For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்கணுமா? அப்ப இந்த பொருட்கள உங்க உணவுல சேர்த்துக்கோங்க...!

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எலும்புகளை பலப்படுத்தவும் காப்பர் உதவுகிறது. காப்பர் அதிகமிருக்கும் உணவுகளை பார்க்கலாம்.

|

நம் உடலின் ஆரோக்கியத்திற்கு பல ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் அவசியம். அப்படி நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் தாமிரம் அல்லது காப்பரும் ஒன்று. நமது உடலில் என்சைம்களின் உற்பத்திக்கு தேவையான கனிமங்களில் தாமிரமும் ஒன்றாகும். இது மெலனின் மற்றும் திசுக்களை நம் உடலில் உருவாக்குகிறது.

Copper Rich Foods You Should Include In Your Diet

இரும்புசத்துடன் சேர்ந்து இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகவும் இது காரணமாக இருக்கிறது.மேலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எலும்புகளை பலப்படுத்தவும் இது உதவுகிறது. இது பல உணவுகளில் உள்ளது. 19 வயதிற்கு மேற்பட்ட ஒருவர் ஒரு நாளைக்கு 900 mcg காப்பர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பதிவில் எந்தெந்த உணவுகளில் தாமிரம் அதிகம் இருக்கிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடல் உணவுகள்

கடல் உணவுகள்

தாமிரம் நிறைந்த வகை உணவுகளில் கடல் உணவு நிச்சயமாக ஒன்றாகும். இந்த வகைகளில் சில டுனா, கலமாரி (அல்லது ஸ்க்விட்), இரால், ஹேடாக், சால்மன் மற்றும் மத்தி. அனைத்து கடல் உணவுகளிலும் தாமிரம் அதிகம் உள்ளது.

இறைச்சி

இறைச்சி

புரோட்டின்கள் மட்டுமின்றி இறைச்சியில் காப்பரும் அதிகமுள்ளது. உடலில் தாமிர குறைபாடுகள் உள்ளவர்கள் அதிகமாக இறைச்சியை சேர்த்துக் கொள்வது நல்லது. இறைச்சியின் ஈரலில் அதிகளவு வைட்டமின்கள் மட்டுமின்றி காப்பரும் அதிகம் உள்ளது.

முட்டை

முட்டை

முட்டையின் மஞ்சள் கருவில் சிறிய அளவில் தாமிரம் உள்ளது. இறைச்சி பிடிக்காதவர்கள் முட்டையின் மூலம் தாமிரத்தை பெறலாம். எனவே அதிகளவு முட்டைகள் உங்களுக்கு போதுமான அளவு தாமிரம் கிடைக்கலாம்.

MOST READ:இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை விட உங்கள் மூளைக்கு அதிக வயதாகிவிட்டது என்று அர்த்தம்...!

மசாலா மற்றும் மூலிகைகள்

மசாலா மற்றும் மூலிகைகள்

சில மசாலா பொருட்களில் காப்பர் உள்ளது. அன்றாட உணவுகளில் அவற்றின் பயன்பாடு நம் உடலுக்கு தாமிரத்தை அளிக்கும். இந்த மசாலாப் பொருட்கள் கடுகு, மிளகாய் தூள், கிராம்பு, செலரி விதை, சீரகம், குங்குமப்பூ, ஸ்பியர்மிண்ட், கொத்தமல்லி இலை, வெந்தயம், மெஸ், கறி தூள் மற்றும் வெங்காய தூள். உலர்ந்த மூலிகைகள் போன்றவற்றில் இவை அதிகமுள்ளது.

காய்கறிகள் மற்றும் பழங்கள்

காய்கறிகள் மற்றும் பழங்கள்

காளான், சோயாபீன்ஸ், முள்ளங்கி, கிட்னி பீன்ஸ் போன்றவற்றில் தாமிரம் அதிகமுள்ளது. பழங்களில் ஆன்டி ஆக்சிடண்ட்கள், வைட்டமின்கள், தாமிரம் போன்ற கனிமங்கள் அதிகம் உள்ளது. எலுமிச்சை, கொய்யாப்பழம், வாழைப்பழம், அன்னாசிப்பழம், ஸ்ட்ராபெரி போன்றவற்றில் தாமிரம் அதிக அளவில் உள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சாக்லேட்

சாக்லேட்

சாக்லேட் அனைவருக்கும் பிடித்த ஒரு பொருளாகும். சர்க்கரை சேர்க்கப்படாத சாக்லேட் அல்லது ஹாட் சாக்லேட் போன்றவற்றில் காப்பர் அதிகமுள்ளது. எனவே உங்கள் வீட்டில் எப்பொழுதும் கோகோ பவுடரை வைத்திருங்கள்.

MOST READ:இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களின் மனது கஷ்டப்படுவதை பற்றி கவலைப்படவே மாட்டார்களாம் தெரியுமா?

விதைகள்

விதைகள்

பொதுவாக அனைத்து வகையான விதைகளிலும் காப்பர் அதிகமுள்ளது. மேலும் இவற்றில் பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, பி & இ வைட்டமின்கள், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவை உள்ளன. பூசணி, ஸ்குவாஷ், தர்பூசணி விதைகள், எள், ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள் ஆகியவை தாமிரத்தைக் கொண்டிருக்கும் சில விதைகளாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Copper Rich Foods You Should Include In Your Diet

Copper helps in maintaining healthy bones, immune system and blood vessels.
Desktop Bottom Promotion