Latest Updates
-
அடுப்பில்லாம செய்யக்கூடிய இடிச்ச தயிர் சட்னி - சூடான சாத்துக்கு செமயா இருக்கும்.. ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசி பெண்களுக்கு ரொம்ப நேர்மையான கணவர் கிடைக்கும் அதிர்ஷ்டமிருக்காம்... உங்க ராசி இதுல இருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் ராகு-கேது பெயர்ச்சி: மார்ச் இறுதி முதல் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகுது! -
38 நிமிடங்கள் மட்டுமே நடந்த வரலாற்றின் மிகவும் வினோதமான போர்... இந்த போரில் எந்த நாடு ஜெயித்தது தெரியுமா? -
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா?
கோடைகாலத்தில் வைட்டமின் சி சத்துள்ள பழங்களை சாப்பிடுங்க - கொரோனா வராது!
நம்முடைய உடம்பில் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிக அளவில் இருந்தால் தான் கோடை காலத்தில் ஏற்படும் சரும நோய்கள், அம்மை நோய்கள், வெக்கை நோய், சளி, இருமல், காய்ச்சல், வாந்தி பேதி என எதுவும் வராமல் நேராமல் நம
நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் குறைந்தால், காத்துக்கொண்டிருக்கும், கொரோனா வைரஸ் முதல் எல்லா வைரஸ் கிருமிகளும் வரிசை கட்டி வந்து நம்மை தாக்கும். நோய்க் கிருமிகளிடம் இருந்தும் நம்மை தற்காத்துக் கொள்வதற்கு அதிக அளவில் நீர்ச்சத்துள்ள பானங்களை அதிக அளவில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து எந்த வைரஸும் நம்மை தாக்காது.

பெரும்பாலான மருத்துவர்களும், அதிக அளவில் நீர்ச்சத்துள்ள பானங்களை குடிக்க அறிவுறுத்தி வருகிறார்கள். குறிப்பாக கோடை காலத்தில் வெய்யிலின் தாக்கத்திலிருந்து காக்கும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமுள்ள பானங்களை குடிக்குமாறு அறிவுறுத்துகிறார்கள். வைட்டமின் சி சத்து குறைபாடு உள்ளவர்களையே பெரும்பாலும் கொரோனா வைரஸ் தாக்கும் என்று மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர். எனவே வைட்டமின் சி சத்துக்கள் அதிகமுள்ள பானங்கள் எவை என்பதை பார்க்கலாம்.
தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. கூடவே கோடை காலத்தில் தாக்கும் நோய்க் கிருமிகளும் நம்மை தாக்க தயாராகிவிட்டன. இந்த சமயத்தில் நோய்க் கிருமிகள் நம்மை தாக்காமல் இருக்க வசதி படைத்தவர்கள் கோடை வாசஸ்தலங்களுக்கும், குளிர்பிரதேசங்களுக்கும் படையெடுத்து விடுவார்கள். ஆனால் வசதியில்லாத ஏழை எளிய மக்கள் வெய்யிலுக்கு பயந்துகொண்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பார்கள்.
வெய்யிலில் இருந்து பாதுகாக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கவும் சாதாரண மக்கள் பெரும்பாலும் அதிக அளவில் தண்ணீர் குடித்தும், குடித்து சமாளித்து வருவார்கள். நோய் எதிர்ப்பு சக்திகள் அதிக அளவில் இருந்தால் தான் கோடை காலத்தில் ஏற்படும் சரும நோய்கள், அம்மை நோய்கள், வெக்கை நோய், சளி, இருமல், காய்ச்சல், வாந்தி பேதி என எதுவும் வராமல் நேராமல் நம்மை காக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி
நோய் வந்தபின் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இல்லாமல், வருமுன் காப்போம் என்ற அடிப்படையில், நோய் கிருமிகள் நம்மை தாக்கும் முன்பாகவே, அதற்கான பாதுகாப்பு உத்திகளை நாம் கையாண்டால் கொரோனா வைரஸ் முதல் எந்த வைரஸும் நம்மை அணுகாது என்பது நிச்சயம். இந்த கோடை காலத்தில் நமக்கு முதலில் ஏற்படுவது வெய்யிலால் ஏற்படும் உடல் சோர்வு தான். உடல் சோர்வு ஏற்பட்டால், தானாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும்.

வைட்டமின் சி
நோய் எதிர்ப்பு சக்திகள் குறைந்தால், காத்துக்கொண்டிருக்கும், கொரோனா வைரஸ் முதல் எல்லா வைரஸ் கிருமிகளும் நம்மை தாக்க வரிசை கட்டி நிற்கும். எனவே கொரோன வைரஸ் முதல் அனைத்து விதமான நோய்க் கிருமிகளிடம் இருந்தும் நம்மை தற்காத்துக் கொள்வதற்கு அதிக அளவில் நீர்ச்சத்துள்ள பானங்களை அதிக அளவில் குடிக்க வேண்டும். பெரும்பாலான மருத்துவர்களும், அதிக அளவில் நீர்ச்சத்துள்ள பானங்களை குடிக்க அறிவுறுத்தி வருகிறார்கள். குறிப்பாக கோடை காலத்தில் வெய்யிலின் தாக்கத்திலிருந்து காக்கும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமுள்ள பானங்களை குடிக்குமாறு அறிவுறுத்துகிறார்கள்.

தர்பூசணி பழம்
தர்பூசணி பழங்கள் ஏழைகளின் குளிர்பானம் என்று சொல்லலாம். இவை பெரும்பாலும் கோடை காலத்தின் முன்னோட்டமாக இருக்கும் பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே விற்பனைக்கு வந்துவிடும். தர்பூசணி பழத்தில் நமது உடலுக்கு தேவையான அதிக நீர்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் கோடை காலங்களில் அதிக அளவில் தர்பூசணி பழங்களை சாப்பிட்டு வந்தால், உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் காப்பாற்றும். கூடுதலாக தர்பூசணியுடன் புதினா இலைகளையும் சேர்த்து பானமாக குடித்து வரலாம்.

ஆரஞ்சு பழம்
ஆரஞ்சு பழம் நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருவதோடு, உடலில் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத வைரஸ் கிருமிகளை போராடி அழிக்கக்கூடியது. மேலும் ஆரஞ்சு பழத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிக அளவில் நிறைந்துள்ளது. அதோடு, வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்திருப்பதால், உடம்புக்கு தேவையான இரும்புச் சத்துக்களை எடுத்துக்கொள்கிறது. வெள்ளை அணுக்கள் அதிகம் அழிவு ஏற்படாமல் இளமையாக இருக்க உதவுகிறது. ஒரு ஆரஞ்சு பழத்தில் பாதிக்கு மேல் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. எனவே கோடையில் நாள் தோறும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டும், பானமாக எடுத்துக்கொண்டும் கொரோனா வைரஸ் கிருமிகள் தாக்காமல் தற்காத்துக்கொள்ளலாம்.

கேரட்
கேரட் இனிப்பு சுவையோடு இருந்தாலும், காய்கறி வகையில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. நாள்தோறும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால், கண்பார்வை கோளாறு ஏற்படாது என்பது நிச்சயம். கேரட் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு காய்கறியாகும். பச்சையாக சாப்பிட பிடிக்காதவர்கள், ஜூஸாக அருந்தலாம். கேரட்டில் அதிக அளவில் நார்ச்சத்து, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் சருமத்தை பாதுகாக்கும் பீட்டா கரோட்டின் என்ற அமிலச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இது புற்று நோய் ஏற்படாமல் பாதுகாக்கும் என்பதோடு கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. பீட்டா கரோட்டின் அமிலங்கள் நம்முடைய உடலுக்குள் செல்லும்போது வைட்டமின் ஏ சத்தாக மாறி, வெள்ளை அணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. வெள்ளை அணுக்கள் தான் நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிக அளவில் அளிக்கிறது. எனவே கேரட்டை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டாலும், ஜூஸ் ஆக குடித்து வந்தாலும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

பெர்ரி பழம்
பெர்ரி பழம் அனைத்து விதமான மரபியல் காரணங்களால் ஏற்படும் புற்றுநோயை கட்டுப்படுத்தும் குணம் கொண்டது. இதில் ப்ளூ பெர்ரி மற்றும் ரோஸ் பெர்ரி என இரண்டு விதமான பழங்கள் உள்ளன. இவற்றில் ஆந்தோசயனைன், ஃப்ளேவினாய்டு ஆகிய வேதிப்பொருட்கள் அதிக அளவில் நிரம்பியுள்ளன. இது உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது. மேலும் ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. அதோடு கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் காக்கிறது. ஆகவே ப்ளூ பெர்ரி மற்றும் ரோஸ் பெர்ரி பழங்களை வெறுமனே சாப்பிட பிடிக்காதவர்கள் மிக்ஸியில் அரைத்து ஜூஸாக குடிக்கலாம்.

பீட்ரூட்
காய்கறி வகையில் அதிக அளவில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்துள்ள காய்கறி பீட்ரூட். காய்ச்சல் வந்தவர்கள் அந்த நேரத்தில் பீட்ரூட்டை தோலை நீக்கி மிக்ஸியில் அரைத்து சிறிது தேன் மற்றும் இஞ்சி கலந்து ஜூசாக அருந்தலாம். பீட்ரூட்டின் மணம் பிடிக்காதவர்கள், கூடவே கேரட், இஞ்சி, சிறிது மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து ஜூஸ் தயார் செய்து பருகலாம். அப்படி இல்லாவிட்டால் பொரியலாக தயார் செய்தும் சாப்பிடலாம். பீட்ரூட்டில் இரும்புச் சத்து, ஃபோலேட் மற்றும் வைட்டமின் 12 போன்ற ரத்த அணுக்களின் உற்பத்திக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. பீட்ரூட்டை அதிக அளவில் எடுத்துக்கொள்வதால், நம் உடம்பிலுள்ள நைட்ரிக் ஆக்சைடு ரத்த நாளங்களை விரிவடையச் செய்து ரத்த ஒட்டத்தை அதிகரிக்க செய்கிறது. மேலும் கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன.

ஆப்பிள்
தினந்தோறும் ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வந்தால் மருத்தவரின் உதவி தேவைப்படாது, ஆயுள் அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மையாகும். ஆப்பிள் பழத்தில் வைட்டமின் சி சத்துக்களும் அதிக ஆக்ஸிடெண்ட்கள் உள்ளன. இது ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள பைட்டோ கெமிக்கல் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் அடியோடு காணாமல் போகும். மூக்கில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சுவாச பிரச்சனைகளை போக்குகிறது. இது நுரையீரலை பாதுகாக்கவும் உதவுகிறது. ஆப்பிள் பழத்தோடு சிறிது கீரையையும் சேர்த்து ஜூஸாக குடித்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

தக்காளி
தக்காளி இல்லாமல் எந்த ஒரு சமையலும் நடக்காது என்பது அனைவரும் அறிந்ததே. தக்காளியை வெறுமனே சாப்பிடலாம். ஜூஸாக தயார் செய்தும் குடிக்கலாம். தக்காளி பழத்தில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இதிலுள்ள லைக்கோஃபின் என்னும் வேதிப்பொருள் தான் சிவப்பு நிறத்தை அளிக்கிறது. இது அதிக அளவில் நமது உடலுக்கு நன்மையளிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கு தூண்டுகோலாக இருக்கும் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் இது உதவுகிறது. மேலும் தக்காளிப் பழத்தில் காணப்படும் ஃபோலேட் சத்துக்கள் வைரஸ் தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது. எனவே அதிக அளவில் தக்காளிப் பழத்தை சாப்பிட்டு வந்தால் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.

தயிர்
கோடை காலத்தில் நாம் அதிகம் பயன்படுத்தும் பொருள் தயிர். பாலில் கால்சியம் நிறைந்தது போல், பாலில் இருந்து பெறப்படும் தயிரில் அதிக அளவு சத்துக்கள் உள்ளன. தயிரில் இருக்கும் புரோபயாட்டிக் என்னும் பாக்டீரியா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்சைமனோ இம்யுனோகுளோஃபுலின் சுரக்க உதவுகிறது. இந்த என்சைமனோக்கள் தான் நம்முடைய உடம்பில் நுழையும் வைரஸ்களை எதிர்த்து போராட உதவும் பாக்டீரியாக்களை அதிகரிக்க செய்கிறது. எனவே கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமுள்ள இந்த சமயத்தில் அதிக அளவில் தயிரை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications











