For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க குடல் ஆரோக்கியமா இருக்கணும்னா இந்த உணவுகளை தெரியாமகூட சாப்பிட்றாதீங்க...!

குடல் எரிச்சல் நோயானது பரவலாக காணப்படும் ஒரு நோயாகும். இது உங்களுக்கு பல அசௌகரியங்களை ஏற்படுத்தும்.

|

நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளில் இருக்கும் சத்துக்களையும் நமது குடல்தான் உறிஞ்சுகிறது. நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நமது குடல் ஆரோக்கியமாக இருப்பதும், சீராக செயல்படுவதும் மிகவும் அவசியமானதாகும். அதில் ஏற்படும் பிரச்சினைகள் நம் உடலின் ஒட்டுமொத்த செயல்பாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

Foods you must avoid to manage IBS

குடல் எரிச்சல் நோயானது பரவலாக காணப்படும் ஒரு நோயாகும். இது உங்களுக்கு பல அசௌகரியங்களை ஏற்படுத்தும். இந்த பாதிப்பு ஏற்பட்டால் வயிற்றுப்போக்கு அல்லது மலசிக்கல் பிரச்சினைகளை ஏற்படுத்தும், சிலசமயம் இரண்டு பிரச்சினைகளையுமே ஏற்படுத்தும். குடல் எரிச்சல் நோய் இருக்கும்போது சில உணவுகளை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குடல் எரிச்சல் நோயை தவிர்க்க என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடல் எரிச்சலுக்கான காரணங்கள்

குடல் எரிச்சலுக்கான காரணங்கள்

குடல் எரிச்சல் ஏற்படுவதற்கான தெளிவான காரணத்தை மருத்துவர்களால் இன்னும் கண்டறிய முடியவில்லை. ஆனால் உணர்ச்சிமிக்க பெருங்குடல், ஹார்மோன் மாற்றங்கள், மனஅழுத்தம் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக நோயெதிர்ப்பு மண்டலம் சரியாக செயல்படாதது போன்றவை இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாகும். அதேபோல சில உணவுகளும் இந்த பிரச்சினையை தூண்டக்கூடும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

பதப்படுத்தப்பட்ட உணவுகள் பொதுவாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும், எனவே குடல் எரிச்சலைத் தூண்டுவதில் ஒன்றாக இருக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை. இத்தகைய உணவுகளில் இருக்கும் சேர்க்கைகள் குடல் எரிச்சலை விரிவாக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கொழுப்பு அதிகம் உள்ளது, மேலும் பொதுவாக நார்ச்சத்து அதிகம் இல்லை, இதனால் இது மலச்சிக்கலை ஏற்படுத்தும். எனவே சிப்ஸ், பர்கர், பிஸ்கட் போன்ற பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

MOST READ: இந்த ராசிக்காரர்களின் இரத்தத்தில் நேர்மை என்பதே இருக்காதாம்... ஜாக்கிரதையாக இருங்கள்...!

குளிர்பானங்கள்

குளிர்பானங்கள்

ஆல்கஹால், காஃபைன் பானங்கள் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்கள் போன்ற பானங்கள் அனைத்தும் குடல் எரிச்சல் அறிகுறிகளை இன்னும் மோசமாக்கும். ஆல்கஹாலால் ஏற்படும் பல பிரச்சினைகளில் இதுவும் ஒன்றாகும். இதனால் உங்கள் உடலின் நீர்ச்சத்து குறையும் மேலும் கல்லீரல் பாதிப்புகளை ஏற்படுத்தும். காஃபைன் பானங்கள் உங்கள் குடலில் பாதிப்புகளை ஏற்படுத்தி வயிற்றுப்போக்கு மற்றும் குடல் எரிச்சலை ஏற்படுத்தும்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

பால் அல்லது சீஸ் போன்ற பால் பொருட்களில் கொழுப்பு அதிகம் உள்ளது, இது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் அல்லது மோசமாக்கும். மேலும் பலர் லாக்டோஸ் சகிப்பின்மையால் பாதிக்கப்படுகின்றனர், மேலும் பால் பொருட்கள் இந்த நிலையில் பாதிக்கப்படுபவர்களுக்கு அறிகுறிகளை மேலும் மோசமாக்கும். இதற்கு பதிலாக அரிசி பால் மற்றும் சோயா சீஸ் போன்றவற்றை பயன்படுத்த தொடங்குங்கள்.

நார்ச்சத்து உணவுகள்

நார்ச்சத்து உணவுகள்

பருப்பு வகைகள், பழங்கள், வேர் காய்கறிகள் மற்றும் ஓட்ஸ் மற்றும் பார்லி போன்ற கரையாத நார்ச்சத்து கொண்ட உணவுகள் வீக்க உணர்வைத் தூண்டும். இதற்கு காரணம் அவற்றில் இருக்கும் பசையம் ஆகும், பசையம் உணர்திறன் குடல் செல்களில் மாற்றங்களை ஏற்படுத்தும், இதன் விளைவாக ஊட்டச்சத்துக்கள் சரியாக உறிஞ்சப்படுவதில்லை. இது குடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது மற்றும் இரைப்பை குடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

MOST READ:உங்க முகப்பரு போகவே மட்டுதா அப்போ இந்த எல்லா எண்ணெயும் கலந்து தேய்ங்க

சிகிச்சைகள்

சிகிச்சைகள்

குடல் எரிச்சல் நோயை நீங்கள் சாப்பிடும் உணவின் மூலமாகவே குணப்படுத்தலாம். மேற்கூறிய உணவுகளை தவிர்ப்பதன் மூலமும், உங்கள் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவின் மூலமும் குடல் பாதிப்புகளை நீங்கள் தடுக்கலாம். மேலும் ஒவ்வொருவரின் செரிமான மண்டலமும் ஒவ்வொரு விதமாக செயல்படும், எனவே உங்கள் செரிமான மண்டலத்திற்கு ஏற்ற முறைகளை தேர்ந்தெடுத்து உங்கள் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods You Must Avoid To Manage Irritable Bowel Syndrome

If you want to avoid irritable bowel syndrome disease you must avoid these foods.
Story first published: Tuesday, September 17, 2019, 15:20 [IST]
Desktop Bottom Promotion