Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
இந்த மாதிரி உடலுறவு கொள்பவர்களுக்கு தொண்டை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருக்குதாம்...!
பாதுகாப்பான வாய்வழி உடலுறவை முயற்சி செய்வது மற்றும் இரு கூட்டாளர்களும் எந்தவொரு எஸ்.டி.டி அல்லது எஸ்.டி.ஐ எனப்படும் பாலியல் தொற்றுநோய்களுக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.
வாழ்க்கையில் ஒரு சில விஷயங்கள் மட்டுமே உங்களுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் கொடுக்கும். இவற்றில் நல்ல உணவுடன், நல்ல செக்ஸ் நிச்சயமாக இருக்கும். இது ஒரு நபரை ஆரம்ப நிலை இன்பத்தை அடையச் செய்யும். வரலாறு முழுவதும் நிறைய தத்துவஞானிகள் மற்றும் கவிஞர்கள் இன்பமான பாலியல் உடலுறவை சுவையான உணவுடன் ஒப்பிட்டுள்ளனர். ஒரு உறவில் பாலியல் வாழ்க்கை சரியாக அமைந்துவிட்டால், அது அவர்களின் வாழ்க்கையில் பெரும்பாலான பிரச்சனைகளை நீக்கிவிடும்.

ஏனெனில், பாலியல் தேவைகள் மற்றும் பசி இரண்டும் ஒவ்வொரு தனிமனிதனுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் உள்ளது. இந்த தேவைகளைப் பூர்த்தி செய்யும் முதன்மையான உள்ளுணர்வு, அவை முற்றிலும் மாறுபட்ட அளவிலான திருப்தியை அடைய உதவும். இப்போது, மிகக் குறைந்த சுவை மற்றும் மசாலா இல்லாத ஒரு உணவை நீங்கள் உட்கொள்ளும்போது கற்பனை செய்து பாருங்கள், அது விரக்தியும் சலிப்பாகவும் இருக்கும், இல்லையா? அதுபோன்றுதான் உடலுறவும். உடலுறவில் நீங்கள் புதிய பாலியல் நிலைகளை முயற்சி செய்யும்போது, அவற்றால் உங்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதா? என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

வழக்கமான உடலுறவு
உடலுறவு ஆக்கபூர்வமானதாகவோ அல்லது வேறுபட்டதாகவோ இல்லாதபோது, அது விரைவாக சலிப்பானதாகிவிடும் மற்றும் சம்பந்தப்பட்ட கூட்டாளர்கள் ஆர்வத்தை இழக்க நேரிடும். எனவே, டைனிங் டேபிளில் மட்டுமல்ல, உங்கள் படுக்கையறைகளிலும் உடலுறவில் மசாலாவை வைத்திருப்பது மிகவும் அவசியம். உடலுறவு சலிப்படையும்போது, அது உங்கள் கூட்டாளரை அடிக்கடி உடலுறவில் இருந்து விலகிவைக்கும். ஒரு ஜோடி வழக்கமான உடலுறவில் ஈடுபடும்போது, அது மிகுந்த விரக்திக்கு வழிவகுக்கும்.

ஆய்வு கூறுவது
உண்மையில், பல ஆய்வுகள் மற்றும் புள்ளிவிவரங்களின்படி, உறவில் தம்பதியினரிடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு இன்பமான பாலியல் உடலுறவு இல்லாதது ஒரு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓரல் செக்ஸ்
உடலுறவின் போது விஷயங்களை சுவாரஸ்யமாக வைத்திருக்க, தம்பதிகள் பெரும்பாலும் வெவ்வேறு பாலியல் நிலைகளை முயற்சி செய்யவேண்டும். அந்தவகையில், தம்பதிகள் வாய்வழி உடலுறவில் ஈடுபடுவார்கள். வாய்வழி செக்ஸ் என்பது தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் பிறப்புறுப்புகளை வாய் வழியாக தூண்டுவது. வாய்வழி உடலுறவு மிகவும் இன்பமான வடிவங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. ஆதலால், பெரும்பாலான மக்கள் இதில் ஈடுபடுகிறார்கள்.

பாலியல் தொற்று நோய்
வழக்கமாக, வாய்வழி செக்ஸ் செய்யும் போது, ஆணுறைகள் போன்ற பாதுகாப்புகள் இதில் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே, இதன் மூலம் சில பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள் பரவுவது எளிதாகிவிடும். வாய்வழி செக்ஸ் உண்மையில் தொண்டை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.

புற்றுநோய்
மிகக் கொடிய நோய்களில் ஒன்று புற்றுநோய். உலகம் முழுவதும் இது மிக உயர்ந்த இறப்பு விகிதங்களைக் கொண்டுள்ளது. புற்றுநோய் என்பது வயது மற்றும் பாலினத்தைப் பொருட்படுத்தாமல் எவரையும் பாதிக்கும் ஒரு நோயாகும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒப்பீட்டளவில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றினாலும், சில மாதங்களில் அவர்களின் உயிரைப் பறிக்கக்கூடும்.

தொண்டை புற்றுநோய்
மார்பக புற்றுநோய், தொண்டை புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், மூளைக் கட்டி, நுரையீரல் புற்றுநோய், இரத்த புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய்கள் உள்ளன. தொண்டை புற்றுநோய் தொண்டையின் திசுக்களை பாதிக்கிறது. இதனால் பிராந்தியத்தில் கட்டிகள் உருவாகின்றன, பேசுவது, விழுங்குவது மற்றும் சுவாசிப்பது போன்ற செயல்களை மிகவும் வேதனையடையச் செய்கிறது.

வாய்வழி செக்ஸ் மற்றும் தொண்டை புற்றுநோய் இடையே இணைப்பு
இப்போது, ஒரு ஆராய்ச்சி ஆய்வில் ஹெச்.வி.வி (மனித பாப்பிலோமா வைரஸ்) எனப்படும் வைரஸ் வாய்வழி செக்ஸ் மூலம் பரவக்கூடும் என்றும் இந்த வைரஸ் இறுதியில் தொண்டையில் புற்றுநோய் செல்கள் உருவாக வழிவகுக்கும் என்றும் தொண்டை புற்றுநோயை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது. வைரஸ் வாய் மற்றும் தொண்டையை நேரடியாக அடையும் என்பதால், அவரது / அவளது கூட்டாளருக்கு வாய்வழி செக்ஸ் செய்யும் நபருக்கு இது அதிகமாக ஏற்படலாம்.

முடிவு
எனவே, பாதுகாப்பான வாய்வழி உடலுறவை முயற்சி செய்வது மற்றும் இரு கூட்டாளர்களும் எந்தவொரு எஸ்.டி.டி அல்லது எஸ்.டி.ஐ எனப்படும் பாலியல் தொற்றுநோய்களுக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. தம்பதிகள் ஓரல் செக்ஸ் செய்ய முடிவு செய்தால், அவர்களின் அந்தரங்க பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொண்டு, பாதுகாப்பான வழியில் மேற்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications