Latest Updates
-
இன்றைய ராசிபலன் 01 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் மே மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பம் இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே வராதாம் -
வெயில் கொடுமையா? கோடை கால திருமணத்தை ஜில்லுனு மாத்த இந்த 5 ஐடியாக்கள் போதும்! -
Labour Day Wishes:தொழிலாளர் தினத்தில் உங்களுக்கு தெரிஞ்ச உழைப்பாளிகளுக்கு இந்த வாழ்த்தை சொல்ல மறந்துராதீங்க -
1 கப் மைதா இருந்தா இந்த சூப்பரான மங்களூர் பன்-யை ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
சஞ்சய் கபூர் சொத்து விவகாரம்: கரிஷ்மா கபூர் குழந்தைகளின் உரிமையை மீட்டெடுத்த நீதிமன்றம்! -
இந்த 4 எழுத்துக்களில் பெயர் தொடங்குபவர்கள் ராஜவாழ்க்கை வாழ பிறந்தவர்களாம் - உங்க பெயரின் முதல் எழுத்து என்ன? -
கர்நாடகா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… காற்று சுத்தமாகும், பணமும் அதிர்ஷ்டமும் தானாக வரும்!
கொரோனா இருந்தால் இந்த வரிசையில தான் அறிகுறி தெரியுமாம்...
கொரோனாவின் அறிகுறிகளைப் பற்றி பேசுகையில், ஆரம்பத்தில் காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகிய மூன்று அறிகுறிகள் மட்டுமே பதிவாகியிருந்தன.
கோவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று, பல ஆச்சரியமான வழிகளில் செயல்படுவதைக் கண்டு உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இது மனித உடலை பல வழிகளில் பாதிக்கிறது. இதனால் இந்த தொற்றின் பல்வேறு அறிகுறிகள் குழப்பத்தை உண்டுபண்ணும் வகையில் வழக்கமாக அனுபவிக்கும் பிரச்சனைகளாகவே இருக்கின்றன. ஆனால் இத்தொற்று ஏற்பட்ட சிலர் அறிகுறியற்றவர்களாவும், சிலர் தீவிர அறிகுறிகளையும் அனுபவிக்கின்றனர். இப்படி தீவிர அறிகுறிகளை சந்திப்பவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியது அவசியம்.

இதுவரை கோவிட்-19 நோயால் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். இதைப் பார்க்கும் போது இந்நோய் தொற்று எவ்வளவு ஆபத்தானது என்பதை நமக்கு உணர்த்துகிறது. கொரோனாவின் அறிகுறிகளைப் பற்றி பேசுகையில், ஆரம்பத்தில் காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகிய மூன்று அறிகுறிகள் மட்டுமே பதிவாகியிருந்தன.
இருப்பினும், காலப்போக்கில், அறிகுறிகளின் பட்டியல் நீளமாகி, அதில் பிற அறிகுறிகளும் சேர்க்கப்பட்டன. உண்மையில் இந்த அறிகுறிகளின் பட்டியலில் பல நோய்த்தொற்றின் முதன் அறிகுறிகளாக கண்டறியப்பட்டன. கீழே கொரோனா தொற்று இருந்தால், எந்த வரிசையில் அறிகுறிகள் தோன்றும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கொரோனா அறிகுறிகளின் வரிசை பட்டியல்
கோவிட்-19 நோய்த்தொற்று பலவிதமான அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும், நிணபுர்கள் கொரோனா தொற்றின் அறிகுறிகள் தோன்றும் முறை மற்றும் ஒழுங்கைக் கண்டறிந்துள்ளனர். அந்த கொரோனா அறிகுறிகளின் வரிசை பட்டியல் பின்வருமாறு...

முதல் அறிகுறி - காய்ச்சல்
பெரும்பாலான கொரோனா நோயாளிகள் அனுபவித்ததாக கூறிய முதல் அறிகுறி காய்ச்சல் ஆகும். எனவே கொரோனா வைரஸ் உடலினுள் நுழைந்த சில நாட்களில் காய்ச்சல் வர வாய்ப்புள்ளது.

இரண்டாம் அறிகுறி - இருமல்
கொரோனா வைரஸ் மூக்கு அல்லது வாய் வழியாக உடலினுள் நுழைவதால், கொரோனா தொற்றின் இரண்டாவது அறிகுறியாக கூறப்படுவது இருமல் ஆகும். கோவிட்-19 காரணமாக ஏற்படும் இருமல் இயற்கையாக வறட்டு இருமலாக இருக்கும்.

மூன்றாம் அறிகுறி - சுவை மற்றும் வாசனை இழப்பு
கோவிட்-19 நோய்த்தொற்றின் ஆரம்ப கால அறிகுறிகளில் ஒன்றாக சுவை மற்றும் வாசனை இழப்பு கூறப்படுகிறது. நாவல் கொரோனா வைரஸ் வாய் அல்லது மூக்கு வழியாக உடலினுள் நுழைவதால், அது வாசனை மற்றும் சுவை உணர்வுகளைப் பாதிக்கும் வாய்ப்புள்ளது.

நான்காவது அறிகுறி - தொண்டை புண், தலைவலி, தசை வலி
வைரஸ் உடலினுள் நுழைந்து பெருக்கமடைய ஆரம்பிக்கும் போது, தசை வலி, தொண்டை புண் மற்றும் தலை வலி போன்றவை ஏற்படுகிறது. இந்த வைரஸ் உடலினுள் வீக்கம்/காயத்தை உண்டாக்குவதால் தான், இம்மாதிரியான வலிகள் ஏற்படுகிறது.

ஐந்தாவது அறிகுறி - வயிற்றுப்போக்கு
கொரோனா வைரஸ் செரிமான அமைப்பையும், குடலையும் பாதிப்பதன் விளைவாகவே வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. கோவிட்-19 காரணமாக ஏற்படும் வயிற்றுப்போக்குடன் மற்ற அறிகுறிகளையும் அனுபவித்தால், நீங்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்த விரைவில் பரிசோதனை செய்ய வேண்டும்.

முடிவு
மேலே கொடுக்கப்பட்டுள்ள கோவிட்-19 இன் அறிகுறி வரிசைப் பட்டியல் பெரும்பாலான மக்கள் அனுபவித்த மிகவும் பொதுவான அறிகுறிகளைப் பொறுத்து கூறப்பட்டிருந்தாலும், தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வேறுபடுவதால், இந்த வரிசைப் பட்டியலும் மாறுபடும். மேலும் இவை மட்டும் கோவிட்-19 இன் விளைவாக மக்கள் அனுபவித்த அறிகுறிகள் அல்ல. கண் புண், கை மற்றும் கால்களில் புண்கள் மற்றும் பிற அறிகுறிகளும் உலகளவில் சிலரால் அனுபவிக்கப்பட்ட அறிகுறிகளாகும். எனவே எம்மாதிரியான அறிகுறியை நீங்கள் சந்தித்தாலும், உடனே மருத்துவரை அணுகுங்கள்.



Click it and Unblock the Notifications