Latest Updates
-
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும்
கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் என்னலாம்-ன்னு தெரியுமா? இதுதான்...
கொரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தைக் குறைக்க மருத்துவர்கள் பெரும்பாலும் 5 மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். கீழே கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பெரும்பாலும் பரிந்துரைக்கும் 5 மருந்துகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக நாட்டின் நிலைமை மோசமாகிக் கொண்டிருப்பதை நாம் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்நோய்த்தொற்று எவ்வளவு தீவிரமாகிக் கொண்டிருக்கிறது, தினமும் எவ்வளவு பேர் இந்நோய்த்தொற்றால் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வரைபடத்தைக் கொண்டு மதிப்பிடலாம். தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜனுக்காக அலைய வேண்டியிருக்கும் போது, கொரோனா தடுப்பூசி, பிளாஸ்மா சிகிச்சை மற்றும் மருந்துகளைப் பெறுவதும் எளிதான காரியமல்ல. வல்லுநர்கள் கூட வரும் நாட்களில், கொரோனா நோய்த்தொற்று மேலும் மோசமாக மாறப்போகிறது என்று கூறுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில் மக்கள் இந்த தொற்றுநோயைத் தவிர்ப்பது கடினமான ஒன்றாகிவிட்டது.

ஆனால் கொரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தைக் குறைக்க மருத்துவர்கள் பெரும்பாலும் 5 மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். கீழே கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பெரும்பாலும் பரிந்துரைக்கும் 5 மருந்துகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி ஒருபோதும் கொரோனா நோயாளிகளுக்குக் கொடுக்கக்கூடாது. மருத்துவரின் அனுமதியின்றி கொரோனா நோயாளிக்கு எந்த மருந்தையும் கொடுப்பது மிகவும் ஆபத்தானது என்பதை மறக்க வேண்டாம்.

ரெம்டெசிவிர் (Remdesivir)
தற்போதெல்லாம் ரெம்டெசிவிர் மருந்திற்கு அதிக தேவை உள்ளது. அரசு மருத்துவமனைகள் அல்லது தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்து கடைகள் என எல்லா இடங்களிலும் ரெம்டெசிவிர் தேவை உள்ளது. இந்த மருந்து கொரோனாவை சரிசெய்யக்கூடிய மருந்து அல்ல என்றாலும் இது கொரோனாவின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும். அதனால் தான் மருத்துவர்கள் மோசமான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்குகிறார்கள். மேலும், ரெமிடிஸ்விர் ஒரு உயிர் காக்கும் மருந்து அல்ல என்றும் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதை அதிகளவு பயன்படுத்தினால், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ரெம்டெசிவிர் ஒரு ஆன்டிவைரல் மருந்து. முன்பு இது கடுமையான சுவாச தொற்று மற்றும் ஹெபடைடிஸுக்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனாவின் அறிகுறிகளையும் ரெம்டெசிவிர் குறைப்பதை காண முடிந்ததால், இன்று இது பலரும் இந்த மருந்தை விரும்ப முக்கிய காரணமாகிவிட்டது.

டெக்ஸாமெதாசோன் (Dexamethasone)
ரெம்டெசிவிர் ஊசியைப் போட முடியாதவர்களுக்கு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாற்று மருந்து தான் டெக்ஸாமெதாசோன். இந்த டெக்ஸாமெதாசோன் ஒரு கொரோனாவை சரிசெய்யும் மருந்தா என்றால் நிச்சயம் இல்லை. ஆனால் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, டெக்ஸாமெதாசோன் சுவாச நோய்களுக்கு பயன்படுத்தப்படலாம். அதே நேரத்தில் சில மருத்துவர்கள் டெக்ஸாமெதாசோன் கொரோனா நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று கூறுகின்றனர்.

டோசிலிசுமாப் (Tocilizumab)
ரெம்டெசிவிருக்குப் பிறகு, இந்தியாவில் அதிக தேவைப்படும் மருந்தாக இருப்பது என்றால், அது டோசிலிசுமாப் ஆகும். பொதுவாக முடக்கு வாதம் கொண்ட நோயாளிகளுக்கு இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த மருந்தை கொரோனா நோயாளிகளுக்கும் மருத்துவர்கள் போடுகிறார்கள். ஏனெனில் இது நிலை 1 மற்றும் 2 கொரோனா நோயாளிகளை விரைவாக குணப்படுத்துகிறது. இதுப்போன்ற சூழ்நிலையில், ரூ .40,000 க்கு கிடைக்கும் இந்த ஊசி இன்று ஒன்றரை லட்சத்திற்கு விற்கப்படுகிறது.

இடோலிஸுமாப் (Itolizumab)
கொரோனா நோயாளிகளின் அறிகுறிகளைக் குறைக்கும் ரெம்டெசிவிரைப் போன்றே பயன்படுத்தப்படும் மற்றொரு மருந்து தான் இடோலிஸுமாப். இந்த இடோலிஸுமாப் ஒரு மோனோக்ளோனல் ஆன்டிபாடி. இந்த மருந்தின் சோதனை நடந்து கொண்டிருந்த போது, இரண்டாவது மட்டத்தில் இடோலிஸுமாப் கொரோனாவின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த முடியும் என்பது தெரிய வந்தது. இந்த மருந்து மிகவும் மலிவானது மற்றும் மருத்துவர்களும் இதை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கின்றனர். ஆனால் அதிகரித்து வரும் தேவையில் இதுவும் மக்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை.

அஜித்ரோமைசின் (Azithromycin)
கொரோனாவுக்கு மிகவும் பயனுள்ள மருந்து ஏதேனும் இருந்தால், இன்று அது அசித்ரோமைசின் ஆகும். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகள் முதல் வீட்டு தனிமைப்படுத்தும் நோயாளிகள் வரை அனைவரும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அஜித்ரோமைசின் எடுத்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications
