Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளை குறைக்கணுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...
கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்பட்டால், உடலானது வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்று அர்த்தம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வரும் நிலையில், கோவிட்-19 நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்க மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியைப் போடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆனால் மக்களிடையே கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து இன்னும் குழப்பம் நிலவி வருகிறது. கொரோனா தடுப்பூசியின் முதல் ஷாட்டை பெற்றவர்கள் பல பக்கவிளைவுகளை சந்திப்பதாக வெளிவந்த அறிக்கைகளால் ஏராளமான மக்கள் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள அஞ்சுகிறார்கள்.

அதில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றவர்கள் காய்ச்சல், உடல் வலி, ஊசி போட்ட இடத்தில் வலி போன்ற பக்கவிளைவுகளை சந்திக்கிறார்கள். இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடலானது வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்று அர்த்தம் என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த அறிகுறிகள் தடுப்பூசி பெற்ற ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் மறைந்துவிடும். நீங்கள் கொரோனா தடுப்பூசியால் அசௌகரியத்தை எதிர்கொள்கிறீர்கள் என்றால், கீழே வலி மற்றும் அசௌகரியத்தைக் குறைக்க செய்ய வேண்டிய சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

நீரேற்றத்துடன் இருக்கவும்
காய்ச்சல் மற்றும் பலவீனம் கொரோனா தடுப்பூசியின் சில பொதுவான பக்கவிளைவுகள் ஆகும். பொதுவாக இந்த அறிகுறிகள் 2-3 நாட்கள் வரை இருக்கும். போதுமான அளவு நீரைக் குடிப்பதால், உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றப்பட்டு, விரைவில் குணமாகலாம். எனவே கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவுகளைக் குறைக்க தடுப்பூசி போட்ட பின் குறைந்தது இரண்டு நாட்களுக்கு அதிக நீரைக் குடியுங்கள். வேண்டுமானால் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள இளநீர், ஜூஸ் போன்றவற்றைக் குடிக்கலாம்.

ஓய்வு தேவை
கொரோனாவுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்க உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இதனால் மூட்டு வலி, தலைவலி, குமட்டல் போன்ற சில அசௌகரியங்களை சந்திக்க நேரிடும். ஆகவே கொரோனா தடுப்பூசி போட்ட பின் அதிகமாக எந்த வேலையையும் செய்யாமல் நன்கு உடலுக்கு ஓய்வை கொடுங்கள். முக்கியமாக தடுப்பூசி போடுவதற்கு முன்னும், பின்னும் நன்கு தூங்கி எழுங்கள். மனதை அமைதியாக வைத்து, மன அழுத்த அளவைக் குறையுங்கள். சரியான நேரத்தில் தூங்குவது மற்றும் மன அழுத்தமின்றி இருப்பது, நோயெதிர்ப்பு சக்தியை ஆதரித்து, தடுப்பூசியால் உடலில் ஆன்டிபாடிகளை உருவாக்க உதவுகிறது.

ஐஸ் ஒத்தடம் கொடுக்கவும்
கொரோனா தடுப்பூசி போட்ட சிலருக்கு ஊசி போட்ட இடத்தில் புண், வலியுடன், ஊசி போட்ட இடம் சிவந்தும் இருக்கலாம். இதன் விளைவாக கைகளை நகர்த்துவது அல்லது அன்றாட பணிகளை செய்வதில் சிரமத்தை சந்திக்கலாம். இப்படியான அசௌகரியத்தை அனுபவித்தால், ஐஸ் பேக் அல்லது ஈரத் துணியை ஊசி போட்ட இடத்தில் வைக்கலாம். அதோடு கைகளை அடிக்கடி நகர்த்துங்கள் மற்றும் கைகளுக்கான பயிற்சிகளையும் செய்யுங்கள். இது வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவும்.

வலி நிவாரண மருந்துகள்
வழக்கமாக, தடுப்பூசி போட்ட பின் சந்திக்கும் வலி மற்றும் அசௌகரியம் ஓரிரு நாட்களில் போய்விடும். ஆனால் அவ்வாறு சரியாகாமல் உங்களுக்கு மிகுந்த அசௌகரியத்தை வழங்கினால், அப்போது வலி நிவாரண மருந்துகளை எடுக்கலாம். அதற்கு மருத்துவரை அணுகி, அவரிடம் நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளைக் கூறி, அவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை எடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் சுயமாக எந்த மாத்திரைகளையும் எடுக்காதீர்கள். இது தடுப்பூசியின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்திவிடும்.

ஆரோக்கியமான உணவுகள்
ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கங்களை மேற்கொள்ளும் போது, உடலில் தடுப்பூசியின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருக்கும். எனவே ஃபிட்டாகவும், விரைவில் குணமாகவும் ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள். குறிப்பாக புரோட்டீன், ஜிங்க், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். ஆரோக்கியமான டயட் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுவதோடு, சீக்கிரம் குணமாகவும் உதவுகிறது. முக்கியமாக கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகளில் இருந்து விலகி இருங்கள்.



Click it and Unblock the Notifications