Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
90% மக்களால் புறக்கணிக்கப்படும் புற்றுநோயின் சில ஆரம்ப அறிகுறிகள்!
புற்றுநோய் நமக்கு ஆரம்ப காலத்தில் உணர்த்தும் அறிகுறிகளை 90 சதவீத மக்கள் புறக்கணிக்கின்றனர். இதனாலும் புற்றுநோயால் நிறைய பேர் மரணத்தை சந்திக்கின்றனர்.
புற்றுநோய் மிகவும் அபாயகரமான நோய் என்பது அனைவருக்கும் தெரியும். நமக்கு தெரிந்தளவு புற்றுநோய் யாரையும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தாக்கக்கூடும். இருப்பினும், ஒருவருக்கு ஏற்படும் புற்றுநோயின் அபாயத்தை ஆரோக்கியமான பழக்கவழக்கங்களால் கணிசமாக குறைக்க முடியும் என்பது வலுவான சான்றுகள் உள்ளன. இதற்காக விஞ்ஞானிகள் உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் உட்பட பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருகிறார்கள்.

உலக சுகாதார அமைப்பின் ஒரு அறிக்கையின் படி, 10 இந்தியர்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். மேலும் 15 இல் ஒருவரு இந்நோயில் இறக்கிறார். இது உலகளவில் மரணத்தை உண்டாக்கும் முக்கிய காரணிகளுள் ஒன்றாக உள்ளது. தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் ஒரு அறிக்கையின் படி, 2018 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 18.1 மில்லியன் புதிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் 9.5 மில்லியன் புற்றுநோய் தொடர்பான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் 2040 ஆம் ஆண்டின் போது, புதிய வழக்குகளின் எண்ணிக்கை 29.5 மில்லியனாகவும், புற்றுநோய் தொடர்பான மரணங்கள் 16.4 மில்லியனாகவும் உயரும் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
எந்த ஒரு நோயும் ஆரம்ப காலத்தில் சில அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே நாம் கவனித்தால் நிச்சயம் எப்பேற்பட்ட நோயில் இருந்தும் குணமாகலாம். ஆனால் புற்றுநோய் நமக்கு ஆரம்ப காலத்தில் உணர்த்தும் அறிகுறிகளை 90 சதவீத மக்கள் புறக்கணிக்கின்றனர். இதனாலும் புற்றுநோயால் நிறைய பேர் மரணத்தை சந்திக்கின்றனர். இக்கட்டுரையில் 90 சதவீத மக்களால் புறக்கணிக்கப்படும் சில புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து இனிமேல் உஷாராகிக் கொள்ளுங்கள்.

நியோபிளாசம்
நியோபிளாசம் என்பது திசுக்களின் அசாதாரண மற்றும் அதிகப்படியான வளர்ச்சியாகும். இதை கட்டிகள் என்றும் கூறலாம். நியோபிளாசம்கள் சரும அல்லது மார்பக புற்றுநோயின் அறிகுறியாக கருதப்படுகின்றன. பிற அறிகுறிகள் பின்வருமாறு:
* மார்பகம் அல்லது அக்குள்களில் கடினமான முடிச்சுகள்
* உணவு அல்லது அழகு பொருட்களுடன் தொடர்பில்லாத சரும எரிச்சல் அல்லது அரிப்பு
* நியோபிளாசத்தின் மையப் பகுதியில் புண்
* திடீரென்று மச்சம் தோன்றி வளர்ச்சி பெறுவது அல்லது வடிவம் மாறுவது.

தொடர்ச்சியான இருமல்
தொடர்ச்சியான நீண்ட நேர இருமல் நுரையீரல் நோயின் ஒரு அறிகுறியாகும். அதுவும் பின்வரும் பிற அறிகுறிகளுடன் சேர்ந்து இருமல் நீடித்து இருந்தால், அது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாகும்.
* பசியின்மை குறைவது
* திடீர் உடல் எடை இழப்பு
* நுரையீரல் புற்றுநோயின் இறுதி கட்டமானால், இரத்தம் கலந்த இருமல் மற்றும் மூச்சுத் திணறல் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

சரும அரிப்பு
பெரும்பாலான நேரங்களில், சரும அரிப்பு கட்டிகளுடன் தொடர்புடையது அல்ல. ஆனால் மருத்துவ அனுபவம் ஒரு குறிப்பிட்ட இணைப்பை நிரூபிக்கிறது.
* கருப்பை நியோபிளாசம் பிறப்புறுப்பு அரிப்பை உண்டாக்கும்.
* மூளை புற்றுநோய் நாசியில் அரிப்பை உண்டாக்கும்.

குடல் இயக்கத்தில் மாற்றங்கள்
குடல் புற்றுநோய் பின்வரும் அறிகுறிகளை உண்டாக்கும். அவையாவன:
* இரத்தம் கலந்த மலம்
* சளி கலந்த மலம்
* தன்னிச்சையான மலம் கழித்தல்

அளவுக்கு அதிகமாக சிறுநீர் சுரப்பு
இதுவும் சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் இது பல அறிகுறிகளுடன் சேர்ந்தும் வெளிப்படலாம்.
* சிறுநீர் கழிக்கும் போது இரத்தக்கசிவு
* உயர் இரத்த அழுத்தம்
* சிறுநீரகங்களில் வலி
* நாள்பட்ட பலவீனம்

திடீர் எடை இழப்பு
வயிற்றுப் புற்றுநோய் இருக்கும் போது, விவரிக்க முடியாத எடை இழப்பு ஏற்படலாம். ஆனால் அதன் ஆரம்ப கட்டங்களில் நாம் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் இருப்போம். இருப்பினும், இது பிற அறிகுறிகளுடன் சேர்ந்து ஏற்படும் பட்சத்தில், கவனிக்க வேண்டியது அவசியம். அந்த அறிகுறிகளாவன:
* இறைச்சியின் மீது வெறுப்பு
* சிறிது உணவு உண்டாலே வயிறு நிறைந்த உணர்வு
* இரத்த சோகை
* குடலில் உணவு இயக்கம் சிரமமாக இருப்பது

தொடர்ச்சியான தொண்டை புண்
உங்கள் நீண்ட நாட்களால் தொண்டைப்புண் இருந்தால், அதுவும் பின்வரும் அறிகுறிகளுடன் தொடர்புடையதாக இருந்தால், அது குரல்வளை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
* மூச்சு விடுவதில் மற்றும் விழுங்குவதில் சிரமம்
* தொண்டையில் கட்டி இருப்பது போன்ற உணர்வு
* பேச்சின் கூர்மையானது குறைந்திருப்பது
* இரத்தம் கலந்த இருமல் மற்றும் துர்நாற்றம்

குறிப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை வைத்து மட்டும் ஒரு முடிவு எடுத்துவிட முடியாது. ஏனெனில் இவை பிற நோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இருப்பினும், நீங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை சந்தித்தால், சற்றும் புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications