Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
எச்சரிக்கை! தினமும் பாராசிட்டமால் போட்டால் மாரடைப்பு வருமாம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், பாராசிட்டமால் மாத்திரையை தினமும் பயன்படுத்தினால் இரத்த அழுத்தம் அதிகரித்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது.
வழக்கமாக காய்ச்சல் வந்தால் மருத்துவரைக் கூட அணுகாமல் ஒரு பாராசிட்டமால் மாத்திரையைப் போடும் அளவில், பாராசிட்டமால் மாத்திரை மக்களிடையே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிலர் தங்களின் உடல் அசதி, தலை வலி போன்றவற்றிற்கும் இதைப் பயன்படுத்துவார்கள். ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்றில் பாராசிட்டமால் மாத்திரை குறித்து வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், பாராசிட்டமால் மாத்திரையை தினமும் பயன்படுத்தினால் இரத்த அழுத்தம் அதிகரித்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. ஆகவே ஏற்கனவே மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பவர்களுக்கு பாராசிட்டமால் மாத்திரையை பரிந்துரைக்கும் முன் மருத்துவர்கள் கவனமாக இருக்குமாறு ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பாராசிட்டமால் குறித்த ஆய்வு
எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் உயர் இரத்த அழுத்த வரலாற்றைக் கொண்ட 110 நோயாளிகளிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் ஒரு கிராம் பாராசிட்டமாலை ஒரு நாளைக்கு 4 முறை கொடுத்து வந்தனர். அதில் 4 நாட்களுக்குள் பாராசிட்டமால் எடுத்து வந்தவர்களிடையே இரத்த அழுத்தம் கணிசமாக அதிகரித்து, மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 20 சதவீதம் அதிகரித்தது.
பெரியவர்களில் மூவரில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டாலும், இங்கிலாந்தில் பத்தில் ஒருவர் நாள்பட்ட வலிக்காக தினமும் பாராசிட்டமால் மாத்திரையை உட்கொண்டு வருகிறார்கள்.

ஆய்வின் தலைவர் கூற்று...
எடின்பர்க் பல்கலைகழகத்தில் சிகிச்சை மற்றும் மருத்துவ மருந்தியல் தலைவரான பேராசிரியர் டேவிட் வெப் கூறுகையில், "இப்யூபுரூஃபன் போன்ற மருந்துகள் உபயோகிப்பதை நிறுத்த பாராசிட்டமால் ஒரு சிறந்த மாற்றாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தில் உள்ள நோயாளிகள் பாராசிட்டமால் அதிகம் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்."
ஒருவேளை கொடுக்க வேண்டியிருந்தால், மருத்துவர்கள் குறைவான அளவிலான பாராசிட்டமாலைக் கொடுக்க வேண்டும். ஏனெனில் ஆய்வில் சில நோயாளிகளில் இரத்த அழுத்தத்தின் அளவில் கணிசமான அதிகரிப்பு காணப்பட்டதால், நாள்பட்ட வலிக்கு புதிதாக பாராசிட்டமாலைத் தொடங்கும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் இரத்த அழுத்த அளவை மருத்துவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இரத்த அழுத்த மருந்துகள்
நாள்பட்ட வலிக்கு பாராசிட்டமால் தேவைப்படும் நபர்கள் தங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தனி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஆய்வின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பேராசிரியர் ஜேம்ஸ் கூற்று...
எடின்பர்க் பல்கலைகழகத்தில் மருத்துவ மருந்தியல் தலைவரான பேராசிரியர் ஜேம்ஸ் டியர் இதுக்குறித்து கூறுகையில், "இரண்டு வாரங்களுக்கு பாராசிட்டமால் எடுப்பது உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான முக்கியமான ஆபத்து காரணிகளாகும்."

உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் தற்போது மிகவும் பொதுவானது. பெரியவர்களில் மூவரில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது மற்றும் வயதிற்கு ஏற்ப அதிகரிக்கிறது. அதோடு பாராசிட்டமால் எடுப்பதும் தற்போது மிகவும் பொதுவானது என்பதை நாங்கள் அறிவோம். உயர் இரத்த அழுத்தம் உள்ள பல நோயாளிகளும் பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக் வருகிறார்கள். ஆகவே இந்த பாராசிட்டமால் மாத்திரை பெரிய மக்கள்தொகை விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று பேராசிரியர் ஜேம்ஸ் டியர் கூறினார்.

முடிவு
எப்போதாவது பாராசிட்டமால் எடுத்துக் கொள்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அதாவது காய்ச்சல், தலைவலி என்று எப்போதாவது பாராசிட்டமால் எடுத்தால் எவ்வித ஆபத்தும் இல்லை. ஆனால் நீண்ட காலமாக நாள்பட்ட வலிக்கு வழக்கமாக எடுத்து வந்தால் தான் இது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். எனவே மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இனிமேல் பாராசிட்டமால் மாத்திரையை கூட எடுக்காதீர்கள்.



Click it and Unblock the Notifications
