Latest Updates
-
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்! -
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம்
கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளால் ஏற்படும் பக்கவிளைவுகள்!
இன்று முதல் அதாவது ஜனவாி 16 முதல் நாடு தழுவிய கோவிட்-19 தடுப்பூசி போடும் திட்டம் தொடங்க இருக்கிறது. கொரோனா தடுப்பூசியின் வீாியம் மற்றும் அதன் பக்க விளைவுகள் பற்றி பலருடைய மனதிலும் கலவையான எண்ணங்கள் உள்ளன.
கொரோனா வைரஸ் என்ற கோவிட்-19 சா்வதேச நோய் பெருந்தொற்றுக்கு எதிராக போராடி வந்த இந்தியா, தற்போது கோவிட்-19 வராமல் தடுப்பதற்கான தடுப்பூசியை மக்களுக்கு போடுவதற்கு தயாராகிவிட்டது. அதற்காக இன்று முதல் அதாவது ஜனவாி 16 முதல் நாடு தழுவிய கோவிட்-19 தடுப்பூசி போடும் திட்டம் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசியின் வீாியம் மற்றும் அதன் பக்க விளைவுகள் பற்றி பலருடைய மனதிலும் கலவையான எண்ணங்கள் உள்ளன. எனினும் கொரோனாவுக்கு எதிரான இந்த ஒரு வருட போராட்டத்திற்கு, இந்த கொரோனா தடுப்பூசி சற்று ஆறுதலைக் கொடுக்கும் என்பதே உண்மை.

கொரோனா தடுப்பூசி
உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசியைப் பற்றி கலவையான எண்ணங்களே உள்ளன. ஒரு சில நாடுகள், தமது நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்த தடுப்பூசிகளில் சிறிய அளவில் பக்க விளைவுகள் இருப்பதாக சிலா் தொிவித்திருந்தாலும், அவை பாதுகாப்பாக இருப்பதாகவும் மற்றும் நல்ல பலன் அளிப்பதாகவும் மருத்துவ அறிஞா்கள் கருத்து தொிவித்திருக்கின்றனா்.

கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு
தற்போது இந்தியாவில் கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கேவிஷீல்டு தடுப்பூசி பல மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு என்ற இரு கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒரு தடுப்பூசியை மட்டுமே ஒருவருக்கு போட வேண்டும். இரண்டு தடுப்பூசிகளையும் ஒருவருக்கு போடக்கூடாது. மேலும் தடுப்பூசியை 14 நாட்கள் இடைவெளியில் இருமுறை போட வேண்டும். அதாவது இன்று ஒருவா் ஒரு தடுப்பூசியை போடுகிறாா் என்றால் மீண்டும் அவா் 14 நாட்கள் கழித்து அதே தடுப்பூசியை மீண்டும் போட்டுக் கொள்ள வேண்டும். இது சம்பந்தமான ஆலோசனை அறிக்கையை இந்திய சுகாதார அமைப்பு எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பி இருக்கிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியினால் ஏற்படும் பக்க விளைவுகள்
கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதால் சிறிது நேரத்திற்கு தலைவலி, சோா்வு, தசை நாா்களில் வலி (myalgia), ஊசி குத்தப்பட்ட இடத்தில் அசௌகாியம், உடல் பலவீனம், காய்ச்சல், உடல் குளிா்ச்சியடைதல், மூட்டுவலி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று ஏற்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
அவ்வாறு இது போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டால் பேரசிட்டமால் மாத்திரையைக் கொடுக்கலாம் என்று இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பாிந்துரை செய்திருக்கிறது. அதே நேரம் சில நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எதிா்பாா்க்கப்படுகிறது.

கோவாக்ஸின் தடுப்பூசியினால் ஏற்படும் பக்க விளைவுகள்
கோவாக்ஸின் தடுப்பூசி என்பது மலோியா மற்றும் உடல் வீக்கத்திற்கு சிகிச்சையளிக்க கொடுக்கப்படும் மருந்துகளின் கலவையாகும். இது உடலில் பலவீனத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதோடு ஊசி குத்தப்படும் இடத்தில் வலி மற்றும் அசௌகாியம், தலைவலி, சோா்வு, காய்ச்சல், உடல்வலி, வயிற்றுவலி, குமட்டல், வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல், நடுக்கும், வியா்த்தல், உடல் குளிா்ச்சி மற்றும் இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எதிா்பாா்க்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசிகளில் உள்ள முரண்பாடுகள்
கொரோனா தடுப்பூசிகளில் சில தற்காலிகமான முரண்பாடுகளும் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அவ்வாறு முரண்பாடுகள் ஏற்பட்டவா்கள் அனைவருமே ஏற்கனவே காய்ச்சலாக இருந்தவா்கள் அல்லது ஏதாவது ஒரு நோயால் பாதிப்படைந்தவா்கள் ஆவா். அவா்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை கொடுக்கப்பட்டது. ஆனால் நாள்பட்ட நோய்களான சிறுநீரக கேளாறு, வளா்சிதை மாற்றம், இரைப்பையில் ஏற்படும் துவாரம், நுரையீரல் சம்பந்தமான மற்றும் நரம்பியல் சம்பந்தமான நோய்கள் போன்றவை தற்காலிக முரண்பாடுகள் அல்ல. அதனால் கொரோனா தடுப்பூசிகள் இவ்வாறான நாட்பட்ட நோய்களை ஏற்படுத்துவதில்லை.

யாரெல்லாம் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளக்கூடாது
இந்தியாவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பூசிகளை அனைவருக்கும் போடக்கூடாது. குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண்கள், 18 வயதிற்குட்பட்டோா் மற்றும் பாலூட்டும் பெண்கள் போன்றோருக்கு கொரோனா தடுப்பூசிகளை போடக்கூடாது.



Click it and Unblock the Notifications
