Latest Updates
-
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
ரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்!
ஏற்கனவே கொரோனாவால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவதோடு, இறந்தும் வருகிறார்கள். இந்நிலையில் கடந்த வாரம் உடல்நல குறைவால் திரை பிரபலங்கள் அடுத்தடுத்து மரணித்தது, பலருக்கும் பெரும் மன கஷ்டத்தை ஏற்படுத்தியுள்
சமீபத்தில் திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற நடிகர்கள் அடுத்தடுத்து உடல்நல குறைவால் காலமானார்கள். இது திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. ஏற்கனவே கொரோனாவால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவதோடு, இறந்தும் வருகிறார்கள். இந்நிலையில் கடந்த வாரம் உடல்நல குறைவால் திரை பிரபலங்கள் அடுத்தடுத்து மரணித்தது, பலருக்கும் பெரும் மன கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுப்போன்று உடல்நல குறைவால் ஏராளமான திரைப் பிரபலங்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இக்கட்டுரையில் உடல்நல பிரச்சனையால் உலகை விட்டு பிரிந்த, நம் மனதில் இடம் பிடித்த சில பிரபலங்களில் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

ரிஷி கபூர்
புகழ்பெற்ற பழம்பெரும் நடிகரான ரிஷி கபூர், 67 வயதில் காலமானார். இந்த நடிகர் 2018 முதலாக லுகேமியாவால் அவஸ்தைப்பட்டு வந்தார். சமீபத்தில் மூச்சு திணறல் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 30, 2020 அன்று காலையில் காலமானார்.

இர்ஃபான் கான்
பிரபலமான பாலிவுட் நடிகரான இர்ஃபான் கான், தனது 53 வயதில் காலமானார். இந்த நடிகர் மிகவும் அரிய வகை நியூரோஎண்டோகிரைன் புற்றுநோயால் போராடி வந்தார். இந்த வகை புற்றுநோய் இவருக்கு இருப்பது 2018-இல் தான் தெரிய வந்தது. ஏப்ரல் 29 அன்று பெருங்குடல் அழற்சியால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நிலைமை மோசமாகி மரணமடைந்தார்.

வித்யா சின்ஹா
பழம்பெரும் பாலிவுட் நடிகையான வித்யா சின்ஹா, தனது 71 வயதில் ஆகஸ்ட் 15, 2019 அன்று காலமானார். இவர் ஏற்கனவே நுரையீரல் மற்றும் இதய கோளாறால் அவஸ்தைப்பட்டு வந்தார். மூச்சுத்திணறல் பிரச்சனையால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நிலைமை மோசமாக இருப்பதால் வெண்டேட்டருக்கு மாற்றப்பட்டார். இறுதியாக நுரையீரல் நோய் மோசமானதால், தனது போராட்டத்தை நிறுத்தி காலமானார்.

கிரிஷ் கர்னாட்
பல்திறமைக் கொண்ட மனிதரான இவர் பாலிட்டில் மட்டுமின்றி, தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமின்றி, திரைப்பட தயாரிப்பாளரும் கூட. இவர் ஜூன் 10, 2019 அன்று மரணமடைந்தார். பத்ம பூசன் விருது பெற்ற கர்னாட் தனது 81 வயதில் காலமானார். அவரது மரணத்திற்கு காரணம் பல உறுப்பு செயலிழப்பு நோய்க்குறி என்று கூறப்படுகிறது.

காதர் கான்
புகழ்பெற்ற பாலிவுட் நடிகரான காதர் கான் நீண்ட கால உடல்நல குறைவால் போராடி ஜனவரி 1, 2019 அன்று இயற்கை எய்தினார். அவரது உடல்நல அறிக்கைகளின் படி, அவர் மிகவும் அரிதான மூளை நோயான வாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயால் 81 வயதில் தனது உயிரை விட்டார்.

ரீட்டா பதுரி
பாலிவுட் திரைப்படங்களில் பல வேடங்களில் நடித்தது மட்டுமல்லாமல், டிவி சீரியல்களின் முக்கிய முகமாகவும் இருந்த ரீட்டா பதுரி, ஜூலை 17, 2018 அன்று தனது வாழ்க்கையை இழந்தார். நீண்ட காலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட அவர் தனது 62 வயதில் மரணமடைந்தார்.

வினோத் கன்னா
பழங்கால நடிகரான வினோத் கன்னா ஏப்ரல் 27, 2017 அன்று உயிரை இழந்தார். சிறுநீர்ப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், அதன் முற்றிய நிலையில் இருந்தார். எச்.என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தனது 70 வயதில் உயிரை விட்டார்.

ஓம் பூரி
பாலிவுட் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த ஓம் பூரி, ஜனவரி 17, 2017 அன்று காலமானார். 66 வயதான இவர் மாரடைப்பால் தனது இல்லத்தில் இருந்த போது இறந்தார். இவர் இறப்பதற்கு ஒரு நாளைக்கு முன்பு வரை ஆரோக்கியமாக இருந்ததால், அவரது மரணம் பலருக்கும் ஒரு அதிர்ச்சியாக இருந்தது.



Click it and Unblock the Notifications











