Latest Updates
-
சப்பாத்திக்கு ஒருடைம் முட்டைக்கோஸ் பச்சை குருமா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்ஸ்டாகிராம் பயனர்களே உஷார்! உங்கள் தனிப்பட்ட சாட்கள் இனி பாதுகாப்பில்லை? இந்த மாற்றத்தை உடனே கவனிங்க! -
கோடை வெயிலால் உங்க முகம் டல்லடிக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
வெளிநாட்டில் விவாகரத்தா? குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் - செலினா ஜெயிட்லியின் உருக்கமான பதிவு! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்.. -
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
பிபி, சுகர் வரக்கூடாதா? அப்ப காலையில இந்த இலைய வாயில போட்டு மெல்லுங்க...
மருத்துவ குணங்கள் நிறைந்த இலைகளை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் அவஸ்தைப்படும் உடல்நல பிரச்சனைகள் என்றால் அது உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் தான். தற்போது இந்த இரண்டு பிரச்சனைகளும் இல்லாதவர்களைக் காண முடியாது. அந்த அளவில் தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் நமக்கு இவ்விரண்டையும் பரிசாக வழங்கியுள்ளது.

இந்த இரண்டு பிரச்சனைகளையும் கொண்டவர்கள், அவற்றை கட்டுப்பாட்டுடன் நிர்வகிக்க வேண்டியது மிகவும் முக்கியம். இல்லாவிட்டால், அது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும். பெரும்பாலும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு தினந்தோறும் மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுக்க வேண்டும். இதனால் இவற்றைக் கட்டுப்படுத்தி, நீண்ட நாட்கள் வாழ முடியும். அதே சமயம் இந்த பிரச்சனைகளுக்கு சிறப்பான தீர்வை அளிக்கும் ஒருசில இயற்கை வைத்தியங்களும் உள்ளன.
அதில் மிகவும் எளிமையான ஒரு வழி தான், மருத்துவ குணங்கள் நிறைந்த சில பச்சை இலைகளை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது. இந்த இலைகளை ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இப்போது அந்த மூன்று இலைகள் எவையென்று காண்போம் வாருங்கள்.

துளசி இலைகள்
மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படும் துளசி, ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது. இதனால் இது உடலை பல்வேறு நோய்களில் இது பாதுகாக்கக்கூடியது. பல்வேறு ஆய்வுகளில் துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது டைப்-2 சர்க்கரை நோயாளிகளில் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
அதோடு துளசி இலைகள் லிப்பிட் உள்ளடக்கத்தைக் குறைப்பதன் மூலமும், இஸ்கிமியா, பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும் இதய நோயைத் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.

நினைவில் கொள்ள வேண்டியவை:
துளசியில் மெர்குரி மற்றும் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது. இந்த இலைகளை வாயில் போட்டு மெல்லும் போது, இந்த இரண்டும் வெளியிடப்படுகிறது. இந்த கனிமச்சத்துக்கள் பற்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை மற்றும் நிறமாற்றத்தையும் உண்டாக்கக்கூடியவை. மேலும் துளசி இலைகளில் இயற்கையாகவே அசிட்டிக் பண்புகளைக் கொண்டது. எனவே அளவுக்கு அதிகமாக துளசி இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், அது பற்களின் எனாமலில் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே துளசி இலைகளை சாப்பிட நினைத்தால், நீருடன் சேர்த்து அரைத்து சாப்பிடுங்கள்.

கறிவேப்பிலை
அனைத்து சமையலிலும் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான பொருள் தான் கறிவேப்பிலை. இந்த கறிவேப்பிலை உணவிற்கு நல்ல மணத்தைத் தருவதோடு மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் பல்வேறு மருத்துவ குணங்களையும் தன்னுள் கொண்டது.
பொதுவாக நாம் உண்ணும் உணவில் கறிவேப்பிலை இருந்தால், அதை தூக்கி எறிந்துவிடுவோம். அப்படி குப்பையாக கருத்தும் கறிவேப்பிலை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்பது தெரியுமா? ஒருவர் தினமும் காலையில் 4-5 கறிவேப்பிலையை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், அது இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை தூண்ட உதவும். இந்த செல்கள் தான் இரத்த சர்க்கரை அளவை சீரான அளவில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

வேப்பிலை
வேப்பிலை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது என்பதை நாம் அனைவரும் நன்று அறிவோம். ஆனால் தினமும் வேப்பிலையை சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவு குறையும் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்து, தினமும் வேப்பிலையை சாப்பிட்டு வந்தால், அவ்வப்போது உங்கள் இரத்த சர்க்கரை அளவை சோதித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அளவுக்கு அதிகமாக வேப்பிலை சாப்பிட்டால், அது சில சமயங்களில் இரத்த சர்க்கரை அளவை சட்டென்று மிகக்குறைவாக குறைத்துவிடும். இந்த நேரத்தில், நீங்கள் எடுத்து வரும் சர்க்கரை நோய்க்கான மருந்து மாத்திரையை குறைக்க வேண்டியது அவசியம்.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்
வேப்பிலையில் உள்ள ஆன்டிஹிஸ்டமைன் விளைவுகள், இரத்த நாளங்களை நீர்த்துப் போகச் செய்யும். இதனால் இந்த இலைகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். மேலும் ஒரு மாதம் தொடர்ந்து வேப்பிலையை சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பின் அளவும் குறையும்.

குறிப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ள இலைகள் சர்க்கரை நோய், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக கூறப்பட்டாலும், நீங்கள் எந்த ஒரு மாற்றத்தை உங்கள் உணவு முறையில் செய்வதாக இருந்தாலும், கட்டாயம் மருத்துவரின் ஆலோசனை தேவை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications