Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
தோள்பட்டை அல்லது கழுத்துப்பட்டை வலிக்கான 4 முக்கிய காரணங்கள்!
ஆங்கில எழுத்தான S வடிவில், பின் கழுத்தின் கீழ் பகுதியில் இருக்கும் தனித்துவமான எலும்பே தோள்பட்டை அல்லது கழுத்துப்பட்டை எலும்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த தோள்பட்டை எலும்பு தான், மார்பு எலும்புகளையும் தோள்களின் எலும்புகளையும் இணைக்கிறது.
ஆங்கில எழுத்தான S வடிவில், பின் கழுத்தின் கீழ் பகுதியில் இருக்கும் தனித்துவமான எலும்பே தோள்பட்டை அல்லது கழுத்துப்பட்டை எலும்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த தோள்பட்டை எலும்பு தான், நமது மார்பு எலும்புகளையும் தோள்களின் எலும்புகளையும் இணைக்கிறது.

தோள்பட்டை எலும்பு ஆங்கிலத்தில் காலர் போன் என்று அழைக்கப்படுகிறது. அதற்குக் காரணம் நாம் சட்டை அணியும் போது, சட்டையின் காலர் இந்த தோள்பட்டை எலும்பைச் சுற்றி இருக்கும். அதனால் இந்த பெயரில் அழைக்கப்படுகிறது.

தோள்பட்டை எலும்பு வலி
தோள்பட்டை எலும்புகளில் இரண்டு வகை உண்டு. பொதுவாக தோள்பட்டை எலும்பில் சிறிது வலியோ அல்லது அசௌகரியமோ ஏற்பட்டால் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் தோள்பட்டை எலும்பில் பெரிய பிரச்சினை ஏற்பட்டால் நம்மால் பேச முடியாது, தூங்க முடியாது, கழுத்தைத் திருப்ப முடியாது, மேலும் படுக்க முடியாது.
சில நேரங்களில் இந்த தோள்பட்டை எலும்புகளில் வலி ஏற்பட்டால் வீட்டில் செய்யும் வைத்தியத்தின் மூலம் குணப்படுத்த முடியும். ஆனால் பெரும்பாலும் தோள்பட்டை எலும்புகளில் வலி ஏற்பட்டால் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தோள்பட்டை வலிக்கு பின்வரும் காரணிகள் முக்கிய காரணங்களாக இருக்கலாம். அவற்றைக் கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை விரைவில் தொடங்க வேண்டும்.

கீல்வாதம் தோள்பட்டை வலி (Osteoarthritis Clavicle Pain)
எலும்புகள் இணையும் இடங்களில் எல்லாம், அவை உராய்வினால் பாதிப்படைந்துவிடாமல் இருக்க மற்றும் பாதுகாப்பாக இருக்க திசுக்கள் உள்ளன. ஆனால் கீல்வாதம் எலும்பு மூட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்தி, அதிகமான வலியை உண்டாக்குகிறது. தோல்பட்டை வலியை மட்டுமல்ல, உடலின் எந்த ஒரு பகுதியிலும் நாம் எலும்புகளின் மூட்டு வலியை உணரலாம். ஆனால் தோல்பட்டை வலி நீண்ட நாட்களாகக் குணமடையாமல் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். அவர்களை மருத்துவர்கள் முறையான மருந்துகளை எடுத்துக் கொள்ள பரிந்துரைப்பர் அல்லது கீல்வாதத்திற்கான அறிகுறிகளைப் பரிசோதிப்பர்.

நீண்ட நேரம் உடலை ஒரே நிலையில் வைத்திருத்தல் மற்றும் தோள்பட்டை வலி
நெடு நேரமாக ஒரே நிலையில் படுத்துத் தூங்கிவிட்டு, காலையில் கண் விழிக்கும் போது தோள்பட்டை வலியை நாம் உணரலாம். மேலும் நீண்ட நேரம் கால் மேல் கால் போட்டு பயணம் செய்யும் போது கூட நாம் இந்த தோள்பட்டை வலியை உணரலாம். ஆனால் கால் கைகளை சற்று நீட்டி மடக்கினாலோ அல்லது வலி நிவாரண தைலத்தைத் தடவினாலோ, பெரும்பாலும் இந்த வலி ஒருசில மணி நேரங்களில் தானாகவே குணமடைந்துவிடும். எனவே நீண்ட நேரம் ஒரே நிலையில் உடலை வைத்திருப்பதால் ஏற்படும் தோள்பட்டை வலியைக் கண்டு பயங்கொள்ளத் தேவையில்லை. ஆனால் வலி நிவாரண மருந்துகள் எடுத்த பின்பும் வலி குணமாகவில்லை என்றால் மருத்துவரை சந்தித்து ஆலோசனைகள் பெற வேண்டும்.

வெளி நெஞ்சுக்கூட்டு நோய்க்குறி (Thoracic Outlet Syndrome) மற்றும் தோள்பட்டை வலி
பல நேரங்களில் தோள்பட்டை வலி நமது தோள்பட்டையைச் சுற்றியுள்ள இரத்தக் குழாய்களில் தேவையில்லாத அழுத்தத்தைக் கொடுக்கிறது. அதனால் நாம் அதிகமான வலியை உணர்கிறோம். இதைத்தான் வெளி நெஞ்சுக்கூட்டு நோய்க்குறி (Thoracic Outlet Syndrome) என்கிறோம். உடல் பருமன், கடுமையான உடற்பயிற்சிகள், திடீரென்று அதிகமான பளுவைத் தூக்குதல் மற்றும் காயங்கள் போன்றவை இந்த நோய்க்குறி ஏற்படக் காரணமாக இருக்கின்றன. இந்த நேரங்களில் கண்டிப்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். அவர் எக்ஸ்ரே மூலம் பரிசோதித்து நமக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்குவார்.

மூட்டுக் காயம் மற்றும் தோள்பட்டை வலி
எல்லா மூட்டு வலியும் கீல்வாதமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலான நேரங்களில் ஒரு சிறிய காயம்கூட எலும்பு மூட்டுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி அதன் மூலம் வலியை உண்டாக்கலாம். மேலும் தோள்பட்டை எலும்பைச் சுற்றி காயம் இருந்தாலும் அல்லது தோள்களில் அழுத்தம் ஏற்பட்டாலும் வலி ஏற்படலாம். வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்வது, வலி நிவாரண தைலத்தைப் பூசுவது மற்றும் ஒத்தடம் கொடுப்பது போன்றவற்றின் மூலம் இந்த வலியை சரி செய்யலாம். ஆனால் வலி குறையவில்லை என்றால் கண்டிப்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
