Just In
- 43 min ago
கணைய புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...
- 1 hr ago
குழந்தைகளுக்கான அழகான காலணிகளை 76% அதிரடி தள்ளுபடி விலையில் அமேசானில் வாங்கலாம்...!
- 2 hrs ago
ஹர் கர் திரங்கா: தேசியக்கொடியை எப்படி மடிப்பது மற்றும் எப்படி பாதுகாப்பாக வைக்க வேண்டும் தெரியுமா?
- 2 hrs ago
இந்த உணவுகள் உங்களுக்கு அருமையான மூடை செட் பண்ணி கொடுக்குமாம்... ட்ரை பண்ணி பாருங்க...!
Don't Miss
- Movies
சந்திரமுகி 2 ஷுட்டிங்கில் என்ன நடந்தது...வடிவேலுவின் ஜாலி வீடியோவுடன் அப்டேட் தந்த ராதிகா
- News
கிட்ட வாம்மா.. நீ என் தங்கச்சி..! தூய்மை பணியாளரை இறுக பற்றிய வைகைப் புயல்! உருகிப் போன பக்தர்கள்!
- Finance
ப்ளேபாய் அட்டை படத்தில் டொனால்டு டிரம்ப்.. இந்த வேலை கூடவா டிரம்ப் செய்திருக்கிறார்..?
- Automobiles
விரைவில் ஏலத்திற்கு வருகிறது மறைந்த நடிகரின் சூப்பர் கார்... ஆகஸ்டு 18இல் ஏலம் விட ஏல நிறுவனம் திட்டம்!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
- Technology
திடீர் விலைக்குறைப்பு.. அடிச்சு பிடிச்சு விற்பனையாகும் 6000mAh Samsung போன்!
- Education
ஃபர்ஸ்ட்டில் இருக்கும் கல்வி நிறுவனம் செய்த சாதனை தெரியம்?
- Sports
திடீரென பயணத்தை ரத்து செய்த தோனி??.. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் ஏமாற்றம்.. காரணம் என்ன?
இந்த 5 உணவுகள் சிறுநீரகத்தை பாதுகாக்கும்னு ஆய்வுகள் நிரூபிச்சிருக்காம்... மறக்காம சாப்பிடுங்க...!
நீங்கள் உண்ணும் உணவு பல நோய்களை போக்க வல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? இது ஒரு முட்டாள்தனமாகத் தோன்றலாம், ஆனால் உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் ஆரோக்கியமான உணவுமுறை பல நோய்களுக்கும் கோளாறுகளுக்கும் சிகிச்சையளிப்பது மட்டுமல்லாமல், பல நோய்களைத் தடுக்கவும் முடியும் என்று கூறுகின்றனர்.
சிறுநீரகம் என்பது உடல் கழிவுகள் மற்றும் நச்சுகளை சரியான முறையில் அகற்றுவதை உறுதி செய்யும் உறுப்பு ஆகும். மேலும் இரத்த ஓட்டத்தில் இருந்து அதிகப்படியான நீரை அகற்றுவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், சிறுநீரகத்தின் சரியான செயல்பாட்டில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது, பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது சிறுநீரக நோய்களை உருவாக்கி மோசமாக்கும். எனவே சிறுநீரக கோளாறுகளை இயற்கையாகவே தடுக்க உதவும் சில நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

அன்னாசி
பெரும்பாலான பழங்களில் பிரக்டோஸ் மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது, ஆனால் இந்த வெப்பமண்டல இனிப்பு மற்றும் சிட்ரஸ் பழம் சிறுநீரக நோயாளிகளுக்கு உண்மையில் மிகவும் நன்மை வாய்ந்தது. இதற்கு காரணம் அதன் குறைவான பொட்டாசியமாகும், இது சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படும் போது பாதுகாப்பான விருப்பமாக உள்ளது. உணவில் ஒரு சிறிய பகுதியை சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வீக்கத்தை குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், செல் மீளுருவாக்கம் செய்யவும் உதவும். அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் என்ற இயற்கை நொதி உள்ளது, இது உடலில் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது தவிர, அன்னாசி நார்ச்சத்து, மாங்கனீஸ் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் நல்ல மூலமாகும், இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறந்தது.

குடை மிளகாய்
மற்ற காய்கறிகளுடன் ஒப்பிடும்போது இந்த வண்ணமயமான மிளகாயில் பொட்டாசியம் குறைவாக உள்ளது, இது சிறுநீரக நோயாளிகளுக்கு சிறந்த உணவாக அமைகிறது. கூடுதலாக குடைமிளகாயில் வைட்டமின் சி இன் சிறந்த மூலமாகும், இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை மாற்ற உதவுகிறது. கடைசியாக ஆனால் குறைந்தது அல்ல, இந்த வண்ணமயமான மிளகாயில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

ஸ்ட்ராபெர்ரி
இந்த இனிப்பு மற்றும் புளிப்பான ஸ்ட்ராபெர்ரிகள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, மாங்கனீசு மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் நன்மைகளால் நிரம்பியுள்ளன, இது ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது, ஆனால் சிறுநீரக நோயாளிகளுக்கும் சிறந்தது. இதற்கு அதன் குறைவான பொட்டாசியம் காரணமாகும், இது இயற்கையாகவே சிறுநீரக நோய்களைத் தடுக்க உதவுகிறது. மேலும் ஸ்ட்ராபெர்ரியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல் மீளுருவாக்கம் செய்ய உதவுகிறது.

காளான்
இந்த காளான் வைட்டமின் பி , தாமிரம், மாங்கனீசு மற்றும் செலினியம் ஆகியவற்றின் தாதுக்களால் நிரம்பியிருப்பதால் சிறுநீரகங்களுக்கு சூப்பர்ஃபுட் ஆக வேலை செய்கிறது. அதுமட்டுமின்றி, இந்த நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த காளான்கள் சிறுநீரக நோயாளிகள் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த டயட்டைப் பின்பற்றுபவர்களுக்கு ஆரோக்கியமான மாற்றாக அமைகின்றன. பொட்டாசியம் குறைவாக உள்ள இந்த காளான் வகை சிறுநீரக கோளாறுகளை தடுக்க உதவுகிறது.

முட்டைகோஸ்
பைட்டோ கெமிக்கல்களால் நிரம்பிய இது சிறுநீரகங்களுக்கு ஒரு சூப்பர்ஃபுட்டாகும். இதில் உணவு நார்ச்சத்து, வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி நிரம்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல், முட்டைக்கோஸில் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் சோடியம் குறைவாக இருப்பதால் சிறுநீரக நோயாளிகளுக்கு சிறந்த உணவாக அமைகிறது.