Latest Updates
-
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..
உங்க காலில் இந்த மாதிரி இருக்கா? அப்ப இந்த உணவுகளை இனிமேல் சாப்பிடாதீங்க.. ஆபத்தாயிடும்...
கால் பெருவிரலின் பக்கவாட்டில் வீக்கத்தைக் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் அது உடலில் யூரிக் அமிலம் அதிகம் இருப்பதன் அறிகுறியாக இருக்கலாம்.
நமது உடலில் உருவாகும் ஒரு நச்சு அமிலம் தான் யூரிக் அமிலம். இந்த யூரிக் அமிலமானது ப்யூரின்கள் என்னும் கெமிக்கல்களை உடைதெரியும் போது உருவாகின்றன. இது ஒரு கழிவுப் பொருளாகும். இந்த ப்யூரின்கள் இறைச்சிகள், கடல் சிப்பி, ஆல்கஹால் போன்றவற்றில் அதிகம் காணப்படுகின்றன. இந்த உணவுகளை அதிகளவில் உட்கொள்ளும் போது, உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது. இந்த யூரிக் அமிலம் உடலில் அதிகமாகும் போது, அது மூட்டுக்களில் தேங்கி, கீல்வாத பிரச்சனையை உண்டாக்குகின்றன.

கீல்வாதம் என்பது ஒரு வகையான ஆர்த்ரிடிஸ். இதனால் கைகள் மற்றும் கால்களில் உள்ள மூட்டுக்களில் கடுமையான வலியை அனுபவிக்கக்கூடும். உடலில் யூரிக் அமிலத்தின் அளவு வரம்பை மீறும் போது, அதன் விளைவாக சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரக கல் பிரச்சனைகள் போன்றவற்றின் அபாயம் அதிகரிக்கிறது. எனவே தான் யூரிக் அமிலத்தின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில், ஏராளமானோர் யூரிக் அமில பிரச்சனையால் போராடி வருகிறார்கள். குறிப்பாக இளைஞர்களும் இப்பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவுகளும், குடிப்பழக்கமும் தான்.
உங்கள் கால் பெருவிரலின் பக்கவாட்டில் வீக்கத்தைக் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் அது உடலில் யூரிக் அமிலம் அதிகம் இருப்பதன் அறிகுறியாக இருக்கலாம். உடலில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தைக் கொண்டவர்கள் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ளக்கூடாது என்பதைக் காண்போம். இந்த உணவுகளை தவிர்க்காவிட்டால், கீல்வாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகளின் அபாயம் அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்

வெள்ளை பிரட்
வெள்ளை பிரட் உடலில் யூரிக் அமிலம் மற்றும் இரத்த சர்க்கரையின் அளவை சட்டென்று அதிகரிக்கும். ஏனெனில் இவற்றில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகளவில் உள்ளன. இதன் விளைவாக கீல்வாத பிரச்சனைகள் வருவதற்கான அபாயமும் அதிகரிக்கிறது. ஆகவே அதிகளவு யூரிக் அமிலத்தைக் கொண்டவர்கள் வெள்ளை பிரட் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

மாட்டிறைச்சி
மாட்டிறைச்சியை உட்கொள்வது அவ்வளவு நல்லதல்ல. ஏனெனில் மாட்டிறைச்சியில் யூரிக் அமிலம் அதிகளிவில் உள்ளன. அதிகளவு ப்யூரின் உள்ள உணவுகளை உண்ணும் போது, அது கீல்வாத பிரச்சனைகளை உருவாக்கிவிடும். எனவே உங்கள் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கக்கூடாது என்று நினைத்தால், அசைவ உணவுகளான வான் கோழி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவற்றை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

கடல் உணவுகள்
ஏற்கனவே கீல்வாத பிரச்சனையை கொண்டவர்கள் மற்றும் யூரிக் அமில பிரச்சனைகளைக் கொண்டவர்கள் கடல் உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக நண்டு, இறால், கடல் சிப்பிகள் போன்றவற்றை அதிகளவில் உணவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இது தவிர பிற வகையான கடல் உணவுகளும் உடலில் யூரிக் அமிலத்தின் அளவை வேகமாக அதிகரிக்கும் என்பதால், கடல் உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்பதைத் தவிர்த்திடுங்கள்.

தேன்
தேன் ஆரோக்கியமான உணவுப் பொருள் தான். ஆனால் அளவுக்கு அதிகமாக ஒருவர் தேனை உட்கொள்ளும் போது, அது உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரித்துவிடும். தேனில் ஃபுருக்டோஸ் அதிகளவில் உள்ளது மற்றும் இது உடலில் ப்யூரினை வெளியிடச் செய்து, யூரிக் அமில அளவை அதிகரிக்கும். அதற்காக தேனை முழுவதுமாக தவிர்க்க வேண்டாம். அளவாக உட்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
