For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பொருட்கள் ஆண்களின் ஆண்மைத்தன்மையை அழிக்கும் என்று தெரியுமா?

நாளுக்கு நாள் ஆண் மற்றும் பெண்களின் கருவளம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு பின்னணியில் இருப்பது நமது பழக்கவழக்கங்களும், நாம் பயன்படுத்தும் சில பொருட்களும், வாழ்க்கை முறையும் தான்.

|

இன்றைய காலத்தில் மலட்டுத்தன்மை, நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் மிகவும் தீவிரமான ஒரு பிரச்சனையாக உள்ளது. இன்று ஏராளமான தம்பதிகள் கருத்தரிக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மேலும் நாளுக்கு நாள் ஆண் மற்றும் பெண்களின் கருவளம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு பின்னணியில் இருப்பது நமது பழக்கவழக்கங்களும், நாம் பயன்படுத்தும் சில பொருட்களும், வாழ்க்கை முறையும் தான்.

மேலும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களாலும், சோம்பேறித்தனத்தால் உடற்பயிற்சிக் கூட செய்யாமல் எந்நேரமும் உட்கார்ந்தவாறு அல்லது படுத்தவாறு இருப்பதும் மற்றொரு காரணங்களாகும். இருப்பினும் நமக்குத் தெரியாமல் இன்னும் பல விஷயங்கள் ஒருவரது கருவளம் பாதிக்கப்படுவதற்கு காரணங்களாக உள்ளன. சொல்லப்போனால் அப்படி தெரியாத சில தான் ஒருவருக்கு மலட்டுத்தன்மையையே உண்டாக்குகிறது என்று தெரியுமா?

Deadliest Male Fertility Killers

MOST READ: உங்கள் இதய தசையில் அழற்சி ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

குறிப்பாக தற்போது பெண்களுக்கு சமமாக ஆண்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஒரு ஆணை மலட்டுத்தன்மையாக்கும் சில கொடிய விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அது என்னவென்று படித்து தெரிந்து உஷாராகிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பண ரசீதுகள்

பண ரசீதுகள்

என்ன நம்ப முடியவில்லையா? ஆம், பெரும்பாலான பண ரசீதுகளின் மேல் தடவப்பட்டிருப்பது BPA என்னும் பிஸ்பீனால் ஆகும். இது குறைந்த விந்தணு எண்ணிக்கை உட்பட ஆண் கருவுறுதல் தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

கேன் உணவுகள்

கேன் உணவுகள்

வேகமான மற்றும் அவசரமான வாழ்க்கை முறையால், இன்று பலருக்கும் சமைத்து சாப்பிட போதிய நேரம் கிடைக்காமல், கடைகளில் விற்கப்படும் கேன் உணவுகளை வாங்கி உட்கொள்கின்றனர். கேன்களில் அடைத்து விற்கப்படும் உணவுகள் மிகவும் மோசமானவை. இந்த கேன்களில் BPA என்னும் பிஸ்பீனால் பூசப்பட்டுள்ளது. இப்பொருளானது உணவுடன் சேர்ந்து உடலினுள் சென்று, கருவளத்தை பாதிக்கும். கேன் உணவுகளை ஒருவர் பல நாட்களாக உட்கொண்டு வந்தால், நாளடைவில் அது மலட்டுத்தன்மையை ஏற்படுத்திவிடும்.

MOST READ: ஏன் ஆண்கள் கட்டாயம் தொப்பையைக் குறைக்கணும் தெரியுமா?

குளியலறை மற்றும் கழிவறைப் பொருட்கள்

குளியலறை மற்றும் கழிவறைப் பொருட்கள்

நறுமணமிக்க சோப்புகள், ஷாம்புக்கள், பாடி வாஷ் மற்றும் குளியலறையில் உள்ள வினைல் திரைச்சீலைகள் கூட பித்தலேட்டுகளைக் (கெமிக்கல் பிளாஸ்டிசைசர்கள்) கொண்டிருக்கின்றன. இப்பொருள் ஆண் மலட்டுத்தன்மையுடன் மட்டுமல்லாமல் புற்றுநோய், அலர்ஜி மற்றும் பிறப்பு குறைபாடுகளுடன் நேரடியாக தொடர்ந்து கொண்டுள்ளது.

பாலியல் பொம்மைகள்

பாலியல் பொம்மைகள்

பாலியல் பொம்மைகளில் பித்தலேட்டுகள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்த பொருட்களுக்கு அடிமையான ஆண்களால், இயற்கையாகவே ஒரு பெண்ணை கருவுறச் செய்யும் போது பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

MOST READ: ஆண்கள் ஏன் கட்டாயம் அந்தரங்க பகுதியில் உள்ள முடியை நீக்கணும் தெரியுமா?

பூச்சிக் கொல்லிகள்

பூச்சிக் கொல்லிகள்

பூச்சிக் கொல்லிகளில் உள்ள வலிமையான கெமிக்கல்கள், ஆண் கருவளத்தை பாதிக்கும். ஆகவே இந்த கெமிக்கல்களைக் கையாளும் போது, போதுமான எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். சொல்லப்போனால், பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தும் முன், மருத்துவரை அணுகி தீர்வைப் பெற்றுக் கொள்வதே சிறந்தது.

சூடான கார் அல்லது பைக் இருக்கைகள்

சூடான கார் அல்லது பைக் இருக்கைகள்

சூடான கார் மற்றும் பைக் இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்தால், அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும். ஏனெனில் விந்தணுக்களை உற்பத்தி செய்யும் விரைப்பை அதிக வெப்பத்திற்குள்ளானால், விந்தணுக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, குறைய ஆரம்பிக்கும். எனவே சூடான இருக்கையில் ஆண்கள் அமரும் முன் யோசியுங்கள்.

MOST READ: ஆண்கள் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாத சில எச்சரிக்கை அறிகுறிகள்!

PCB அசுத்தமான மீன்கள்

PCB அசுத்தமான மீன்கள்

பாலிகுளோரினேட்டட் பைபீனைல் உற்பத்தியானது தடை செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் அந்த கெமிக்கல் மீன்களுள் உள்ளன. அதுவும் கேன்கள் அடைத்து விற்கப்படும் அல்லது பதப்படுத்தப்பட்ட மீன்களில் இந்த மோசமான பொருள் நிச்சயம் இருக்கும். ஆகவே இம்மாதிரியான மீன்களை உண்பதைத் தவிர்த்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Deadliest Male Fertility Killers

Here are some of the most deadliest male fertility killers. Read on to know more...
Story first published: Monday, September 30, 2019, 16:50 [IST]
Desktop Bottom Promotion