Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
உங்க மலத்தில் இரத்தமோ அல்லது 'இப்படி' இருந்தாலோ அது ஆபத்தான 'இந்த' புற்றுநோயோட அறிகுறியாம்!
மலத்தின் அதிர்வெண், வடிவம் அல்லது அளவு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றம் புற்றுநோயின் அறிகுறியாகும். இது பெரும்பாலும் இளம் வயதினருக்கு பிற்பகுதியில் கண்டறியப்படுகிறது. அத்தகைய அசாதாரண வடிவத்தை நீங்கள் கண்டவுடன், மருத்துவரிடம்
பெருங்குடல் மற்றும் மலக்குடல் ஆகியவை உணவுக் குழாயின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அவை வெளியேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெருங்குடல் என்பது பெரிய குடலின் மிக நீளமான பகுதியாகும் மற்றும் சிறுகுடலுக்கும் ஆசனவாய்க்கும் இடையே இணைப்பாக செயல்படுகிறது. மலக்குடல் பெருங்குடலுக்குப் பிறகு தொடங்குகிறது மற்றும் பெரிய குடலின் கடைசி சில அங்குலங்களைக் கொண்டுள்ளது. மலக்குடல் பகுதி அல்லது பெரிய குடலின் முடிவு பகுதியில் வயதானவர்களுக்கு புற்றுநோய் எளிதில் ஏற்படுகிறது. ஏனெனில், ஆய்வுகள் வயதான மக்களில் இருந்த போக்குகளைக் கண்டறிந்துள்ளன. இருப்பினும், சமீபத்திய ஆய்வுகள் இந்த போக்குகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காட்டியுள்ளன.

அதன்படி இளைய தலைமுறையினரும் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். பெருங்குடல் புற்றுநோயின் விஷயத்தில், வயதானவர்களை விட இளையவர்களுக்கு வரும் நிகழ்தகவு இரட்டிப்பாகும் மற்றும் மலக்குடல் புற்றுநோயின் நிகழ்தகவு நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. பெருங்குடல்-மலக்குடல் புற்றுநோய் எவ்வாறு பாதிக்கிறது? அதன் அறிகுறிகள் என்ன? என்று இக்கட்டுரையில் காணலாம்.

சமீபத்திய போக்குகள் ஆபத்தானவை
சமீபத்திய போக்குகள் சம அளவுகளில் ஆபத்தானவையாக உள்ளன. பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு மக்களிடையே எழ வேண்டும். இந்த புற்றுநோய்கள் உயிரிழப்பை ஏற்படுத்தும். இளம் தலைமுறையினர் இத்தகைய கொடிய நோய்களுக்கு இரையாவதற்கு சமகால உட்கார்ந்த வாழ்க்கை முறையே காரணம் என்று பரவலாகக் கூறப்பட்டது. இது தவிர, இன்னும் கண்டறியப்படாத பல சந்தேகக் காரணங்கள் உள்ளன.

புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள்
எவ்வாறாயினும், போக்குகளில் சமீபத்திய மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, ஒருவரின் குடல்-மலக்குடல் ஆரோக்கியத்தை கண்காணிப்பது மிகவும் முக்கியமானது என்பதை ஒப்புக்கொள்வது முக்கியம். நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும், புறக்கணிக்கக் கூடாத பெருங்குடல்-மலக்குடல் புற்றுநோயின் அறிகுறிகளை இங்கே காணலாம்.

திடீர் எடை இழப்பு
வெளிப்படையான காரணமின்றி உடல் எடையை குறைவது சாதாரணமானதல்ல. ஒரு கிலோ அல்லது இரண்டு கிலோ அல்லாமல், அதற்கு மேலும் அதிகளவு எடை குறைவது உங்களுக்கு பிரச்சனை இருப்பதை குறிக்கிறது. இதன் கணிசமான அளவு நிச்சயமாக ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும். அசாதாரண எடை இழப்பை நீங்கள் புறக்கணிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தாமதமாக்காமல் உங்களை பரிசோதித்துக்கொள்வது நல்லது.

குடல் இயக்கங்களில் மாற்றம்
மலத்தின் அதிர்வெண், வடிவம் அல்லது அளவு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றம் புற்றுநோயின் அறிகுறியாகும். இது பெரும்பாலும் இளம் வயதினருக்கு பிற்பகுதியில் கண்டறியப்படுகிறது. அத்தகைய அசாதாரண வடிவத்தை நீங்கள் கண்டவுடன், மருத்துவரிடம் சென்று பரிசோதினை செய்து கொள்வது நல்லது. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

வயிற்றுப் பிடிப்பு
வயிற்று பிடிப்பு ஒரு தெளிவற்ற அறிகுறியாகும். இது பல காரணங்களால் ஏற்படலாம். வயிற்று பிடிப்பு ஏற்படுவதற்கான வெளிப்படையான காரணத்தை நீங்கள் காணவில்லை என்றால், அது சாதாரணமானது அல்ல. எனவே, நீங்கள் அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தொடர்ந்து வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல்
வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற செரிமான கோளாறுகள் நீங்கள் அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது சுகாதாரமற்ற உணவை சாப்பிட்டாலோ ஏற்படும். இருப்பினும், இந்தக் கோளாறுகளில் ஏதேனும் ஒன்று தொடர்ச்சியாக இருந்தால், மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் நோயறிதல் பரிசோதனையைப் பெறுவதற்கான எச்சரிக்கை அறிகுறியாக இது இருக்கலாம்.

மலத்தில் இரத்தப்போக்கு
நீங்கள் மலச்சிக்கல் அல்லது வேறு எந்த செரிமானக் கோளாறுகளாலும் பாதிக்கப்படாவிட்டாலும், உங்கள் மலத்தில் அடர் / பிரகாசமான சிவப்பு இரத்தத்தைக் கண்டால், அது பெருங்குடல்-மலக்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, மருத்துவரிடம் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. இதை சாதாரணமாக நினைக்க வேண்டாம்.



Click it and Unblock the Notifications
