For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்று பரவும் காலத்தில் இந்த உணவுகளை தெரியாமல் கூட சாப்பிட்ராதீங்க...!

COVID19 வைரஸ் ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது மற்றும் எடை இழப்பு மற்றும் பலவீனத்தையும் ஏற்படுத்துகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

|

COVID19 வைரஸ் ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது மற்றும் எடை இழப்பு மற்றும் பலவீனத்தையும் ஏற்படுத்துகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மருந்துகளைத் தவிர, ஒருவர் தனது அன்றாட உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி வைட்டமின் டி மற்றும் சி மற்றும் துத்தநாகம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால், விரைவாக குணமடைய உதவுவதால் தற்போது ஆரோக்கிய உணவுகளை நம்புவதே சிறந்த விஷயம்.

Foods to Avoid During COVID-19 Infection and Recovery Period

நீங்கள் COVID19 நோயால் பாதிக்கப்பட்டவராகவோ அல்லது குணமாகும் கட்டத்தில் இருந்தால், நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள், மேலும் உங்கள் உடலை பலவீனப்படுத்தக்கூடிய மற்றும் உங்கள் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேக் செய்யப்பட்ட உணவுகள்

பேக் செய்யப்பட்ட உணவுகள்

பேக் செய்யப்பட்ட உணவுகள் பசியை வெல்வதற்கு எளிதான வழி என்று தோன்றுகிறது, ஆனால் COVID19 விஷயத்தில், இதுபோன்ற உணவுகள் அதிக தீங்கு விளைவிக்கும். அவை சோடியம் நிறைந்தவை, மற்றும் பெரும்பாலும் வீக்கத்திற்கு வழிவகுக்கும் பாதுகாப்புகள், மற்றும் மீட்பு தாமதத்தை ஏற்படுத்தும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலவீனப்படுத்துகின்றன.

காரமான உணவுகள்

காரமான உணவுகள்

நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த நேரத்தில் காரமான உணவைத் தவிர்க்கவும், ஏனெனில் இதுபோன்ற உணவுப் பொருட்கள் பெரும்பாலும் தொண்டையை எரிச்சலூட்டுகின்றன, எரிச்சலை ஏற்படுத்துகின்றன, மேலும் நீங்கள் இருமலை அதிகமாக்குகின்றன. சிவப்பு மிளகாய் தூளைத் தவிர்த்து, ஆண்டிமைக்ரோபியல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட மிளகுத்தூளை பயன்படுத்துங்கள்.

வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகள்

குணமாகும் கட்டத்தில் இருக்கும்போது உங்கள் சுவை உணர்வு புத்துயிர் பெறும் போது, நன்கு வறுத்த சுவையான உணவுகளைப் சாப்பிட நீங்கள் விரும்ப அதிக வாய்ப்புகள் உள்ளன. நிபுணர்களின் கூற்றுப்படி, சிறிது காலம் இதனை சாப்பிடாமல் இருந்ததால், இந்த உணவுகளில் கொழுப்பு அதிகம் இருப்பதால், அதிகப்படியான உணவை அதிகம் சாப்பிட நேரிடும். அவை ஜீரணிப்பது கடினம் மற்றும் இதனால் குடலில் சுமை அதிகரிக்கும். வறுத்த உணவுகள் குடல் நுண்ணுயிரியை எதிர்மறையாக பாதிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாட்டை அடக்குகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவை பெரும்பாலும் கெட்ட கொழுப்பையும் அதிகரிக்கும்.

சர்க்கரை பானங்கள்

சர்க்கரை பானங்கள்

தொற்று மற்றும் மீட்பு காலங்களில் எந்த சூழ்நிலையிலும் செயற்கை சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களைத் தவிர்க்கவும். இந்த பானங்கள் அனைத்தும் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன மற்றும் மீட்பு செயல்முறைக்கு இடையூறாக இருக்கின்றன. நீங்கள் சாஸ் மற்றும் நிம்பு பானி ஆகியவற்றை குடிக்க முடியும், ஆனால் அதில் சோடா சேர்க்காமல் குடிக்க வேண்டும்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

பெர்ரிகள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது, ஆனால் எதையும் அதிகம் சாப்பிடுவது நல்லதல்ல. இந்த சூப்பர் ருசியான பெர்ரி அதில் சேர்க்கப்படும் எதற்கும் சுவையை சேர்க்கலாம், ஆனால் ஸ்ட்ராபெர்ரிகளின் அளவு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? ஸ்ட்ராபெர்ரி ஹிஸ்டமைன் எனும் பொருளை வெளியிடுகிறது, இது நெரிசலுக்கு வழிவகுக்கிறது. ஹிஸ்டமைனின் அதிகரிப்பு உங்கள் மூக்கில் அசெளகரியத்தை ஏற்படுத்தும் மற்றும் சைனஸ் பிரச்சினைகளை மோசமாக்கும். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது.

காபி

காபி

நாம் ஒவ்வொரு நாளையும் பெரும்பாலும் காபியுடன்தான் தொடங்குகிறோம். காபி நம் வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கிறது. ஆனால் வீக்கம் காரணமாக ஏற்படும் ஒரு விசித்திரமான அசெளகரியத்தை காபி ஏற்படுத்தக்கூடும். ஏனென்றால் காபியில் காஃபின் இருப்பதால், அதிக அளவு காபி உட்கொள்வது அஜீரணம், வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கிறது. தவிர, அதிகப்படியான காபி கூட நீரிழப்பை உணர வைக்கும். கொரோனாவில் இருந்து மீளும்போது நம் உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். காஃபின் டையூரிடிக் ஆகும், இது உங்களை நீரிழப்பு உணர்வை ஏற்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods to Avoid During COVID-19 Infection and Recovery Period

Here is the list of foods to avoid during COVID-19 infection and recovery period.
Story first published: Wednesday, May 5, 2021, 15:01 [IST]
Desktop Bottom Promotion