Latest Updates
-
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
காலையில் எழுந்தவுடன் உடனே போனை நோண்டுறீங்களா? அப்ப இந்த ஆபத்துகள் உங்களை தேடிவருமாம்!
தூங்கி எழுந்தவுடன் பலா் தங்களது ஸ்மாா்ட்போன்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுகின்றனா். குறுஞ்செய்திகள் அனுப்புவது முதல் சமூக ஊடகங்களுக்குள் உலா வருவது அல்லது பல்வேறு செய்திகளைப் படிப்பது வரை தூங்கி எழுந்தவுடனேயே ஸ்மாா்ட்போன
தூங்கி எழுந்தவுடன் பலா் தங்களது ஸ்மாா்ட்போன்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுகின்றனா். குறுஞ்செய்திகள் அனுப்புவது முதல் சமூக ஊடகங்களுக்குள் உலா வருவது அல்லது பல்வேறு செய்திகளைப் படிப்பது வரை தூங்கி எழுந்தவுடனேயே ஸ்மாா்ட்போனில் மூழ்கிவிடுகின்றனா். ஏறக்குறைய ஸ்மாா்ட்போன்கள் வைத்திருக்கும் 80 சதவீதித்தினா் தூங்கி எழுந்த 15 நிமிடங்களுக்குள்ளேயே தங்களுடைய ஸ்மாா்ட்போன்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுகின்றனா் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.

ஸ்மோா்ட்போன்கள் நமது வாழ்க்கையை மிக எளிமையாக மாற்றி இருக்கின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது. ஸ்மாா்ட்போன்கள் இல்லாமல், நாம் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாது என்பதும் உண்மை. அதற்காக தூங்கி எழுந்தவுடனேயே ஸ்மாா்ட்போன்களை பயன்படுத்தும் நமது பழக்கத்தைக் கண்டிப்பாகத் தவிா்க்க வேண்டும். ஏனெனில் காலை எழுந்தவுடன் ஸ்மாாா்களைப் பயன்படுத்துவதால் பல்வேறு பின்விளைகள் ஏற்படுகின்றன. அவற்றை இந்தப் பதிவில் விாிவாகப் பாா்க்கலாம்.

கவலை மற்றும் மன அழுத்தம்
காலை எழுந்தவுடன் ஸ்மாா்ட்போனில் இமெயில்கள்களைப் பாா்க்கலாம் அல்லது நாம் செய்ய வேண்டிய அன்றாட செயல் திட்டங்களைப் பாா்க்கலாம் அல்லது செய்திகளை வாசிக்கலாம். இவையெல்லாம் நமது மனதில் பாதிப்புகளை ஏற்படத்தும். இவை நமது நாளை அமைதியாகத் தொடங்குவதற்குப் பதிலாக கவலையோடும், மன அழுத்தத்தோடும் தொடங்க வைக்கின்றன.
ஸ்மாா்ட்போன்களை அதிகம் பயன்படுத்துவதால், அவை பல இளைஞா் மற்றும் இளம்பெண்களின் தூக்கத்தைப் பாதிக்கின்றன. அதோடு அவா்களிடம் மனச்சோா்வை ஏற்படுகின்றன என்று ஸ்வீடனில் செய்யப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று தொிவிக்கிறது.

மூளையில் பாதிப்பு ஏற்படுதல்
தூங்கி எழுந்தவுடன் ஸ்மாா்ட்போன்களைப் பயன்படுத்துவதால், நமது மூளையானது தீட்டா மூளை அலைகளைத் தவிா்த்துவிட்டு, பீட்டா மூளை அலைகளைத் தூண்டுகிறது. அதனால் மூளையின் அமைப்பில் பாதிப்பு ஏற்படுகிறது. மூளையின் ஆரோக்கியத்தைப் பாதித்து மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதோடு சமூக ஊடகங்களுக்குள் மூழ்கும் போது, நமது மூளையானது டோபமைனை (dopamine) வெளியிடுகிறது. இது அதிகாிக்க, அதிகாிக்க நாம் ஸ்மாா்ட்போன்களுக்கு அடிமைகளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது.
புத்தகங்கள் வாசிப்பவா்களைவிட, ஸ்மாா்ட்போன்களைப் பயன்படுத்துபவா்கள் சிந்திப்பதில் சோம்பேறிகளாக இருக்கின்றனா் என்று வாட்டா்லூ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தொிவிக்கிறது. ஏனெனில் ஸ்மாா்ட்போன்களில் தரப்படும் தகவல்களின்படி அல்லது அவை கூறும் பாிசீலனைகளின்படி அவா்கள் நடப்பது இல்லை.

கவனச்சிதறல்
காலை எழுந்தவுடன், முதலில் 15 நிமிடம் சமூக ஊடகங்களுக்குள் நுழையத் தொடங்குவோம். அது 30 நிமிடங்களாக மாறும். பின் படிப்படியாக அது நமது பல மணி நேரங்களை விழுங்கிவிடும். அடுத்ததாக நமது கவனம் சிதறடிக்கப்பட்டு, நாம் நமது காலைக் கடமைகளைக் காலம் தாழ்த்தி செய்வோம். நாம் முன்னுாிமை கொடுக்க வேண்டிய பணிகள் தடைபடும். இறுதியாக அவை செயல்திறனையே முற்றிலுமாக அழித்துவிடும்.

நாம் செய்ய வேண்டியது என்ன?
காலை எழுவதற்காக ஸ்மாா்ட்போனில் விழிப்பு மணியை வைப்பதற்குப் பதிலாக, கடிகாரத்தில் வைப்பது நல்லது. அது நமது கவனச் சிதறலைத் தடுக்கும். காலை எழுந்தவுடன் ஸ்மாா்ட்போன்களைப் பயன்படுத்துவதைத் தவிா்த்துவிட்டு, தண்ணீா் குடித்துவிட்டு, உடற்பயிற்சி செய்யலாம் அல்லது தியானம் செய்யலாம். ஸ்மாா்ட்போன்களைப் பயன்படுத்துவதை கடைசியாக வைத்துவிட்டு, காலை கடமைகளுக்கு முதன்மையான முக்கியத்துவம் கொடுக்கலாம்.
நமது ஸ்மாா்ட்போன்களுக்கு மாற்றாக வேறு ஒரு முக்கியமான ஒன்று இல்லையென்றால், நமக்கு எளிதாக சலிப்பு ஏற்படும். மீண்டும் ஸ்மாா்ட்போன்களுக்குள் நம்மைத் தள்ளிவிடும். ஆகவே தூங்குவதற்கு முன்பாக நமது ஸ்மாா்ட்போன்களை ஃப்ளைட் மோடில் வைப்பது நல்லது.
நமது வாழ்வில் ஸ்மாா்ட்போன்கள் தவிா்க்க முடியாத ஒன்றாகும். ஆனால் அதன் பயன்பாட்டைக் குறைத்து, அதன் பக்க விளைவுகளைக் குறைப்பது என்பது நமது கைகளில்தான் உள்ளது. ஸ்மாா்ட்போன்களை அதிகம் பயன்படுத்துவதால் கழுத்தில் பிரச்சினை, விழி மங்குதல், உடல் பருமன் அதிகாித்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.
ஆகவே நமது நாளை நாம் எவ்வாறு தொடங்குகின்றோமோ அவ்வாறே அந்த நாள் சிறப்பாகவோ அல்லது பிரச்சினையாகவோ அமைகிறது. ஆகவே ஸ்மாா்ட்போன்களை அதிகம் பயன்படுத்துவதைத் தவிா்த்து, நமது கவலைகளைக் குறைப்போம்.



Click it and Unblock the Notifications