Latest Updates
-
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம் -
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா?
சளி பிடிச்சிருக்கும் போது இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. இல்ல ரொம்ப கஷ்டப்படுவீங்க...
சில உணவுகள் சளி, இருமல் பிரச்சனையை மோசமாக்கும். அந்த உணவுகளை தெரியாமல் இன்றும் பலர் உட்கொண்டு வருகிறார்கள். இப்போது சளி பிடித்திருக்கும் போது எந்த உணவுகளையெல்லாம் ஒருவர் சாப்பிடக்கூடாது என்பதைக் காண்போம்.
குளிர்காலம் என்பதால் நிறைய பேர் குளிர்ச்சியான காலநிலையின் காரணமாக சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இப்படி சளி பிடித்திருக்கும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அது முற்றி நமது உடலையும் மனதையும் மோசமாக பாதிக்கும்.

குறிப்பாக சளி பிடித்திருக்கும் போது தான், வாய்க்கு சுவையாக நன்கு காரமாக சாப்பிடத் தோன்றும். இதுப்போன்று பல உணவுகளை சாப்பிட வேண்டுமென்ற ஆவல் எழும். ஆனால் சில உணவுகள் சளி, இருமல் பிரச்சனையை மோசமாக்கும். அந்த உணவுகளை தெரியாமல் இன்றும் பலர் உட்கொண்டு வருகிறார்கள். இப்போது சளி பிடித்திருக்கும் போது எந்த உணவுகளையெல்லாம் ஒருவர் சாப்பிடக்கூடாது என்பதைக் காண்போம்.

பொரித்த மற்றும் காரமான உணவுகள்
சளி பிடித்திருக்கும் போது காரமான உணவுகளை உட்கொண்டால், சளி உருகி எளிதில் வெளியேறும் என்று பலரும் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் ஆய்வு ஒன்றின் படி, காரமான உணவுகளில் உள்ள கேப்சைசின் அதிக சளி உற்பத்தியைத் தூண்டுகிறது. வேண்டுமானால் காரமான உணவுகளை உண்டதும் சில நிமிடங்களுக்கு சளியில் இருந்து நிவாரணம் கிடைத்தது போன்று இருக்கலாம். ஆனால் அது சளி பிரச்சனையில் இருந்து மீள தாமதமாக்குவதோடு, நிலைமையை மோசமாக்கும்.

ஆல்கஹால்
சளி பிடித்திருக்கும் போது ஒரு கட்டிங் அடித்தால் நிவாரணம் கிடைக்கும் என்பார்கள். ஆய்வு ஒன்றின் படி, மது அருந்துவது நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி அதிகரிப்புடன் தொடர்பு கொண்டுள்ளது. மேலும் ஆல்கஹால் இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களை கட்டுப்படுத்தி, சளிக்கு எதிராக போராடுவதைத் தடுக்கிறது. அதுமட்டுமின்றி, ஆல்கஹால் உடலை வறட்சியடையச் செய்யும். எனவே சளி பிடித்திருக்கும் போது மது அருந்துவதை நிறுத்துங்கள்.

பால் பொருட்கள்
சளி பிடித்திருக்கும் போது பால் மற்றும் பிற பால் பொருட்களை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இந்த வகையான பொருட்கள் அதிக சளியை உருவாக்கி, நிலைமையை மோசமாக்கும். ஆய்வுகளின் படி, சளி பிடித்திருக்கும் போது பால் பொருட்களை உட்கொள்ளும் போது, அது உடலில் உள்ள சளியை அதிகரிப்பதற்கான பதிலாக, இருக்கும் சளியை தடிமனாகவும், வெளியேற்ற முடியாதவாறும் மாற்றும். எனவே சளி பிடித்திருக்கும் போது, பால் மற்றும் பிற பால் பொருட்களை தவிர்த்திடுங்கள்.

காப்ஃபைன்
என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், சளி பிடித்திருக்கும் போது, காபி, டீ மற்றும் பிற குளிர்பானங்களை குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை அனைத்துமே உடலை வறட்சியடையச் செய்யும் மற்றும் உடலில் உள்ள சளியை தடிமனாக்கி, சளியை இன்னும் அதிகரிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கும். ஆகவே காப்ஃபைன் நிறைந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை
சளி பிடித்திருக்கும் போது குடிக்கும் பானங்களில் சர்க்கரையை அதிகம் சேர்த்து குடிப்பத்தை தவிர்த்திடுங்கள். உடல்நல நிபுணர்களின் கூற்றுப்படி, சளி பிடித்திருக்கும் போது ஜூஸ்களைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் அதிகப்படியான சர்க்கரை இருக்கும். இவை இரத்த வெள்ளையணுக்களின் அளவைக் குறைத்து, தொற்றுக்களை சமாளிக்கும் திறனைக் குறைக்கும்.



Click it and Unblock the Notifications