Latest Updates
-
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும்
உங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா?
கொரோனா பெண்களின் பாலியல் நடத்தையை பாதிக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளதால் தான் கேட்கிறோம். இந்த ஆய்வில், பெண்களின் பாலியல் ஆசை மற்றும் உடலுறவு கொள்ளும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள
பெண்களே! வரவர உங்கள் பாலியல் நடத்தையில் மாற்றங்களைக் காண்கிறீர்களா? நீங்கள் அடிக்கடி செக்ஸ் பற்றி யோசிக்கிறீர்களா? ஏன் இவ்வாறு கேட்கிறோம் என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? கொரோனா தொற்றுநோய் பெண்களின் பாலியல் நடத்தையை பாதிக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளதால் தான் கேட்கிறோம். இந்த ஆய்வில், பெண்களின் பாலியல் ஆசை மற்றும் உடலுறவு கொள்ளும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், அவர்களின் பாலியல் வாழ்க்கையின் தரம் குறைந்திருப்பதும் தெரிய வந்தது.

எசென்லர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் குழு கொரோனா தொற்றுநோயின் தாக்கத்தை பெண்களின் பாலியல் நடத்தையின் மீது மதிப்பீடு செய்தது. இங்கு சர்வதேச மகளிர் மருத்துவவியல் மற்றும் மகப்பேறியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் சில கண்டுபிடிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் தெரிய வந்த விஷயங்கள்
* COVID-19 என்னும் கொரோனா தொற்றுநோய் பரவும் காலத்தில் உடலுறவு வாரத்திற்கு சராசரியாக 2.4 மடங்கு அதிகரித்துள்ளது. இது தொற்றுநோய்க்கு முந்தைய 6-12 மாதங்களில் 1.9 மடங்காக இருந்தது.
* கொரோனா தொற்றுநோய்க்கு முன்னர் கருத்தரிக்க விரும்பிய பெண்களின் எண்ணிக்கை 32.7 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போதோ அது 5.1 சதவீதமாக குறைந்துள்ளது.
* COVID-19 என்னும் கொரோனா தொற்றுநோய் பரவல் காலத்தில் கருத்தடை பயன்பாடு குறைந்துள்ளது.
* கொரோனா தொற்றுநோய்களின் போது மாதவிடாய் கோளாறுகள் முன்பை விட பொதுவானவையாகி விட்டது (27.6 சதவீதம் மற்றும் 12,1 சதவீதம்).

பாலியல் அதிருப்திக்கு வழிவகுக்கும் சில பழக்கங்கள்
உடலுறவு உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டிற்குமே நல்லது. மகிழ்ச்சியான பாலியல் அனுபவங்கள் தான் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தின் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்படுகின்றன. ஆனால் சில பழக்கங்கள் பாலியல் வாழ்க்கையை நாசப்படுத்திவிடுகிறது. இங்கு பாலியல் அதிருப்திக்கு வழிவகுக்கும் சில பழக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மோசமான டயட்
ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் சரியான உடல் எடையைப் பராமரிப்பது ஒரு சிறப்பான பாலியல் வாழ்க்கைக்கு முக்கியமாகும். மறுபுறம், மோசமான டயட் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுத்து, பாலியல் வாழ்க்கையை மிகவும் மோசமாக பாதிக்கும். நீங்கள் சிறப்பான பாலியல் வாழ்க்கையை விரும்பினால், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்கவும். சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவை குறைப்பதோடு, உடல் பருமன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரித்துவிடுகின்றன. வறுத்த உணவுகளில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் உள்ளன. இவை ஆண் மற்றும் பெண்களின் பாலியல் ஆசையைக் குறைக்கும்.
மாறாக மாதுளை, செலரி, கேல் மற்றும் கேரட் போன்றவற்றை டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். இவை பிறப்புறுப்பு பகுதிகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மற்றும் உறவில் சிறப்பாக செயல்பட வைக்கும்.

பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகள்
பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகள் பாலியல் செயலிழப்புடன் தொடர்புடையவை. சில நிபுணர்கள், பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகளை உட்கொள்வது உடலுறவு மீதான ஆர்வத்தைக் குறைத்து, பாலுணர்வு பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று கூறுகிறார்கள்.

புகைப்பிடிப்பது
புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், அதுவும் மோசமான பாலியல் வாழ்க்கைக்கு ஓர் காரணம். சிகரேட் பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு உச்சக்கட்ட இன்பத்தைக் காண்பது மிகவும் கடினமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. புகைப்பிடிப்பதால் பிறப்புறுப்புகளுக்கு செல்லும் இரத்த நாளங்களை சேதப்படுத்தி, இரத்த ஓட்டத்தை தடை செய்து, விறைப்பு பிரச்சனையை ஏற்படுத்தும். அதோடு பாலியல் ஆசை மற்றும் திருப்தியைக் குறைத்து, மலட்டுத்தன்மை அபாயத்தை அதிகரிக்கும்.

அதிகளவிலான உடலுறவு
ஆய்வின் படி, அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவதால் பாலியல் திருப்தி குறைவதாக தெரிய வந்துள்ளது. ஆகவே அடிக்கடி உடலுறவு கொள்வதைத் தவிர்த்து, இடைவெளி விட்டு உறவில் ஈடுபடுங்கள். இதனால் உங்கள் பாலியல் வாழ்க்கை எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

போதுமான தூக்கமில்லாமை
மோசமான தூக்கம் பாலியல் வாழ்க்கையை அழிக்கக்கூடும். போதுமான தூக்கமில்லாமை ஆண் மற்றும் பெண்களின் உடலில் ஹார்மோன்களின் அளவு குறைக்கும். மேலும் இது பாலியல் ஆசை மற்றும் திருப்தியைப் பாதிக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. சில நிபுணர்கள், பெண்கள் வழக்கத்தை விட ஒரு மணிநேரம் அதிகமாக தூங்கினால், அவர்களின் பாலியல் ஆசை மேம்படும் என்றுகூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications