காய்கறியில பூச்சிகொல்லி மருந்து அடிச்சிருக்கிறத எப்படி கண்டுபிடிக்கறது? என்ன பிரச்னை வரும்?

பூச்சி கொல்லி மருந்து அடிப்பது கூட மூளையை பாதிக்குமாம்? வாங்க தெரிஞ்சுக்கலாம். அதுபற்றிய விளக்கமான தொகுப்பு தான் இது.

பூச்சி கொல்லி மருந்து அடிப்பது கூட மூளையை பாதிக்குமாம்? வாங்க தெரிஞ்சுக்கலாம்
பூச்சிக் கொல்லிகளில் நிறைய நச்சுத்தன்மை வாய்ந்த கெமிக்கல்கள் உள்ளன. பயிர்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க இதை பயன்படுத்தி வருகிறார்கள்.

Depression

ஆனால் இந்த பூச்சிக் கொல்லிகளின் தீவிரம் மனிதர்களையும் விடுவதில்லை. அவர்களுக்கும் நிறைய உடல் நல பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூச்சிக் கொல்லி என்றால் என்ன?

பூச்சிக் கொல்லி என்றால் என்ன?

பூச்சிக் கொல்லிகளில் கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது பூச்சிகளை விரட்ட, அழிக்க மற்றும் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. விவசாய நிலங்களில் இது பூச்சிகளை அழிப்பதோடு தேவையற்ற களைகளை அழிக்கவும், பூஞ்சைகளை அகற்றவும், மைக்ரோ உயிரினங்களை அழிக்கவும், எலிகள், பறவைகள் போன்றவற்றை விரட்டவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் தீவிரம் பூச்சிகளை மட்டுமல்ல அதை அடிக்கும் மனிதர்களையும் தாக்குகிறது.

விளைவுகள்

விளைவுகள்

விவசாய நிலங்களில் தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லிகள் மனிதர்களை பெருமளவில் பாதிக்கிறது. வனவியல் மற்றும் உள்நாட்டு பூச்சி கட்டுப்பாடு வாரியத்தின் படி ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகள், மரப் பாதுகாப்பு போன்றவற்றிற்காக பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிகளும் பாதிப்பை உண்டாக்குகிறது என்கிறார்கள். அதே மாதிரி பார்க், விளையாட்டு மைதானங்கள், நடைபாதைகளில் தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளும் மனிதர்களை பெருமளவில் பாதிக்கிறது. பூங்கா போன்றவற்றில் உணவுகளை கொண்டு சென்று சாப்பிடுவது கூட அபாயமானது என்கிறார்கள்.

நோய்களை தடுக்கும் பூச்சிக் கொல்லிகள்

நோய்களை தடுக்கும் பூச்சிக் கொல்லிகள்

இதைத் தவிர மலேரியா, டெங்கு போன்று கொசுக்களை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளும் நாள்பட்ட உடல் நல பாதிப்புக்கு காரணமாக அமைகிறது.

நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள், இனப்பெருக்க உறுப்பு பிரச்சனைகள், புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. பூச்சிக் கொல்லி மருந்துகளின் தீவிரம் மனிதர்களுக்கு நரம்புக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. சர்வதேச சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 13 - 19 வயதிலான குழந்தைகளுக்கு விவசாய நிலங்களை சுற்றி இருப்பவர்களுக்கு மூளைக் கோளாறு ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூளையில் ஏற்படும் பாதிப்புகள்

மூளையில் ஏற்படும் பாதிப்புகள்

மனச் சோர்வு

நிறைய ஆராய்ச்சிகளின் படி பூச்சிக் கொல்லி மருந்துகள் மனச் சோர்வை ஏற்படுத்துகிறது.

பிரான்சில் 1998-2000 க்கு இடையில் செய்யப்பட்ட ஆராய்ச்சி படி பார்த்தால் 567 விவசாயிகளில், 83 விவசாயிகள் மனச்சோர்வின் அறிகுறிகளைப் பதிவு செய்துள்ளனர் என்று ரிப்போர்ட் கூறுகிறது. உலக சுகாதார நிறுவனம் கருத்துப் படி மனச் சோர்விற்கு இது 4 வது இடமாக உள்ளது என்று கூறுகின்றது. இந்த மனச் சோர்வு ஒருவரின் மன, உடல் மற்றும் சமூக செயல்பாடுகளை பாதிப்பதோடு இறுதியில் அறிவாற்றல் செயலிழப்பை ஏற்படுத்துகிறது.

ஆய்வுகள்

ஆய்வுகள்

21000 பூச்சிக்கொல்லி விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல் படி பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தியவர்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளை உட்கொண்டவர்கள் தீவிர மனச் சோர்வை கொண்டவர்களாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இளைஞர்களின் மூளை பாதிப்பு

இளைஞர்களின் மூளை பாதிப்பு

தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகளில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி,குளோர்பைரிஃபோஸின் வெளிப்பாடு காரணமாக 20 குழந்தைகளின் பெருமூளைப் புறணி தாயின் வயிற்றிலயே பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த மருந்தை பயிர்கள், கட்டிடங்கள் மற்றும் விலங்குகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். மற்றொரு வெளியிடப்பட்ட ஆய்வு பூச்சிக்கொல்லியால் குழந்தைகளுக்கு மன நல கோளாறுகள், மன இறுக்கம், கவனக் குறைவு, நரம்பியல் கோளாறுகளும் ஏற்பட்ட வண்ணம் உள்ளனர்.

உணர்வுகள் மற்றும் அசைவுகளில் பாதிப்பு

உணர்வுகள் மற்றும் அசைவுகளில் பாதிப்பு

மற்றொரு ஆய்வில் விவசாயிகளின் நரம்பியல் பாதிப்பதோடு அவர்களின் உணர்திறனும் பாதிப்படைந்து உள்ளதை தெரிவித்து உள்ளது.

பர்கின்சன் நோய்

பர்கின்சன் நோய்

பூச்சிக் கொல்லி மருந்துகளால் பர்கின்சன் நோய் வருகிறது. விவசாய பகுதிகளில் வாழ்பவர்களுக்கு, அங்குள்ள தண்ணீரில் மருந்து கலப்பு இவற்றால் பர்கின்சன் நோய் ஏற்படுகிறது.

மற்ற உடல் பாகங்கள்

மற்ற உடல் பாகங்கள்

இந்த பூச்சிக் கொல்லி மருந்துகள் மூளையை மட்டுமல்ல மற்ற உடல் பாகங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நுரையீரல் செயலிழப்பு, கடுமையான கல்லீரல் பாதிப்பு, பிறப்பு குறைபாடுகள், நோய் எதிர்ப்பு சக்தியை முடக்குதல், ஒவ்வாமை, கண் மற்றும் சரும எரிச்சல், வாந்தி, தலைவலி, குமட்டல் மற்றும் பலவீனம் போன்ற ஏராளமான பாதிப்புகளையும் ஏற்படுத்திச் செல்கிறது.

தடுப்பு முறைகள்

தடுப்பு முறைகள்

இயற்கை முறை விவசாயத்தை பின்பற்றலாம்

காய்கறிகள் மற்றும் பழங்களை இயற்கை உரங்களை கொண்டு அறுவடை செய்து பயன்படுத்தலாம்.

வணிக ரீதியான பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதை தவிருங்கள்

வீட்டிற்குள் நுழையும் முன் கை மற்றும் கால்களை நன்றாக அலம்பி விட்டு வரவும். இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கு பூச்சிக் கொல்லி பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.

பூச்சிக் கொல்லிகளுக்கு பதிலாக

பூச்சிக் கொல்லிகளுக்கு பதிலாக

இந்த செயற்கை உரங்கள் விவசாய நிலங்களை பாதிப்பதோடு சுற்றி இருப்பவர்களுக்கும் கேடு விளைவிக்கிறது. எனவே மக்களுக்கும், இயற்கைக்கும் தீங்கு விளைவிக்காத வழிகளை கையாளுவதே சிறந்தது.

பயிர் சுழற்சி முறைகள்

பல்வகைப்பட்ட நடவு முறைகள்

மக்கும் பூச்சி உரங்கள்

பூச்சிகளை பிடிக்க பொறி தாவர முறைகள்

போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இயற்கைக்கும் நமக்கும் தீங்கு விளைவிக்காத முறைகளே நல்லது. அதையே பின்பற்றி பயன் பெறுவோம். ஆரோக்கியமாக வாழ்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, July 23, 2019, 18:25 [IST]
Desktop Bottom Promotion