Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
நெருப்பில் வைத்தது போன்று கால்கள் பயங்கரமாக எரிகிறதா? அது ஏன் தெரியுமா?
சாதாரண சோர்வு மற்றும் அதிக உடலுழைப்பு போன்றவை பாதங்களில் எரிச்சல் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களாகும். ஆனால் வேறுசில ஆரோக்கிய பிரச்சனைகள் இருந்தாலும் இம்மாதிரியான பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
சிலருக்கு திடீரென்று பாதங்களில் கடுமையான எரிச்சல் ஏற்படும். அதுவும் சிவந்து, வீக்கத்துடன் சற்று சூடாக பாதங்கள் இருக்கும். இப்படி எந்த காரணத்தினால் ஏற்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? உண்மையில், அது ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறி.

சாதாரண சோர்வு மற்றும் அதிக உடலுழைப்பு போன்றவை பாதங்களில் எரிச்சல் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களாகும். ஆனால் வேறுசில ஆரோக்கிய பிரச்சனைகள் இருந்தாலும் இம்மாதிரியான பிரச்சனையை சந்திக்க நேரிடும். அந்த பிரச்சனைகள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வைட்டமின் பி12 குறைபாடு
ஊட்டச்சத்துக் குறைபாடுகளை எப்போதும் சாதாரணமாக விட்டுவிடக்கூடாது. இல்லாவிட்டால், அது தீவிரமான பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும். வைட்டமின் பி12 என்னும் ஊட்டச்சத்து, உடலின் பல்வேறு செயல்பாடுகளில் முக்கிய பங்கை வகிக்கிறது. குறிப்பாக நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு அவசியமான சத்து. உங்கள் பாதங்களில் எரிச்சல் ஏற்பட்டால், அது வைட்டமின் பி12 குறைபாட்டிற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

புற நரம்பியல் கோளாறு
புற நரம்பியல் கோளாறு என்பது நரம்புகளைப் பாதிக்கும் ஒரு நிலை. இந்த நிலையில், மூளையில் இருந்து கைகால்களுக்கு சிக்னல்/சமிக்ஞைகளை அனுப்பும் புற நரம்புகள் சேதமடைகின்றன. நரம்புகளானது தொடர்ந்து காயங்கள் ஏதுமின்றி வலிக்கான சிக்னலை அனுப்புவதோடு, பாதங்களில் எரிச்சலையும் உண்டாக்கும். எனவே உங்கள் கால்கள் சூடாகவோ அல்லது எரிச்சலுடனோ இருந்தால், சாதாரணமாக எண்ணாதீர்கள்.

ஹைப்போ தைராய்டிசம்
தைராய்டு ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மையால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். அதில் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக உடலில் நீர்த்தேக்கம் ஏற்படும். இப்படி உடலில், அதுவும் நரம்புகளில் நீர் அதிகம் தேங்கும் போது, அழுத்தம் அதிகம் கொடுக்கப்பட்டு, அதனால் பாதங்களில் எரிச்சல் உணர்வு ஏற்படக்கூடும்.

இரத்த நாள அழற்சி
இரத்த நாளங்களில் அழற்சி ஏற்பட்டால், அதன் விளைவாக இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும். எப்போது கால்களில் போதுமான இரத்த ஓட்டம் இல்லையோ, அப்போது பாதங்களில் எரிச்சல் ஏற்படும். எனவே கவனமாக இருங்கள்.

ஹைப்பர் டென்சன்/ உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்த பிரச்சனையால், இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்பட்டு, அதன் விளைவாக பாதங்களில் எரிச்சல் உண்டாகும். பாதங்களில் எரிச்சல் அதிகமாக ஏற்பட்டால், அதன் விளைவாக பாதங்களில் நாடித்துடிப்பும் குறைந்துவிடும். ஆகவே உங்களுக்கு பல நாட்களாகவோ/மாதங்களாகவோ கால்களில் எரிச்சல் ஏற்பட்டால், உடனே உங்கள் இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துப் பாருங்கள்.

நச்சு தேக்கம்
ஒருவரது உடலில் வைட்டமின்களின் அளவு அதிகமானால், குறிப்பாக வைட்டமின் பி6 அதிகமானாலோ அல்லது அடர்த்தியான மெட்டல் நச்சு புற நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களை சேதப்படுத்தும். ஆகவே உங்கள் பாதங்களில் எரிச்சல் அல்லது வெப்ப உணர்விற்கு மற்றொரு காரணமாக இது இருக்கலாம்.

தொற்று நோய்கள்
தொற்று நோய்களின் தாக்கத்தின் ஒரு அறிகுறி தான் பாதங்களில் எரிச்சல் ஏற்படுவது. எய்ட்ஸ், லைம் நோய் மற்றும் குய்லின்-பார் நோய்க்குறி போன்ற சில தொற்று நோய்கள் பாதங்களில் கடுமையான எரிச்சலை அல்லது பாத பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

எப்போது மருத்துவரைக் காண வேண்டும்?
ஏதேனும் நச்சுப் பொருள் வெளியீட்டினால் பாதங்களில் எரிச்சல் உணர்வை சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள். மேலும் பாதங்களில் ஏற்படும் எரிச்சலை சரிசெய்ய பல முயற்சிகளை மேற்கொண்டும், எவ்வித பலனும் கிடைக்காமல் தீவிரமானால், வலி எடுத்தால் அல்லது பாதங்களில் உணர்வு குறைவது போன்று தோன்றினால் உடனே மருத்துவரிடம் செய்ய வேண்டியது அவசியம்.



Click it and Unblock the Notifications
