Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கணுமா? இதோ ஓர் அற்புத தீர்வு...!
மலச்சிக்கல் பிரச்சனைக்கு எத்தனையோ இயற்கை தீர்வுகள் உள்ளன. அதில் ஒன்றாக ஆயுர்வேதம் கூறுவது நீரில் நெய் சேர்த்து உட்கொள்வது.
ஆரோக்கியமற்ற உணவுகள் சூழ்ந்துள்ள இக்காலத்தில் ஏராளமானோர் மலச்சிக்கல் என்னும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் நார்ச்சத்துள்ள உணவுகளை போதுமான அளவு உண்ணாதிருப்பது தான். ஆனால் தற்போதைய ஜங்க் உணவுகளின் மீதுள்ள மோகத்தால் நார்ச்சத்து உணவுகளை உண்பது குறைந்துவிட்டது. இதன் விளைவாக பெரும் அவஸ்தைக்குள்ளாக்கும் மலச்சிக்கலால் கஷ்டப்பட வேண்டியுள்ளது.

மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கும் ஆரம்ப காலத்திலேயே அதைக் கண்டறிந்து உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தால், இதன் மோசமான விளைவில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் சாதாரணமாக விட்டுவிட்டால், பின் மலச்சிக்கல் தீவிரமாகி மூலத்திற்கு வழிவகுத்துவிடும். சில சமயங்களில் நாள்பட்ட மலச்சிக்கல் குடல் புற்றுநோயைக் கூட உண்டாக்கும். எனவே ஆரம்பத்திலேயே இதற்கு தீர்வு கண்பதே நல்லது.
மலச்சிக்கல் பிரச்சனைக்கு எத்தனையோ இயற்கை தீர்வுகள் உள்ளன. அதில் ஒன்றாக ஆயுர்வேதம் கூறுவது நீரில் நெய் சேர்த்து உட்கொள்வது. இப்போது இது எப்படி மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது என்பதை விரிவாகக் காண்போம்.

நெய்
நெய் ஏராளமான நன்மைகளை உள்ளடக்கிய ஒரு சூப்பர் உணவு. இதை சரியான வழியில் உட்கொண்டால், அதன் முழு பலனைப் பெறலாம். நெய்யில் ப்யூட்ரிக் அமிலம் அதிகம் உள்ளது. இது தான் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுவதாக கூறப்படுகிறது. அதோடு ப்யூட்ரிக் அமிலம் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்துவதோடு, மலத்தின் இயக்கத்திற்கு உதவுகிறது. இது அடிவயிற்று வலி, வாய்வு, வீக்கம் மற்றும் பிற மலச்சிக்கலுக்கான அறிகுறிகளையும் குறைக்கிறது.
நெய் ஒரு சிறந்த மலமிளக்கி மட்டுமின்றி, எலும்புகளை வலிமையாக்க, உடல் எடையைக் குறைக்க மற்றும் நல்ல தூக்கத்தைப் பெறவும் உதவுகிறது. நெய் உடலுக்கு ஒரு உயவுப் பொருளை அளிக்கிறது மற்றும் கழிவுகளை வெளியேற்றி, குடல் பாதையை சுத்தப்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலின் அபாயத்தைக் குறைக்கிறது.

நெய் மற்றும் நீரை எவ்வாறு அருந்துவது?
200 மிலி வெதுவெதுப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றிக் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எப்போது செரிமான பாதை மற்றும் குடல் பகுதி கடினமாகி, வறட்சியடைகிறதோ, அப்போது தான் மலச்சிக்கல் ஏற்படுகிறது. நெய்யில் உள்ள உயவுப் பொருள் பண்புகள் செரிமான மண்டலத்தை மென்மையாக்க உதவி புரிந்து, உடலில் இருந்து கழிவுகளை எளிதில் வெளியேற்றச் செய்கிறது.
இப்போது மலச்சிக்கல் இருந்து உடனடியாக விடுவிக்கும் பிற எளிய இயற்கை வைத்தியங்களைக் காண்போம்.

பால் மற்றும் நெய்
ஒரு கப் சூடான பாலில் 1 அல்லது 2 டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்து, இரவு தூங்கும் முன் குடித்தால், மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம். நீங்கள் நீண்ட நாட்களாக மலச்சிக்கலால் அவஸ்தைப்பட்டு வருபவராயின், இந்த வழியை மேற்கொள்வது நல்ல பலனைத் தரும்.

வில்வ பழம்
1/2 கல் வில்வ பழத்தின் கூழ் உடன், 1 டீஸ்பூன் வெல்லத்தை சேர்த்து தினமும் மாலையில் இரவு உணவு உண்பதற்கு முன் சாப்பிட்டால், மலச்சிக்கல் இருந்து நிவாரணம் கிடைக்கும். வேண்டுமானால், புளி நீர் மற்றும் வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் வில்வ பழத்தின் சர்பத்தை கூட குடிக்கலாம்.

அதிமதுர வேர்
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் அதிமதுர வேர் பொடி மற்றும் ஒரு டீஸ்பூன் வெல்லம் சேர்த்து கலந்து குடிக்கவும். அதிமதுரம் குடலியக்க செயல்பாட்டை மேம்படுத்தக்கூடியவை. இருப்பினும் அதிமதுர வேரை உட்கொள்ளும் முன் ஆயுர்வேத நிபுணரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

வறுத்த சோம்பு
ஒரு டீஸ்பூன் வறுத்த சோம்பை இரவு தூங்கும் முன் வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து உட்கொண்டால், அது மிதமான மலமிளக்கியாக செயல்படும். சோம்பு விதைகளில் காணப்படும் எண்ணெய் இரைப்பை நொதிகளின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் செரிமானத்தைத் தொடங்க உதவி புரியும்.

அத்திப்பழம்
உலர்த்த அத்திப்பழத்தை வெதுவெதுப்பான நீரில் இரவு தூங்கும் முன் ஊற வைத்து, மற்நாய் காலையில் சாப்பிட, மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக இந்த வழி குழந்தைகளுக்கு ஏற்றது. அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. தினமும் அத்திப்பழம் சாப்பிட்டால், செரிமானம் சிறப்பாக இருக்கும்.

கடல் பாசி
கடல் பாசியை துண்டுகளாக்கி, பாலில் போட்டு வேக வைத்தால் ஜெல்லி போன்ற பொருள் கிடைக்கும். அதை சாப்பிடுவதன் மூலமும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.



Click it and Unblock the Notifications
