For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸின் சில அசாதாரண அறிகுறிகள்!

இன்று வரை ஒவ்வொரு நாளும் கொரோனா குறித்து புதிய விஷயங்களை ஆய்வாளர்கள் தெரிந்து கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளைப் பார்த்தால், இன்று வரை அதன் அறிகுறி பட்டியல் நீண்டு கொண்டே உள்ளது.

|

உலகமே கொரோனா வைரஸின் பிடியில் சிக்கி, அதிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த கொடிய வைரஸ் தொற்றிக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதில் இதுவரை சுமார் 170-க்கும் அதிகமான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பல கட்ட மனித பரிசோதனைகளில் உள்ளன. இருப்பினும் எந்த ஒரு தடுப்பூசியும் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

Coronavirus Symptoms: Most Uncommon Signs Of COVID-19

கடந்த வருடம் சீனாவின் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ், இன்று உங்கெங்கிலும் பரவி 24 லட்சத்திற்கும் அதிகமானோரை பாதித்ததுடன், சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமானோரின் உயிரைப் பறித்துள்ளது.

இந்த வைரஸ் குறித்து ஆராயும் நிபுணர்கள், இன்று வரை ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களை தெரிந்து கொண்டும் வருகின்றனர். அப்படி இதுவரை ஆராய்ந்ததில் கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளைப் பார்த்தால், இன்று வரை அதன் அறிகுறி பட்டியல் நீண்டு கொண்டே உள்ளது.

கீழே கொரோனா வைரஸ் தொற்றின் கவனிக்க வேண்டிய சில அசாதாரண அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொரோனாவின் மிகவும் பொதுவான அறிகுறிகள்:

கொரோனாவின் மிகவும் பொதுவான அறிகுறிகள்:

கொரோனா வைரஸ் ஒவ்வொருவரையும் வெவ்வேறு வழியில் தாக்குகிறது. எனவே இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு மாதிரியான அறிகுறிகள் தெரிய வருகின்றன. அதில் கொரோனா வைரஸின் மிகவும் பொதுவான அறிகுறிகளாக காய்ச்சல், வறட்டு இருமல், சோர்வு, மூச்சுத்திணறல் போன்றவை இருந்தது.

மிதமான அறிகுறிகள்:

மிதமான அறிகுறிகள்:

அதன் பின் கொரோனா வைரஸ் சிலருக்கு வேறு சில அறிகுறிகளை வெளிக்காட்டியது நிபுணர்களுக்கு தெரிய வந்தது. அந்த அறிகுறிகளாவன:

* கால் மற்றும் தசை வலி

* தொண்டை புண் அல்லது தொண்டை வலி

* வயிற்றுப்போக்கு

* வெண்படல அழற்சி

* தலைவலி

* சுவை அல்லது வாசனை இழப்பு

* சரும அரிப்பு

* கை, கால் விரல்களில் நிற மாற்றம்

கடுமையான அறிகுறிகள்:

கடுமையான அறிகுறிகள்:

ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தீவிரமாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளாவன:

* சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத்திணறல்

* மார்பு வலி அல்லது அழுத்தம்

* பேச முடியாமை அல்லது நகர முடியாமை

இப்போது கொரோனா வைரஸின் சில அசாதாரண அறிகுறிகளைக் காண்போம்.

தொடர்ச்சியான விக்கல்

தொடர்ச்சியான விக்கல்

அமெரிக்காவில் உள்ள இரண்டு கோவிட்-19 நோயாளிகளுக்கு விக்கல் மட்டும் தான் ஒரே முக்கிய அறிகுறியாக இருந்துள்ளது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் மிக அரிதான அறிகுறியாக விக்கல் இருக்கலாம் என்று ஆராய்ச்சியில் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால் கொரோனா நோய்த்தொற்றுக்கும், தொடர்ச்சியான விக்கலுக்கும் இடையிலான உறவைக் கண்டுபிடிக்க இன்னும் நிறைய ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

தலைமுடி உதிர்வு

தலைமுடி உதிர்வு

தலைமுடி உதிர்வும் கோவிட்-19 நோய்த்தொற்றின் அசாதாரண அறிகுறிகளுள் ஒன்றாகும். கொரோனாவில் இருந்து மீண்ட சிலர் தலை முடி உதிர்வை அனுபவிப்பதாக ஒரு புதிய ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. அதே சமயம், கோவிட்-19 நோயாளிகள் தாங்கள் குணமடைந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு முடி உதிர்வு பிரச்சனையை சந்திப்பதைக் கூறுவதாகவும் பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மொத்தத்தில் கொரோனா வைரஸ் உடலுக்குள் வந்தால் தலைமுடியை உதிரச் செய்கிறது என்பதை மறவாதீர்கள்.

ஊற நிற சரும அரிப்பு

ஊற நிற சரும அரிப்பு

கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட சில இளைஞர்கள் மற்றும் இளம் வயதினர் கால் மற்றும் விரல்களில் வலிமிகுந்த சிவப்பு மற்றும் ஊதா நிற சருமத்துடன், அவிடத்தில் கடுமையான அரிப்புக்களை அனுபவித்திருக்கிறார்கள். ஆகவே இந்த வகை அரிப்பிற்கு வல்லுநர்கள் கோவிட்-டோ என்று பெயரிட்டுள்ளனர்.

சொறி, படை அல்லது சின்னம்மை புண்கள்

சொறி, படை அல்லது சின்னம்மை புண்கள்

கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்ட 88 பேரை இத்தாலியில் உள்ள சரும நிபுணர் மதிப்பீடு செய்ததில், அவர்களுள் 20 சதவீத பேருக்கு தோல் தொடர்பான சில அறிகுறிகள் இருப்பதை கண்டறிந்தார். இந்த தோல் அறிகுறிகளாவன சிவப்பு நிற தடிப்புகள், சின்னம்மை புண்கள் மற்றும் பரவலான படை நோய் போன்றவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus Symptoms: Most Uncommon Signs Of COVID-19

Initially, people infected with coronavirus only showed symptoms like fever, chills, breathlessness, body ache and headache.
Desktop Bottom Promotion