Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
இதுவரை தேங்காய் பூ பாத்திருக்கீங்களா? இத சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
தேங்காயினுள் மொட்டுப் பகுதியைக் கண்டால், அதை தூக்கி எறியாமல் சாப்பிடுங்கள். ஏனெனில் அதைத் தான் தேங்காய் பூ என்பார்கள். இந்த தேங்காய் பூவில் நிறைய சத்துக்கள் உள்ளன மற்றும் இது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன.
நீங்கள் வீட்டில் தேங்காயை உடைக்கும் போது சில சமயங்களில் தேங்காயின் உள்ளே ஒரு மொட்டுப் போன்ற மென்மையான பகுதியைப் பார்த்திருப்பீர்கள். அப்படி பார்க்கும் போது, அந்த மொட்டுப் பகுதியை சாப்பிடலாமா மற்றும் அந்த தேங்காயை மீண்டும் பயன்படுத்தலாமா என்ற பல கேள்விகள் மனதில் எழுந்திருக்கும். மறுமுறை தேங்காயில் அந்த மொட்டுப் பகுதியைக் கண்டால், அதை தூக்கி எறியாமல் சாப்பிடுங்கள். ஏனெனில் அதைத் தான் தேங்காய் பூ என்பார்கள். இந்த தேங்காய் பூவில் நிறைய சத்துக்கள் உள்ளன மற்றும் இது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன.

Image Courtesy: Sakshi
தற்போது மார்கெட்டுகளில் இந்த மாதிரியான தேங்காய் பூ விற்கப்பட்டு வருகிறது. பலரும் இதை பார்த்திருப்பீர்கள். ஆனால் கவனித்திருக்கமாட்டீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துபவராயின் கட்டாயம் இந்த தேங்காய் பூவை சாப்பிட வேண்டும். சரி, அந்த தேங்காய் பூ உடலுக்கு அப்படி என்ன நன்மைகளை வழங்குகிறது என்பதை இக்கட்டுரையில் சற்று விரிவாக காண்போம் வாருங்கள்.

1. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
தேங்காய் பூவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உடலைத் தாக்கும் பல்வேறு வகையான நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடத் தேவையான ஆற்றலை நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வழங்குகிறது. குறிப்பாக இதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல், ஆன்டி-வைரல், ஆன்டி-பராசிடிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளை தீங்கு விளைவிக்கும் நோய்களை தடுப்பதன் மூலம், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

2. எடையை குறைக்க உதவும்
நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், தேங்காய் பூ சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், இது நீண்ட நேரம் பசியுணர்வைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் இதில் கலோரி மிகவும் குறைவு என்பதால், இது உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும். எனவே எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது ஒரு சிறந்த உணவுப் பொருள்.

3. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்
சர்க்கரை நோயாளிகள் தேங்காய் பூவை அச்சமின்றி சாப்பிடலாம். சொல்லப்போனால் இதை சர்க்கரை நோயாளிகளுக்கு நண்பன் என்றே சொல்லலாம். ஏனெனில் இது உடலில் அதிகப்படியான இன்சுலினை உற்பத்தி செய்ய உதவி புரிந்து, சர்க்கரை நோயின் ஆபத்தான பக்கவிளைவுகளை குறைக்க உதவுகிறது. அதுவும் ஏற்ற இறக்கமான இரத்த சர்க்கரை அளவைக் கொண்டிருந்தால், இந்த தேங்காய் பூவை சாப்பிட, உடனே கட்டுக்குள் வந்துவிடும்.

4. மெட்டபாலிசத்தை மேம்படுத்துகிறது
தேங்காய் பூ செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது மற்றும் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து எடை இழப்பிற்கு உதவுகிறது. ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளன. எனவே செரிமான பிரச்சனையைக் கொண்டவர்கள் இதை சாப்பிட, செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.

5. புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்கும்
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்படியானால் தேங்காய் பூ சாப்பிடுங்கள். ஏனெனில் இது புற்றுநோயின் அபாயத்க் குறைக்கிறது. ஏனெனில் இது ப்ரீராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை திறம்பட தடுக்கின்றன. இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், இது புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதோடு, இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடைய புற்றுநோயையும் தடுக்கிறது.

6. முதுமைத் தோற்றத்தை தடுக்கிறது
நீங்கள் நீண்ட காலம் இளமையாக காட்சியளிக்க விரும்புகிறீர்களா? உங்கள் தலைமுடியும், சருமமும் நீண்ட நாட்கள் அழகாக ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அப்படியானால் தேங்காய் பூ சாப்பிடுங்கள். இது சருமத்தில் தோன்றும் முதுமைக் கோடுகள், சரும சுருக்கங்கள், முதுமை புள்ளிகள் மற்றும் தளர்ந்த சருமம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, நீண்ட காலம் உங்களை இளமையாக வைத்திருக்கும்.



Click it and Unblock the Notifications