கள். மது அருந்துவது உடலுக்கு கேடு விளைவிக்கும் ஓர் கெட்ட பழக்கம். இதை அளவாக குடித்து, நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்டால் பிரச்சனை ஏதும் இல்லை.

ஆனால் மது அருந்தும் போது உட்கொள்ளும் சில ஸ்நாக்ஸ்கள் உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கின்றன என்பது தெரியுமா? ஆம், பலர் மது அருந்தும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக சிப்ஸ், முந்திரி, வேர்க்கடலை, சோடா போன்றவற்றை உட்கொள்வார்கள். இவை உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெரியுமா? சரி, அப்படியானால் மது அருந்தும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது, அப்படி சாப்பிட்டால் எம்மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம்.

சோடா மற்றும் பிற எனர்ஜி பானங்கள்
பொதுவாக ஆல்கஹாலுடன் பலர் சோடாவை சேர்த்துக் குடிப்பார்கள். ஆனால் உண்மையில், ஆல்கஹாலுடன் சோடா அல்லது பிற எனர்ஜி பானங்களை சேர்த்துக் குடிக்கக்கூடாது. ஏனெனில் ஆல்கஹால் உடல் வறட்சியை உண்டாக்கும். இந்நிலையில் சோடா பானங்களை சேர்த்துக் குடித்தால், அது இன்னும் தீவிரமாக்கும். ஆகவே ஆல்கஹால் குடிப்பதாக இருந்தால், அத்துடன் தண்ணீர் அல்லது ஐஸ் கட்டிகளை சேர்த்துக் குடிக்கலாம்.

வேர்க்கடலை மற்றும் முந்திரி
பல ரெஸ்டாரண்ட்டுகள் அல்லது பார்களில் சரக்கிற்கு சைடு டிஷ்ஷாக வேர்க்கடலை அல்லது முந்திரியைக் கொடுப்பார்கள். ஆனால் இவை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. பொதுவாக இவற்றில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது. இதை ஆல்கஹால் உடன் சேர்த்து உண்பது பசியுணர்வைக் கொன்று, மது அருந்திய பின் சரியாக சாப்பிட முடியாமல் போகும்.

காரமான பொருட்கள்
பொதுவாக ஆல்கஹால் அசிடிட்டியை உண்டாக்கும். இத்தகைய ஆல்கஹாலை குடிக்கும் போது அல்லது குடித்த பின்னர் காரமான உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும். சொல்லப்போனால், மது அருந்திய பின்னர் லேசான உணவுகளையே உண்ண வேண்டும். இதனால் எளிதில் உணவுகளானது செரிமானமாகி, உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். ஆகவே சரக்கு அடித்த பின்னர் பிரியாணி போன்றவற்றை சாப்பிடாதீர்கள்.

சிப்ஸ்
பெரும்பாலான மக்கள் மது அருந்தும் போது சிப்ஸ் சாப்பிடுவார்கள். இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சிப்ஸ் மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளை ஆல்கஹாலுடன் உட்கொண்டால், தாகம் அதிகமாக எடுக்கும் மற்றும் தாகத்தைக் குடிக்க அதிக ஆல்கஹால் குடிக்க நேரிடும். இதன் விளைவாக உடலில் நீரிழப்பு ஏற்பட்டு, உடல் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும்.

பிரட், பர்கர்
மது அருந்திய பின்னர் வயிறு உப்புசமாக இருக்கக்கூடாது என்று நினைத்தால், பிரட், பர்கர் போன்றவற்றை சாப்பிடாதீர்கள். ஏனெனில் இவை இரண்டிலுமே ஈஸ்ட் உள்ளது மற்றும் இது வயிற்றில் ஈஸ்ட் அளவை அதிகரித்து ஜீரணிக்க முடியாமல் செய்துவிடும். இதன் விளைவாக செரிமான பிரச்சனை அல்லது அதிகப்படியான கேண்டிடா வளர்ச்சியை ஏற்படுத்திவிடும்.

தக்காளி பிட்சா
பொதுவாக ஆல்கஹால் வயிற்றைக் காலியாக்கும் செயல்முறையைத் தாமதப்படுத்தும் மற்றும் கீழ் ஓசோபாகல் ஸ்பைன்க்டரில் பதற்றத்தைக் குறைத்து, ஆசிட் ரிஃப்ளக்ஸை ஏற்படுத்தும். இந்நிலையில் தக்காளி பிட்சாவை சாப்பிட்டால், அது நிலைமையை இன்னும் தீவிரமாக்கி நெஞ்செரிச்சல், GERD போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications