Latest Updates
-
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். .. -
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்.. -
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது! -
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 18 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மேஷ ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம்
உலகை அச்சுறுத்தும் சி ஆரிஸ் எனும் உயிரைக் கொல்லும் பூஞ்சைத் தொற்று
அமெரிக்காவைச் சேர்ந்த சுகாதார அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ஒரு புதிய வகை கொடிய பூஞ்சைத் தொற்று உலக காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கிறது எனவும் இது உலகம் முழுக்க பரவும் பட்சத்தில் மிகப்பெரிய அசம்பாவிதங்
அமெரிக்காவைச் சேர்ந்த சுகாதார அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ஒரு புதிய வகை கொடிய பூஞ்சைத் தொற்று உலக காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கிறது எனவும் இது உலகம் முழுக்க பரவும் பட்சத்தில் மிகப்பெரிய அசம்பாவிதங்களை சந்திக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சாதரணமாக வெப்ப காலங்களில் வியர்வை அதிகமாக சுரக்கும் இடங்களில் வட்ட வட்டமாக சிவந்து போய் ஒருவித அரிப்பையும், சொல்லி மாளாத வலியையும் தரும் பூஞ்சை பாதிப்பிலிருந்தே நம்மால் அவ்வளவு சீக்கிரம் வெளியே வர முடிவதில்லை அது அப்படி இருக்கையில் நோய் எதிர்ப்பு மருந்துக்கு எதிராக செயல்படும் இவ்வகை பூஞ்சைகளுக்கு எதிராக நமது உடல் போராட வேண்டுமல்லவா. அதே சமயத்தில் நமது உடல் சுத்தமாக இருந்தால் ஏன் இவ்வகை பூஞ்சையின் தாக்கம் நமக்கு இருக்கப் போகிறது. எனவே இனிமேலாவது உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சியை மேற்கொள்ளுங்கள்

உலகை அச்சுறுத்தக் காத்திருக்கும் கேண்டிட்டா ஆரிஸ்
கேண்டிட்டா ஆரிஸ் எனும் பூஞ்சைத் தொற்று உலக சுகாதாரத்தை அச்சுறுத்தும் வகையில் தற்போது வளர்ந்து வருகிறது. ஏனெனில் பொதுவாக பயன்படுத்தப்படும் பூஞ்சை நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கெல்லாம் இவ்வகை பூஞ்சைகள் குணமாவதில்லை . மேலும் நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு எதிராக செயல்பட்டு மனிதர்களை நிலை குளைய வைக்கிறது.
மேலும் இவ்வகை பூஞ்சைகளை உரிய உபகரணங்கள் இல்லாமல் ஆய்வுக்குட்படுத்தும் போது மாற்றி கணிக்க வாய்ப்புள்ளது. மேலும் இவ்வகை பூஞ்சைகளை சிறிய ஆய்வகங்களில் கண்டறிவது மிகவும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

உயிரைக் கொல்லும்
கேண்டிடா ஆரிஸ் பூஞ்சையால் ஏற்படும் தொற்று நோயானது நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு எதிராக வினையாற்றுகிறது. பாதிப்பு ஏற்பட்டவுடன் முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறாவிட்டால் உயிரைக் கொல்லுமளவிற்கு அதன் வீரியம் இருப்பதாக சுகாதார வல்லுனர்கள் வேதனை அளித்துள்ளனர். ஆனால் முறையாக மருத்துவ சிகிச்சை பெறும் போது இது ஒரு குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் தான். இவ்வகை பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருவர் உயிரிழப்பதாக நோய் கட்டுப்பாடு மற்றும் மையம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

30 நாடுகள்
அதிக வெப்பத்தில் தான் பூஞ்சைகளின் வளர்ச்சி அபரீகரமானதாக இருக்கும். எனவே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட புவி வெப்பமடைவதால் தான் பூஞ்சைகள் பல்கிப் பெருகி மனித உயிர்களுக்கு சேதாரத்தை ஏற்படுத்துகிறது என எம். பையோ என்னும் ஆய்வுப் பத்திரிக்கையில் ஆய்வுக் கட்டுரை வெளிவந்திருக்கிறது.
பூஞ்சைகள் ஆரம்பத்தில் வெப்பத்தை உட்கிரகித்துக் கொண்டு வெகு வேகமாக வளர்ந்து அடுத்து வரும் நூற்றாண்டுகளில் மிகப்பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என மருத்துவர் ஆர்ட்டுரோ கேசதேவால் எம்.டி தெரிவித்துள்ளார்.

அதிக வெப்பத்தை தாங்கும் பூஞ்சைகள்
புவி வெப்பமயமாதலால் பூஞ்சைகள் அதிக வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு வளரும் புதிய பரிணாமத்தையும் பெரும் எனவும் சுகாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜப்பான் முதல் அமெரிக்கா
சி ஆரிஸ் பூஞ்சைகள் முதன்முதலில் 2009ம் ஆண்டு ஜப்பானில் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டது. முதன்முதலில் ஜப்பானில் காதில் ஏறப்பட்ட தொற்று நோய் அமெரிக்கா நியூ ஜெர்ஸி மருத்துவமனையில் அதிக நோயாளிகளைப் பாதித்து பின்னர் அமெரிக்காவில் மட்டும் 2013ம் ஆண்டே 700 பேரை இந்நோய்த் தாக்கி இருக்கிறது.

அறிகுறிகள்
இரத்தத்தில் பரவும் நோய்த்தொற்றுகளாக தான் இவ்வகை பூஞ்சைகள் இருக்கின்றன. இது பொதுவாக மருத்துவமனைகளில் அதிவேகமாக பரவுகிறது. ஆரம்பத்தில் இந்நோய் பாதிக்கப்பட்டவர்களும் குளிருடன் கூடிய காய்ச்சல் இருக்கும். இது ஆரம்பகால அறிகுறி என்றாலும் ஆய்வகப் பரிசோதனையில் மட்டுமே சி ஆரிஸ்- ஐ உறுதி செய்ய முடியும்.

நோயாளிகள் வயதானவர்களே உஷார்
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இவ்வகை நோய்த்தொற்று மிகப்பெரிய சவாலை அளித்திருக்கிறது. மேலும் இது போன்ற குறைபாடு அதிகமாக உள்ளவர்கள் மருத்துவமனைகளில் தான் அதிகமாக இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு தான் இவ்வகை பூஞ்சை சிம்ம சொப்பனமாக இருக்கும்.

நியூயார்க்கில் தான் அதிகம்
நியூயார்க் நகரத்தில் தான் சி ஆரிஸ் தொற்றுகள் அதிகமாக இருக்கின்றன. மேலும் இவ்வகை தொற்று இங்குமட்டுமில்லாமல் உலகெங்கும் பரவிக் காணப்படுவதாகவும் மைக்கேல் பிலிப்ஸ் எம்.டி ( என்.ஒய்.யு லாங்கோன் ஹெல்த் நிறுவனத்தின் பேராசிரியர் ) கருத்து தெரிவித்துள்ளார்.

இது சூப்பர் பக்காக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு
இன்று பொதுவாகப் பயன்படுத்தும் ஒட்டுண்ணி எதிர்ப்புகளுக்கு எதிராக செயல்படும் பாக்டீரியாக்களை சூப்பர் பக் என்று அழைப்பார்கள். ஆனால் எல்லோரும் சி ஆரிஸையும் சூப்பர் பக்காக அறிவித்த போதிலும், பிலிப்ஸ் எனும் ஆய்வாளர் முற்றிலுமாக மறுப்புத் தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான விளக்கங்களையும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வகை ஒட்டுண்ணிகளை அழிப்பதற்கு மருந்துகளை கண்டுபிடிக்க முடியும் என்பதால் இதை அவர் மறுத்துள்ளார்.

பயப்படத் தேவை இல்லை
சி ஆரிஸ் ஒரு கொடூரமான தொற்று என பொதுமக்களிடம் போய்ச் சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. அதிர்ஷ்டவசமாக கனடியா ஆரிஸ் உலகம் முழுகக் பரவவில்லை. மேலும் ஆரோக்கியமானவர்கள் ஒரு போதும் நோய்த் தொற்றுகளுக்கு ஆளாவதேயில்லை. என ஹார்வர்ட் மருத்துவ பள்ளியின் ராபர்ட் எச். ஷெமெர்லிங் தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்த நோய் உங்களை பாதிக்கும் என முதலில் பயப்படாதீர்கள் அதற்கு பதிலாக தொற்று நோய்களுக்கு எதிராக உங்களை சரி செய்துக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். தினந்தோறும் உங்கள் கைகளை நன்றாக கழுவுவதிலிருந்து அது ஆரம்பமாகிறது. மேலும் இது போன்ற நோய்த் தொற்று உடையவர்களிடம் இருந்து விலகியே இருங்கள்



Click it and Unblock the Notifications











