Latest Updates
-
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்!
எச்சரிக்கை! கொரோனாவை தொடர்ந்து கேரளாவில் பரவும் ஜிகா வைரஸ்: அதன் முக்கிய அறிகுறிகள் என்ன?
கேரளாவில் புதிதாக பரவ ஆரம்பித்துள்ள ஜிகா வைரஸ் எப்போது வேண்டுமானாலும் தமிழ்நாட்டிற்குள் பரவலாம் என்பதால், ஜிகா வைரஸ் நோய்த்தொற்று குறித்த முக்கியமான விஷயங்களை ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் இன்னும் கொரோனா வைரஸ் வழக்குகள் குறையாமல் அதிகரித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் 24 வயதுள்ள கர்ப்பிணி பெண்ணுக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை கொசுவால் பரவும் ஜிகா வைரஸ் தொற்றின் முதல் வழக்கு இதுவே ஆகும்.

ஜிகா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட பெண் தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த பெண்ணுக்கு கடந்த ஜூன் 7 ஆம் தேதி குழந்தை பிறந்தது. மேலும் இந்த பெண்ணின் தாயார் உட்பட 13 பேரின் இரத்த மாதிரிகளை பரிசோதிக்க பூனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
கேரளாவில் புதிதாக பரவ ஆரம்பித்துள்ள ஜிகா வைரஸ் எப்போது வேண்டுமானாலும் தமிழ்நாட்டிற்குள் பரவலாம் என்பதால், ஜிகா வைரஸ் நோய்த்தொற்று குறித்த முக்கியமான விஷயங்களை ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். கீழே ஜிகா வைரஸ் குறித்து விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஜிகா வைரஸ் என்றால் என்ன?
ஜிகா என்பதும் கொசுக்களின் மூலம் பரவும் ஒரு வகையான வைரஸ் ஆகும். இந்த வகையான வைரஸ் ஏடிஸ் கொசுக்களால் பரவுகிறது. இந்த வகை கொசுக்கள் பகலில் கடிக்கும். இந்த கொசு தான் டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்றவற்றையும் பரப்புகிறது.

ஜிகா வரலாறு
ஜிகா வைரஸ் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் 1947 இல் கண்டறியப்பட்டது. ஆனால் இந்த வைரஸ் ஒரு பெருந்தொற்றாக 2015 ஆம் ஆண்டு பிரேசிலில் வெடித்தது. பின் மெதுவாக இந்த வைரஸ் இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது. இந்த வைரஸ் கொசுக்களின் மூலம் மக்களிடையே பரவக்கூடியது மட்டுமின்றி, உடலுறவு கொள்வதன் மூலமும் மற்றவர்களுக்கு பரவக்கூடியது. எனவே ஜிகாவை 2016 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது.

அறிகுறிகள்
ஜிகா வைரஸ் தொற்றின் முதல் அறிகுறியானது டெங்குவைப் போலவே காய்ச்சலை வெளிக்காட்டும். ஆகவே காய்ச்சலை வைத்து கண்டறிவது என்பது கடினமாக இருக்கும். பல உடல்நல பிரச்சனைகளுக்கு காய்ச்சல் வரக்கூடும் என்பதால், ஜிகா வைரஸ் தாக்கியிருந்தால் அது பலருக்கு தெரியாது.
ஆனால் ஒருவருக்கு காய்ச்சல், மூக்கு ஒழுகல், தலைவலி மற்றும் தடிப்புகள் போன்றவை ஒரு வாரத்திற்கும் மேலாக இருந்தால், அவர் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என்று அர்த்தம். சிலருக்கு ஜிகா வைரஸ் தாக்கியிருந்தால், அது விழிவெண்படல அழற்சி, தசை மற்றும் மூட்டு வலி, தலை வலி ஆகியவை ஏற்படும். அரிய சந்தர்ப்பங்களில், ஜிகா வைரஸ் ஆட்டோ இம்யூன் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஜிகா மற்றும் நரம்பியல் கோளாறுகள்
ஜிகா வைரஸ் கடுமையான மூளை மற்றும் முதுகெலும்பு நோய்த்தொற்றுகள் போன்ற பிற நரம்பிய கோளாறுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. இருப்பினும், ஜிகா வைரஸ் தொற்றின் நீண்ட கால ஆரோக்கிய பிரச்சனைகள் குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை.

தடுப்பு நடவடிக்கைகள்
* ஏடிஸ் கொசுக்கள் பகல் நேரத்திலும், பிற்பகலிலும் சுறுசுப்பாக இருப்பதால், மக்கள் இந்த நேரங்களில் வெளியே சுற்றுவதைத் தவிர்த்து, முடிந்த வரை வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இது தவிர, வீட்டிற்கு பகல் நேரத்தில் கொசுவிரட்டிகளைப் பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது.
* வீட்டைச் சுற்றி நீர் தேங்கியிருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறப்பு குறைபாடுகள் மற்றும் ஜிகா வைரஸ் மேலும் பரவும் அபாயத்தைக் குறைக்க, இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் பாதுகாப்பான உடலுறவு கொள்ள முயற்சிக்க வேண்டும். முடிந்தவரை உடலுறவு கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

ஜிகா வைரஸ் தொற்றால் இறக்க வாய்ப்புள்ளதா?
ஜிகாவால் மரணம் ஏற்பட வாய்ப்பில்லை. கொசுக்களால் பரவும் மற்ற நோய்களைப் போலவே, ஓய்வு மற்றும் மருந்துகளும் ஜிகாவை குணப்படுத்திவிடும். வழக்கமாக, தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்துவிடுவார்கள். ஆனால் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சதவீதம் பேரை ஜிகா கொல்கிறது.

இதற்கு தீர்வு உள்ளதா?
இப்போது ஜிகாவைத் தடுக்க தடுப்பூசி எதுவும் இல்லை. இருப்பினும், பிரான்சில் ஆராய்ச்சியாளர்கள், பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பூசியை தயாரிக்க முயற்சித்து வருகின்றனர். தற்போது அதற்கான சோதனைகளும் நடந்து வருகின்றன.



Click it and Unblock the Notifications
