Latest Updates
-
வெயிலுக்கு ஏசி தேவையில்லை! இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடு ஜில்லுனு இருக்கும்! -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..! -
வீட்டில் இந்த செடிகளை வையுங்க… கோடை வெயில் பறந்து போகும், பணமும் கொட்டும்! -
வெயிலுக்கு இப்படி ஒருடைம் தக்காளி ரசம் செய்யுங்க.. தட்டு சோறை நொடியில் காலி பண்ணுவாங்க..! -
May 2026 Calendar: மே மாதத்தில் வரப்போகும் முக்கியமான பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 01 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் மே மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பம் இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே வராதாம் -
வெயில் கொடுமையா? கோடை கால திருமணத்தை ஜில்லுனு மாத்த இந்த 5 ஐடியாக்கள் போதும்! -
Labour Day Wishes:தொழிலாளர் தினத்தில் உங்களுக்கு தெரிஞ்ச உழைப்பாளிகளுக்கு இந்த வாழ்த்தை சொல்ல மறந்துராதீங்க
நற்செய்தி.. கொரோனாவை குணப்படுத்தும் க்ளெவிரா மாத்திரை... அதன் விலை எவ்வளவு? எங்கு கிடைக்கும்?
தற்போது மூலிகைகளைக் கொண்டு தயாரித்த க்ளெவிரா என்ற ஆயுர்வேத மாத்திரை மற்றும் சிரப் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று சென்னையைச் சேர்ந்த மருந்து நிறுவனமான அபெக்ஸ் லேபரட்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.
கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாம் அலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறையுடன், ஆக்சிஜன் பற்றாக்குறையும் சேர்ந்து, கொரோனா நோயாளிகள் பலர் இறந்தும் வருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த என்ன தான் பல்வேறு கட்டுப்பாடுகள் அரசால் விதிக்கப்பட்டிருந்தாலும், அதை சரியாகவும், கடுமையாகவும் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நம்மால் இந்த தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

அதோடு கொரோனா தொற்றால் மக்கள் இறப்பதற்கு ஏற்கனவே இருக்கும் ஆரோக்கிய பிரச்சனைகள் மட்டுமின்றி, தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தி உடலில் குறைவாக இருப்பதும் ஓர் முக்கிய காரணம். எனவே இந்த பெருந்தொற்று காலத்தில் ஒருவர் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் கொரோனாவைத் தடுக்க முடியும்.

கசாயங்கள்
உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர் ஆகியவை உள்ளன. அத்துடன் தற்போது மூலிகைகளைக் கொண்டு தயாரித்த க்ளெவிரா என்ற ஆயுர்வேத மாத்திரை மற்றும் சிரப் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று சென்னையைச் சேர்ந்த மருந்து நிறுவனமான அபெக்ஸ் லேபரட்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது.

க்ளெவிரா மருந்து எதைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது?
ஆயுர்வேத மருந்தான க்ளெவிரா நிலவேம்பு, பப்பாளி இலை, கோரைக்கிழங்கு, காட்டுவேம்பு, இஞ்சி, மிளகு, காட்டுப் பேய் புடல், சீந்தில் கொடி, பற்படாகம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. இந்த மருந்தை லேசான மற்றும் மிதமான கொரோனா நோய்த்தொற்று உள்ளவர்கள் எடுத்து வருவதன் மூலம் முற்றிலும் குணமடையலாம் என்று ஆய்வுகளில் தெரிந்து வந்துள்ளதாக இந்த அபெக்ஸ் மருந்து நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆய்வு
க்ளெவிரா மருந்து முதல் கட்டமாக ஆய்வகம் மற்றும் எலிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் சிறப்பான முடிவு வந்ததால், இந்த மருந்தை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 100 கொரோனா நோயாளிகளுக்கு 14 நாட்களுக்கு கொடுத்து சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் க்ளெவிரா மருந்து கொடுக்கப்பட்டு வந்த கொரோனா நோயாளிகளுக்கு 5 நாட்களில் 86 சதவீத தொற்றும், 10 நாட்களில் 100 சதவீத தொற்றும் குணமாகியிருப்பது தெரிய வந்தது. இதனால் இந்த க்ளெவிரா மருந்து மற்றும் இதுக்குறித்து மேற்கொண்ட ஆய்வின் முடிவை ஆயுஷ் அமைச்சகத்திற்கு அந்நிறுவத்தினர் அனுப்பினர். தற்போது இந்த க்ளெவிரா மருந்துக்கு ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மருந்து எவ்வாறு செயல்படுகிறது?
அப்பெக்ஸ் ஆய்வகங்களின் சர்வதேச வணிக மேலாளர் சி ஆர்தர் பால் இந்த மருந்தின் செயல்பாடு குறித்து கூறுகையில், "இந்த ஆன்டி-வைரல் மருந்து உடலில் உள்ள வைரஸ்களின் அளவைக் குறைப்பதைத் தவிர்த்து, இரத்த வெள்ளையணுக்கள், பிளேட்லெட் மற்றும் லிம்போசைட்டுகளின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கிறது. எனவே இது அனைத்து அறிகுறிகளில் இருந்து விரைவில் மீளச் செய்கிறது." என்று கூறினார்.

எப்போது சாப்பிட வேண்டும்?
க்ளெவிரா மாத்திரையை ஒருவர் காலை மற்றும் இரவு உணவிற்கு பின் சாப்பிட வேண்டும். அதேப்போல், க்ளெவிரா சிரப்பை காலை, மாலை என இருவேளையும் 10 மிலி பருக வேண்டும். இந்த மாத்திரை மற்றும் சிரப்பால் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் சாப்பிடலாம்?
க்ளெவிரா மாத்திரை மற்றும் சிரப்பை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மட்டுமின்றி, கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க நினைப்போரும் சாப்பிடலாம். அவர்களும் இந்த மருந்தை தினமும் காலை மற்றும் இரவு என இரண்டு வேளை உணவுக்கு பின் எடுக்க வேண்டும். மேலும் இந்த மருந்து 2 வயது முதல் அனைத்து வயதினருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.

மாத்திரையின் விலை என்ன?
அபெக்ஸ் மருந்து நிறுவனம் தயாரித்துள்ள க்ளெவிரா மாத்திரை ஒன்றின் விலை ரூ.11 தான். இருப்பினும், இந்த மருந்தை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா தொற்றினால் நிலைமை மோசமாவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் க்ளெவிரா மருந்தின் கொள்முதலை அதிகரித்து, கொரோனா நோயாளிகளுக்கு வழங்க வேண்டும்.



Click it and Unblock the Notifications