Latest Updates
-
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும
தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் 2 கிராம்பு சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
இரவில் கிராம்பை உட்கொள்வது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை போன்ற வயிற்றுப் பிரச்சினைகளை போக்க உதவும். மேலும்,இது உங்கள் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.
கிராம்பு என்பது பொதுவாக பயன்படுத்தப்படும் இந்திய மசாலா ஆகும். இது ஒரு உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதன் ஊட்டச்சத்து மதிப்பையும் அதிகரிக்கிறது. இது விஞ்ஞான ரீதியாக சைஜீஜியம் அமோடிகம் என அழைக்கப்படுகிறது, கிராம்பு ஆயுர்வேதத்தில் அவற்றின் மருத்துவ பண்புகளுக்காக பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. கிராம்புகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, எனவே உங்கள் உணவில் சுவையைச் சேர்க்க கிராம்பைப் பயன்படுத்துவது சில முக்கியமான ஊட்டச்சத்துக்களை அளிக்கும்.

ஒரு டீஸ்பூன் (2 கிராம்) கிராம்பு உங்களுக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. தவறாமல் பயன்படுத்தும் போது, கிராம்பு வயிற்று வியாதிகளிலிருந்தும் பல் மற்றும் தொண்டை வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்க உதவும். தூங்குவதற்கு முன்பு 2 கிராம்பு சாப்பிடுவதால் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

கிராம்பின் பயன்கள்
கிராம்பில் உள்ள யூஜெனோல் மன அழுத்தம் மற்றும் பொதுவான வயிற்று நோய்களைப் போக்க உதவுகிறது. இந்த சிறிய மசாலா பார்கின்சன் நோயைத் தடுக்க உதவும் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இதில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, தியாமின், வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

கிராம்புகளை உட்கொள்வதற்கான சிறந்த வழி
இரண்டு கிராம்புகளை மென்று சாப்பிடுவதும், படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதும் பின்வரும் சிக்கல்களிலிருந்து விடுபட உதவும்.

செரிமானத்தை மேம்படுத்தும்
இரவில் கிராம்பை உட்கொள்வது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை போன்ற வயிற்றுப் பிரச்சினைகளை போக்க உதவும். மேலும்,இது உங்கள் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.

முகப்பருவை தடுக்கிறது
கிராம்பு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் முகப்பருவைத் தடுக்க உதவும் ஒரு வகை சாலிசிலேட் உள்ளது.

பல் வலிக்கு நிவாரணம் அளிக்கிறது
கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்வது பல்வலி நீக்க உதவும். உங்கள் பற்களில் ஒரு கிராம்பையும் வைக்கலாம், நிவாரணம் பெற உங்களுக்கு வலி இருக்கும் இடத்தில்.

கை, கால் பிரச்சனை
தொண்டை புண் மற்றும் வலியைப் போக்க கிராம்பு உங்களுக்கு உதவும். கை, கால்கள் நடுங்கும் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் படுக்கைக்கு முன் 1-2 கிராம்புகளை உட்கொண்டு பிரச்சினையிலிருந்து நிவாரணம் பெறலாம்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
கிராம்புகளை தினமும் உட்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கொரோனா வைரஸ் பரவிவரும் இந்நேரத்தில் இது மிக அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் பிற ஆரோக்கிய நன்மைகளைப் பெறுவதற்கும் தூங்குவதற்கு முன் 2 கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் சாப்பிடுங்கள். இருமல், சளி, வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிலிருந்து விடுபட கிராம்பு உதவும்.



Click it and Unblock the Notifications
