Latest Updates
-
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சோகமான மனநிலையில் இருக்கும் போது இந்த உணவுகளை சாப்பிடுவது மகிழ்ச்சியையும், நிம்மதியையும் கொடுக்குமாம்...!
செரோடோனின் என்பது மனநிலையை ஒழுங்குபடுத்தும் உடலில் உள்ள ஒரு ஹார்மோன் மற்றும் ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்தில் முக்கிய காரணியாகவும் கருதப்படுகிறது.
செரோடோனின் என்பது மனநிலையை ஒழுங்குபடுத்தும் உடலில் உள்ள ஒரு ஹார்மோன் மற்றும் ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்தில் முக்கிய காரணியாகவும் கருதப்படுகிறது. நீங்கள் குறைந்த செரோடோனின் அளவுகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அது மனச்சோர்வு, பதட்டம், தூக்கமின்மை, அதிக சிந்தனை, எதிர்மறை எண்ணங்கள் மற்றும் பிற மனநல நிலைமைகளை ஏற்படுத்தும். செரோடோனின் அடிப்படையில் உங்கள் மனநிலை மற்றும் ஒட்டுமொத்த நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் மற்றும் இந்த இரசாயனம் பொதுவாக நல்ல உணர்வு மற்றும் நீண்ட காலம் வாழ்வதற்கு அவசியமானது.

மக்கள் குறைந்த செரோடோனின் அளவை சரிசெய்ய சரியான மருந்துகளை நாடுகிறார்கள், ஆனால் அதற்கு வேறுசில வழிகளும் உள்ளன. உங்கள் செரோடோனின் அளவை அதிகரிக்க இயற்கையான அணுகுமுறைக்கு, டிரிப்டோபான் கொண்ட உணவுகளை சாப்பிட முயற்சி செய்யலாம். டிரிப்டோபான் நிறைந்த உணவுகள் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் உங்கள் மனநிலை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் சாதகமான விளைவைக் கொண்டிருக்கிறது. செரோடோனின் அளவை அதிகரிக்க உதவும் 5 சூப்பர்ஃபுட்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. நமது உடல் 5-HTP ஐ உற்பத்தி செய்ய டிரிப்டோபானைப் பயன்படுத்துகிறது, இது செரோடோனின் மற்றும் மெலடோனின் ஆகிய இரண்டு மனநிலை மற்றும் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் நரம்பியக்கடத்திகளை உருவாக்குகிறது. தூங்குவதற்கு முன் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும்.

பாதாம்
பாதாமில் ஃபோலேட் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மெக்னீசியம் செரோடோனின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது, இது உங்கள் மூளையில் மகிழ்ச்சியின் உணர்வுகளுக்கு முக்கிய பங்களிப்பாகும். பாதாமில் வைட்டமின்கள் பி2 மற்றும் ஈ ஆகியவை நிறைந்துள்ளன, இது மன அழுத்தத்தின் போது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

ஏ2 பால்
A2 பாலில் டிரிப்டோபான் உள்ளது, இது செரோடோனினை உற்பத்தி செய்யும் அமினோ அமிலமாகும், இது தூக்க முறைகள் மற்றும் மனநிலையை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அன்னாசி
அன்னாசிப்பழத்தில் டிரிப்டோபான் உள்ளது, இது மூளையில் செரோடோனின் அதிகரிக்க உதவுகிறது. கூடுதலாக, அன்னாசிப்பழத்தில் புரோமிலைன் என்ற புரதம் உள்ளது, இது சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் வருகிறது.

சோயா
சோயா பால் மற்றும் அது சார்ந்த தயாரிப்புகளில் டிரிப்டோபனின் அதிகமுள்ளது. இது உங்களுக்கு உற்சாகமான மனநிலையைத் தூண்டக்கூடிய வேலையா செய்கிறது. பால் பிடிக்காதவர்கள் சோயா பாலை உட்கொள்வது அவர்களின் மனநிலையை நன்கு ஊக்குவிக்கும்.



Click it and Unblock the Notifications
